Saturday, December 8, 2012

அலெக்சாண்டர்

கிரேக்க மன்னரான அலெக்சாண்டர்,உலகில் இதுவரை தோன்றிய மாவீரர்களில் தலைசிறந்தவராக போற்றப்படுகிறார். 20 வயதில் மன்னராகி, 32 வயதுக்குள் பல நாடுகளை வென்ற அலெக்சாண்டர், வரலாற்றில் அழியா இடம் பெற்றவர். கிரேக்கத்தில் மாசிடோனியா நாட்டை ஆண்டு வந்த பிலிப் என்ற மன்னரின் மகன் அலெக்சாண்டர், கி.மு 356 ஆம் ஆண்டில் பிறந்தார்.சிறுவயதிலேயே சிறந்த வீரராகத் திகழ்ந்தார்.குதிரை சவாரி செய்வதில் அவருக்கு எவரும்நிகரில்லை என்று புகழ் பெற்றார். கிரேக்க நாட்டின் மாபெரும்சிந்தனையாளர் சோக்கிரடிசின் சீடரான பிளேட்டோவின் சீடர் அரிஸ்டோட்டில்,அலெக்சாண்டரின் குருவாக அமர்த்தப்பட்டார்.அதனால அலேசாண்டர் வீரராக மட்டுமின்றி,சிறந்த ராஜதந்திரியாகவும்,நீதமானாகவும் உருவானார். பிலிப் மன்னர் ஒரு போரில் ஈடுபட்டிருந்த போது கொலை செய்யப்பட்டார்.அதைத்தொடர்ந்து அலேசாண்டர் மன்னரானார்.அப்போது அவருக்கு வயது 20 . அப்போது நாட்டின் வடபகுதியில் கலவரங்கள் நடந்து வந்தன.அவற்றை அலெக்சாண்டர் அடக்கினார்.கிரேக்கம் முழுவதும் அவர் ஆட்சியின் கீழ் வந்தது.கிரேக்க நாகரிகத்தை வெளிநாடுகளிலும் பரப்ப விரும்பிய அலெக்சாண்டர், பாரசீகத்தின் மீது படையெடுத்தார்.அவருடைய படையில் 20 ஆயிரம் காலாட்படையினரும், 5 ஆயிரம் குதிரை வீரர்களும் இருந்தனர்.யுத்தத்தில்.பாரசீக மன்னர் தோல்வி அடைந்தார்.சிறை பிடிக்கப்பட்ட அவருடைய தாயாரையும், மனைவியையும் அலெக்சாண்டர் கண்ணியத்துடன் நடத்தினார். அலெக்சாண்டர் - இந்தியா அந்த சமயத்தில் இந்தியாவில் சிந்து வெளிப்பகுதியை பல சிற்றரசர்கள் ஆண்டு வந்தனர்.அலெக்சாண்டர் கி.மு326 இல் சிந்து ஆற்றை கடந்து இந்தியாவுக்குள் நுழைந்தார். அலெக்சாண்டரின் போர்த்திறனை நன்கு அறிந்த தட்சசீல அரசன்,அவரை வரவேற்று நட்புக் கொண்டான்.ஆனால் புருஷோத்தமன் என்ற மன்னன் அலெக்சாண்டரை எதிர்த்தார்.ஜீலம் நதிக்கரையில் இரு படைகளும்மோதின.அதில் வழக்கம் போல அலெக்சாண்டர் வென்றார். தோல்வி அடைந்த புருஷோத்தமரை பார்த்து"நான் உங்களை எவ்வாறு நடத்தவேண்டுமென்று நினைக்கிறீகள்?"என்று அலெக்சாண்டர் கேட்டார்."என்னை ஓர் அரசனைப் போல நடத்த வேண்டும் என்று விரும்புகிறேன்"என்று புருஷோத்தமர் தைரியமாகப் பதில் அளித்தார்.அவருடைய வீரத்தை மெச்சிய அலெக்சாண்டர்,தான் கைப்பற்றிய நாட்டை புருஷோத்தமருக்கே திருப்பிகொடுத்துவிட்டார். அலெக்சாண்டர் - இறுதிக்காலம் மேலும் பல நாடுகளை வெல்ல வேண்டும் என்று அலெக்சாண்டர் விரும்பினார்.அனால் பல ஆண்டுகளாகப் போர் புரிந்துசலித்துப்போன போர் வீரர்கள்,தாய் நாட்டுக்குத் திரும்ப வேண்டும் என்று கோரி கலகத்தில் ஈடுபட்டனர்.இதனாற் அலெக்சாண்டர் வேறு வழியின்றி,கிரேக்கத்துக்குத் திரும்பி செல்ல முடிவு செய்தார்.போர் வீர்கள் பலர்தரை வழியாகவும்,சிலர் கடல்வழியாகவும் திரும்பிச்சென்றனர்.அலேசாண்டர் தரை மார்க்கமாகத் திரும்பிச் சென்ற போது,பாபிலோன் நகரில் விஷ ஜுரம் கண்டு மரணம் அடைந்தார்.அப்போது அவர்க்கு வயது 32

6 comments:

  1. போரில் புருஷோத்தமன் தோல்வி யுற்றதாகவும் அலெக்சாண்டர் திரும்பும் வழியில் நோயுற்று இறந்ததாகவும் மேற்கத்தியருக்கு சாதகமான சரித்திரத்தை திரித்து புனைந்திருகின்றனர் ! ஆதாரம்:https://www.facebook.com/Thamil.Siththars/photos/a.370335143059811.87676.239342366159090/1009961342430518/?type=3&theater

    ReplyDelete
  2. யானை படையைக் கண்டு பயந்து நம் வீரர்களால் காயப்பட்டு ஓடியவன் வரலாற்றை மாற்றிவிட்டனர்

    ReplyDelete
  3. யானை படையைக் கண்டு பயந்து நம் வீரர்களால் காயப்பட்டு ஓடியவன் வரலாற்றை மாற்றிவிட்டனர்

    ReplyDelete
  4. உலகையே வெல்ல நினைக்கும் இவன், மன்னன் புருசோத்தமனிடம் போரிட்டபின் ஏன் நாடு திரும்பவேண்டும்,எப்படி நோய்வாய் பட முடியும். மாற்றப்பட்ட வரலாறு

    ReplyDelete
  5. உலகையே வெல்ல நினைக்கும் இவன், மன்னன் புருசோத்தமனிடம் போரிட்டபின் ஏன் நாடு திரும்பவேண்டும்,எப்படி நோய்வாய் பட முடியும். மாற்றப்பட்ட வரலாறு

    ReplyDelete
  6. பாப்பான் அம்பி கடிதம் அனுப்பி அலெக்சாண்டரை இந்தியாவுக்கு வருமாறு அழைத்து வரச் செய்தான்...

    ReplyDelete