Saturday, December 8, 2012
நெப்போலியன் 1
உலக வரலாற்றில் வீரசாகசம் செய்த மாவீரர்களில் பிரான்சு நாட்டின் நெப்போலியனுக்கு தனி சிறப்பிடம் உண்டு.1769 ஆம் ஆண்டு கார்சிகா தீவில் ஒரு வழக்கறிஞரின் மகனாக நெப்போலியன் பிறந்தார்.கட்டையான உருவம் சிறிய கண்கள், அளவுக்கு மீறிய நீண்ட காதுகள் உடையவராக காணப்பட்டார்.பள்ளிப் பருவத்தில் மொத்தமாக 58 மாணவர்களை கொண்ட வகுப்பில்42 ஆவது மாணவனாக இருந்தான்.படிப்பை முடித்த பின் இராணுவத்தில் சேர்ந்தான்.
1785 ஆம் ஆண்டில் இராணுவ துணைத்தலைவன் ஆனான். நாட்டில் கலவரங்கள் நடைபெறும் போது அவற்றை அடக்குவதில் தன் திறமையை காட்டினான்.அதனால் அரசின் நன் மதிப்பை பெற்றான். 1796இல் ஆஸ்திரியாவுக்கு சொந்தமான் இத்தாலிய பகுதிகளை பிடிப்பதற்கு அனுப்பப்பட்டார்.வீரம்,ராஜதந்திரங்கள்,புதிய போர் முறைகள்,இவற்றினால் சென்ற இடமெல்லாம் வெற்றி வாகை சூடினான். நெப்போலியனுக்கு ஆஸ்திரியா பணிந்தது. பிரெஞ்சு நாட்டு மக்களின் உள்ளம் கவர்ந்தார் நெப்போலியன்.
நெப்போலியனின் பார்வை இங்கிலாந்து நாட்டை நோக்கிதிரும்பியது. கீழத்தேய நாடுகளுடன் இங்கிலாந்து கொண்டிருந்த வியாபார தொடர்புகளை துண்டிக்கும் நோக்குடன் எகிப்து மீது படைஎடுத்தான்.ஆனால் 1798 இல் நைல் நதிக்கரையில் நடந்த போரில் பிரிட்டிஷ் கடற்ப்படை தலைவனான நெல்சன்நெப்போலியன் படைகளை தோற்கடித்தான். அதனால் கிழக்கு நாடுகளை பிடிக்க நெப்போலியன் செய்த முயற்சிதோல்வியடைந்தது.
இதற்கிடையில் பிரான்சில் அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டன. நெப்போலியன் அங்கு சென்று ஆட்சியை கவிழ்த்து விட்டு புதிய ஆட்சி அமைப்பை ஏற்படுத்தினான்.அதன் படி கான்ஸல் என்ற பட்டத்துடன் பல அதிகாரங்கள் நெப்போலியன் கைக்கு வந்தன .
ஆலோசனை குழுக்களும் சட்ட சபைகளும் அமைக்கப்பட்ட போதிலும் உண்மையான அதிகாரங்கள் நெப்போலியனிடம் இருந்தன. பிரெஞ்சு புரட்சியினால் மக்கள் சோர்ந்து போயிருந்தனர்.அதன் காரணமாக நெப்போலியன் மூலமாக நல் ஆட்சி கிடைக்கும் என்று கருதி அவரை ஆதரித்தனர்.மக்கள் ஆதரவுடன் 1804 இல் நெப்போலியன் பிரெஞ்சு நாட்டின் சக்கவர்த்தியானான்.அது முதல் 1815 வரை ஐரோப்பாவின் சரித்திரத்தை நெப்போலியன் தான் எழுதினார் என்று கூறலாம். நிர்வாகத்தில் பல சீர்திருத்தங்கள் செய்தான்.
குழப்பத்தோடு இருந்த சட்டங்கள் தெளிவுபடுத்தப்பட்டன.நெப்போலியனின் நிர்வாக சீர்திருத்தங்களால் பிரான்ஸ் மட்டுமன்றி மற்ற ஐரோப்பிய நாடுகளும் பயனடைந்தன.ஆனால் நெப்போலியன் மேலும் மேலும்தன் ராஜ்ஜியத்தை விரிவுபடுத்த விரும்பினார். முக்கியமாக பிரிட்டனை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர திட்டமிட்டான்.நெப்போலியனின் போக்கை நன்கு அறிந்த பிரிட்டன் ஆஸ்திரியா,ரஷ்யா,பிரஷ்ஹியாஆகிய நாடுகளுடைய ஒத்துழைப்புடன் தன்னை பலப்படுத்திக்கொண்டது .
1805 இல் ஸ்பெயின் நாட்டின் துணையுடன் பிரிட்டன் மீது நெப்போலியன் படைஎடுத்தான்.ஆனால் ட்ரபாலகர் என்ற இடத்தில் நடந்த போரில் நெப்போலியன் படையை ஆங்கிலேய தளபதி நெல்சன் தோற்க்கடித்தான்.ஆயினும் இந்திலாந்து நாட்டின் நேச நாடுகளான் ஆஸ்திரியா,ரஷ்யா,பிரஷ்யா ஆகிய நாடுகளை நெப்போலியன் கைப்பற்றினான்.1806 இல் நெப்போலியன் ஈடு இணையற்ற சக்கரவர்த்தியாக விளங்கினான்.
எனினும் பிரிட்டனை தோற்க்கடிக்க வேண்டும் என்ற ஆவேசம் அவர் தூக்கத்தை விரட்டிக்கொண்டிருந்தது. தன் ஆதிக்கத்தில் உள்ள ஐரோப்பிய நாடுகள் பிரிட்டனுடன் வர்த்தக உறவுகொள்ளக்கூடாது என உத்தரவிட்டார்.இந்த உத்தரவினால் பிரிட்டன் பாதிப்படையவில்லை.ஐரோப்பியநாடுகள் தான் பாதிப்படைந்தன. ஸ்பெயின்,போர்த்துக்கல் ஆகிய நாடுகளை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர நெப்போலியன்செய்த முயற்சிகள் அந்த நாடுகளில் நெப்போலியனுக்குஎதிர்ப்பை உண்டாக்கின.ஸ்பெயின் நாட்டின் சில பகுதிகளில் நெப்போலியன் படைகள் தோற்றன .1812 இல் ரஷ்யா மீது நெப்போலியன் படைஎடுத்தான்.அந்நாட்டில் குளிர்காலம் தொடங்கியிருந்ததால் நெப்போலியன் படைகள் பெரும்சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டது.
ரஷ்யாவுக்கு சென்ற 450 ,000பிரான்ஸ் நாட்டு வீரர்களில் வெறும் 20 ,000 பேரே உயிருடன் திரும்பினர்.அந்த பெரும் தோல்வி நெப்போலியன் ஆட்ச்சியை ஆட்டம் காண செய்தது . பல ஐரோப்பிய நாடுகள் நெப்போலியனை எதிர்க்க முடிவு செய்தன.இங்கிலாந்து ஆஸ்திரியா, ரஷ்யா, பிரஷ்யா ஆகிய நாடுகள் பிரான்ஸ் மீது படையெடுத்தன .1814 இல்நடந்த போரில் நெப்போலியன் தோற்க்கடிக்கப்பட்டு எல்பாதீவுக்கு நாடுகடத்தப்பட்டான்.ஆனால் சில நாட்களில் அங்கிருந்துதப்பி வந்து மறுபடியும் படைகளை திரட்டி போருக்கு தயாரானான் .
1815 இல் வாட்டர்லூ என்ற இடத்தில் நெப்போலியன் படைகளும்,நெல்சன் தலைமையில் பிரிட்டிஷ் படைகளும் சந்தித்தன.கடும் போர் இடம்பெற்றது.நெப்போலியனின்துணை தளபதி படைகளுடன் வந்து சேர ஏற்பட்ட தாமதம் காரணமாகவே நெப்போலியன் தோல்வியடைந்தான்.பாரிஸ் நகருக்கு திரும்பி சென்ற நெப்போலியன் ஆட்சிமன்ற குழுவினருடன் ஆலோசனை நடத்தினான்.நெப்போலியன் பதவி விலகினால் தான் பிரிட்டிஷ் கோபத்தை தணிக்கமுடியும் என சிலர் கருத்து தெரிவித்தனர். அதனால் நெப்போலியன் பதவி விலகினார். போசிடி என்பவன் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது. மாறுவேடத்தில் அமெரிக்காவுக்கு தப்பி செல்லும் படி நெப்போலியனுக்கு சிலர் யோசனை தெரிவித்தனர்.ஆனால் மாறுவேடத்தில் தப்பி செல்லநெப்போலியன் மறுத்துவிட்டான்.
புதிதாக பதவியேற்ற போசிடி எப்படியாவது நெப்போலியனை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டுமென திட்டம் தீட்டினான்.அவன் வகுத்த திட்டத்தின் படி நெப்போலியன் கப்பலில் புறபட்டான்.கப்பல் பிளிமத் என்ற துறைமுகத்தை அடைந்ததும். இங்கிலாந்து இராணுவத்தினர் அவரை கைது செய்தனர்.நெப்போலியனுக்கு மரண தண்டனை விதிப்பதா?அல்லது ஆயுள் காலம் முழுவதும் காவலில் வைப்பதா என்று இங்கிலாந்துஅரசு யோசித்தது.இறுதியில் ஐரோப்பாவில் இருந்து 10,000 கி மீட்டர் தூரத்தில் உள்ள ஹெலீனா என்ற தீவில் சிறை வைக்க தீர்மானித்தது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment