Tuesday, December 18, 2012
ஆன்மீகத் துறவி விவேகானந்த 2
அந்தக் கூட்டத்தில் ‘மெட்காப்’ நகர் மகளிர் மன்றத்தில் விவேகானந்தர் பேசிய போது மனதைப் பறிகொடுத்த அந்த இளம் பெண்ணும் இருந்தாள்.
இந்த மாநாட்டில் மீண்டும் செப்டம்பர் 15, 19, 20 ஆகியமூன்று நாட்கள் விவேகானந்தர் முழங்கினார்.அப்போது,
“அளவுக்கு மீறிய மதப்பற்று, மூடபக்தி இவற்றிலிருந்து தோன்றிய மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாகப் இறுகப் பற்றியுள்ளன; வன்முறையை நிரப்பியுள்ளன; அடுத்தடுத்து உலகை உதிரப் பெருக்கில் மூழ்கடித்து, நாகரீகத்தை அழித்து, எத்தனையோ சமுதாயங்களை நம்பிக்கை இழக்கச் செய்து விட்டன. அந்தப் பயங்கரப் பைசாக் கொடூரச் செயல்கள் தோன்றாதிருப்பின், மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பன்மடங்கு உயர் நிலைஎய்திருக்கும்” என்று விவேகானந்தர் முழங்கினார்.
விவேகானந்தர் பேசிவிட்டு வெளியில் வந்ததும் ஒரு பெரும் கூட்டம், அவரிடம் கையெழுத்துப் பெறுவதற்காகக் காத்திருந்தது…. அவற்றில் அந்தப் பெண்ணும் இருந்தாள்.. அந்தப் பெண் யார்?
மெட்காப் மகளிர் மன்றத்தில் விவேகானந்தர் பேசியதைக் கேட்டு, அவரைத் தனிமையில் சந்திக்க முயன்றாள். அது முடியாமல் போயிற்று!
சிகாகோவில் விவேகானந்தர் நான்கு நாட்கள் முழங்கிய போதும், வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு விவேகானந்தரைத் தனிமையில்சந்தித்து விட வேண்டும் என்று விரும்பினாள்; அப்போதும் அதற்கு வாய்ப்புக் கிட்டவில்லை!
அதன்பின் விவேகானந்தரின் மந்திரச் சொற்பொழிவைக் கேட்டு மயங்கிய அமெரிக்கர்கள், அயோவா, செயிண்ட் லூயிஸ், கேம்பிரிட்ஜ், வாஷிங்டன், நியூயார்க் ஆகிய இடங்களில் எல்லாம் விவேகானந்தரைப் பேச வைத்து மகிழ்ந்தனர்.
அத்தனை இடங்களுக்கும் அந்தப் பெண் வந்தாள்; விவேகானந்தரின் முழக்கத்தைக் கேட்டாள்; அப்போதும் அவளுக்கு விவேகானந்தரைத் தனியாகச் சந்திக்கும் வாய்ப்பு வாய்க்கவில்லை.
‘செயின்ட் லாரன்ஸ்’ என்ற நகரில் உள்ள தீவுப் பூங்காவில் விவேகானந்தர் ஐம்பது நாட்கள் ஓய்வெடுத்தார் அப்போதும அந்தப் பெண் அந்தத் தீவுப்பூங்காவிற்கு ஒவ்வொரு நாளும் வந்தாள். இருப்பினும் விவேகானந்தரைஅவளால் தனிமையில் சந்திக்க இயலவில்லை.
விவேகானந்தர் அமெரிக்காவில் இருந்தபோதேஅவருடைய சொற்பொழிவுகள் நூல்வடிவம் பெற்று அமெரிக்க மக்களிடத்தில் மகத்தான வரவேற்பைப் பெற்றன.
அந்தப் புத்தகங்களைக் கையில் ஏந்தியபடி விவேகானந்தர் தங்கியிருக்கும் இடத்திற்குச்சென்று தனிமையில் அவரைச்சந்திக்கஅந்தப் பெண் முயன்றாள். இருப்பினும் அவளுடைய முயற்சி பயன் தரவில்லை!
அமெரிக்காவிலிருந்து விவேகானந்தர் பாரீசுக்கு புறப்பட்டார். அமெரிக்க விமானத்தளத்தில் வைத்து ந்தப் பெண் விவேகானந்தரை மடக்கி விட்டாள்!
“தங்களிடம் கொஞ்சம் தனியாகப் பேச வேண்டும்” என்றாள்.
கூட்டத்திலிருந்து விலகியவிவேகானந்தர், “சொல்லு! தாயே! என்றார்.
அந்தப் பெண்ணுக்கோ இருபது வயது இருக்கும்…
அப்போது விவேகானந்தருக்குமுப்பது வயது…
அந்தப்பெண்ணோ நவ நாகரீக மங்கை…
விவேகானந்தரோ முற்றும் துறந்த முனிவர்…
எதற்காக விவேகானந்தரை விரட்டி விரட்டி அந்தப் பெண் பின் தொடர்கிறாள்?
மீண்டும், “சொல்லு தாயே!” என்றார் விவேகானந்தர்.
“நான் மெட்காப் நகரில் நடந்த மகளிர் மாநாட்டில் இருந்து உங்களைக் கவனித்து வருகிறேன்.. தனிமையில் சந்தித்துப் பேச பலமுறை மயன்றும் முடியாமல் போயிற்று.. இனியும் காலம் தாழ்த்தினால் காரியம் கெட்டுவிடும் என்பதனால் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டேன்.
அமெரிக்க இளைஞர் பலர் என் அழகில் மயங்கி, என்னை அன்றாடம் சுற்றி வருகின்றனர. ஆனால் நான் உங்கள் அறிவில் மயங்கி உங்களைச்சுற்றி வருகிறேன்..” என்று தயங்கினாள்.
“அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் தாயே” என்றார் விவேகானந்தர்.
“என்னுடைய அழகும் உங்களுடைய அறிவும் சேர்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். நாம் திருமணம் செய்து கொண்டால் எனது அழகோடும் உங்கள் அறிவோடும் நமக்கு குழந்தை பிறக்கும்.. அதற்காகத்தான் நான் உங்களிடம் தனியாகப் பேசுவதற்கு அலைந்து கொண்டிருந்தேன்” என்றாள் அந்தப் பெண்!
“தாயே! எனக்கு முப்பது வயது! உனக்கோ சுமார் இருபது வயது இருக்கலாம். நாம் திருமணம் செய்து, நமக்குக் குழந்தை பிறந்து,அந்தக் குழந்தை வளர்ந்து, இருபது வயதைத் தொடுகின்றபோதுதான் அந்தக்குழந்தை அறிவு மிக்கதா? இல்லையா? என்பது தெரியும்.அதற்குப் பதிலாக நீ என்னையே மகனாக ஏற்றுக் கொள்ளலாமே!” என்றார் விவேகானந்தர்.
இந்தப் பதிலைக் கேட்டு அந்தப் பெண் விக்கித்துவிட்டாள்.
ஆம்! காணுகின்ற பெண்களை எல்லாம் தாயாக்க் கருதியவர் விவேகானந்தர் என்பது அப்போதுதான் அந்தப் பெண்ணிற்குப் புரிந்தது!
1893-ல் விவேகானந்தர் சொன்ன கருத்துக்கள் இப்போதும் நினைவுபடுத்த வேண்டிய நிலையில்தான் உலகமும், இந்தியாவும், தமிழகமும் இருக்கிறது.
சிகாகோவிலிருந்து உலகில் பல நாடுகளுக்கு விவேகானந்தர் சுற்றுப் பயணம் செய்துவிட்டு, 1897 ஜனவரியில் இராமேஸ்வரத்தில் உள்ள குந்தக்கல்லுக்கு வந்தார்.அவர் வருவதை அறிந்த இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி குந்தக்கல் வந்து காத்திருந்தார்.
கப்பலில் வந்து இறங்கிய விவேகானந்தர் தம் பாதங்களை முதன்முதலில் தம் தலையில் வைத்து விட்டுத்தான் மண் மீது பட வேண்டும் என்றார் மன்னர். ஆனால் மனித நேயம் கொண்ட விவேகானந்தர் அதற்கு இணங்கவில்லை.
உலக முழுவதும் இந்தியாவின் சிறப்பையும், இந்து மத்ததன் மேம்னைய முழங்கி வந்த விவேகானந்தர் 1902 ஜூலை 4 அன்று மறைந்தார்.
கன்னியாகுமரியில் விவேகானந்தர் தியானம் செய்த இடம் ‘விவேகானந்தர் பாறை’ என்று அழைக்கப்படுகிறது.
சிகாகோவில் பேசிவிட்டு விவேகானந்தர் முதன் முதலில் தமிழகத்தில் வந்த இறங்கினார். அதுவும் எந்த மன்னர் தமது அமெரிக்கப் பயணத்திறகுக் காரணமாக இருந்தாரோ, அந்த மன்னர் வாழுகின்ற இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமேஸ்வரத்தில்தான் விவேகானந்தர் இறங்கினார்.
விவேகானந்தர் ஒரு காலைப் பதித்து மற்றொரு காலை மண்ணில் வைத்த அந்த இடம் இன்றும் ‘குந்துக்கால்’ என்று அழைக்கப்படுகிறது.
சென்னையில் விவேகானந்தர் தங்கிய இடம் ‘விவேகானந்தர்இல்ல’மாகக் காட்சியளிக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment