Tuesday, December 18, 2012
ஆபிரகாம் லிங்கன் 2
ஒரு தேசத்தின் தலைவர் எப்படிப்பட்டவராக இருத்தல் வேண்டும்; அவருடைய செயல்கள் எத்தகைய எளிமை மிக்கதாக இருத்தல் வேண்டும் என்பதற்கு ஆபிரகாம் லிங்கன் மிகச்சிறந்த சான்று.
லிங்கன் அமெரிக்க குடியரசுத் தலைவராக இருந்த போது அவருடைய காரை அவரே ஓட்டிச் செல்வது வழக்கம். ஒரு நாள் அமெரிக்க பாராளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஆபிரகாம் லிங்கன் காரை ஓட்டிச் சென்றார்.
வழயில் ஒரு பள்ளத்தில் விழுந்த ஒரு பன்றிக்குட்டி வெளியேற முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. அந்த வழியில் சென்ற எவரும் பள்ளத்தில் தவிக்கும் பன்றிக் குட்டியைப் பார்க்கவில்லை; பார்த்த சிலரும் அதுபற்றிக் கவலையில்லாமல் கடந்த சென்றனர்.
ஆனால் இதைக் கண்ட ஆபிரகாம்லிங்கனால் அந்த இடத்தைக் கடந்து செல்ல இயலவில்லை. தாம் ஓட்டி வந்த காரை சாலையின் ஓரத்தில் நிறுத்தி விட்டு, பள்ளத்தில் தவித்த பன்றிக் குட்டியைத் தூக்கிக் கரை ஏற்றினார். அதன் பின் பாராளுமன்றக் கூட்டத்திற்கு லிங்கன் பயணம் மேற்கொண்டார்.
ஆபிரகாம் லிங்கன் பாராளுமன்றத்திற்குள் நுழையும்போது பாராளுமன்றம் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. தாமதமாக வந்ததற்கு அனைவரும் என்னை மன்னிக்க வேண்டும்” என்று சொல்லியபடி பாராளுமன்றத்திற்குள் ஆபிரகாம் லிங்கன் நுழைந்தார்.
ஆபிரகாம் லிங்கன் ஆடை முழுவதும் சேறும் சகதியும் அப்பியிருந்தன….அதைக் கண்டு அனைவர் முகத்திலும் அதிர்ச்சி.. அதைப் புரிந்துகொண்ட ஆபிரகாம் லிங்கன் வழியில் நடந்ததை விவரித்தார். அதைக் கேட்ட அனைவரும் ஒரு ஐந்தறிவு ஜீவனான பன்றியைக் காப்பாற்றுவத்றாக ஆபிரகாம் லிங்கன் பாடுபட்டதைச் சொல்லிப் பாராட்டினார் அப்போது, ” ஒரு பன்றிக்குட்டியை நான் காப்பாற்றியதற்காக நீங்கள் என்னைப் பாராட்டுகிறீர்கள்…. ஆனால் இதில் என் சுயநலமும்அடங்கியிருக்கிறது” என்றார் ஆபிரகாம் லிங்கன்.
“இதில் என்ன சுயநலம் இருக்கிறது?” என்று அனைவரும் விழித்தனர்.
“பள்ளத்தில் தவித்த பன்றியைப் பார்த்து என் மனம் தவித்தது.. அந்தப் பன்றியைக் காப்பாற்றியதன்மூலம் என் மனம் நிம்மதி பெற்றது.. அதனால் என் மனம் சம்பந்தப்பட்ட விஷயமாகிறது.
அந்த நேரத்தில் அந்தப் பன்றியை நான் காப்பாற்றாமல் வந்திருந்தால், அந்த கவலையால் இந்தப் பாராளுமன்ற விவாதத்தில் என்னால் முழுமையாக ஈடுபட முடியாது போயிருக்கும்… அதன் பின் சாலையோரங்களில் எந்தப் பன்றியைப் பார்த்தாலும், பள்ளத்தில் தவித்த பன்றியின் காட்சியே என் கண்ணில் தெரியும்.
தக்க சமயத்தில் அந்தப் பன்றிக்கு உதவாமல் வந்து விட்டோமே என்று என் உள்மனம் உறுத்திக் கொண்டே இருக்கும்… அந்த வடு என் வாழ்நாள் முழுமையும் நீடிக்கும்… அத்தகைய சூழலிலிருந்து விடுபடுவதற்காகத்தான் அந்தப் பன்றியை நான் காப்பாற்றினேன். இதில் என்னைப் பாராட்டுவதற்கு ஒன்றுமே இல்லை” என்ற சொல்லிச் சிரித்தார்.”.
ஆம்! செய்த உதவிக்காக கிடைக்கின்ற பாராட்டுதலைக்கூட உதறித்தள்ளும் மனப் பக்குவத்தைக் கொண்டிருந்தார் ஆபிரகாம் லிங்கன்!
அடிமைத்தனத்தை எதிர்த்து ஆரம்ப காலத்திலிருந்து முழங்கி வந்த லிங்கன், குடியரசுத் தலைவர் ஆனதும் உள்நாட்டுக் களவரங்கள் ஏற்பட்டன.
‘அடிமைத்தனம் தொடர வேண்டும் அது ஆண்டவனால் தீர்மானிக்கப்பட்டது. அதை அகற்ற ஆபிரகாம் லிங்கன் யார்?’ என்று அடிமைத்தனத்தால் பயன் பெறுபவர்கள் தூண்டிவிட்டனர்.
அமெரிக்காவின் தெற்கில் உள்ள சில சில மாநிலங்கள் தனியே பிரிந்து செல்ல வேண்டும் என விரும்பின.
அடிமைத்தனத்தை கைவிடுவதைவிட, பிரிந்து செல்வதே பெருமை சேர்க்கும் என்று பிற்போக்குவாதிகள் முடிவெடுத்தனர். அதற்குண்டான காரண காரியங்கள விளக்கி, கலவரங்களையும் தூண்டி விட்டனர். உள்நாட்டு போர்மூண்டது.
இவற்றையெல்லாம் லிங்கன் முறியடித்து நாட்டின் ஒற்றுமயைக் காப்பாற்றினார். அடிமைத்தனத்தையும ஒழித்தார்.
‘மக்களால், மக்களுக்காக நடத்தப்படுவதே மக்களாட்சி, என்று மக்களாட்சிக்கு லிங்கன் விளக்கம் கொடுத்தார்.
லிங்கனின் சீர்திருத்தக் கருத்துக்களும், மக்களாட்சித் தத்துவமும், அடிமைத்தன ஒழிப்பும் அடித்தட்டு மக்களிடம் எழுச்சியை உண்டாக்கியது.
ஆனால், தங்கள் சுயநலம் எதிர்த்துக் குரல் கொடுத்துக் கொண்டே இருந்தனர்.
அமெரிக்க குடியரசில் அடிமைத்தனத்தை ஒழித்த முதல் குடியரசுத் தலைவர் என்ற பெருமைக்குரிய ஆபிரகாம் லிங்கனை 1868 – ல் ஒரு பைத்தியக்காரன் சுட்டுக் கொன்றான்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment