Saturday, December 8, 2012

ஹிட்லர் 1

ஹிட்லரின் இளமைக்காலம்: இரண்டாம் உலகப்போர் மூள்வதற்கும் அதன் மூலம் 20 கோடி பேருக்கு மேல் மரணமடைவதற்கும் காரணமாக இருந்த ஜேர்மனிய சர்வதிகாரி ஹிட்லரின் வாழ்க்கை பல திருப்பங்களும் திடுக்கிடும் சம்பவங்களும்நிறைந்ததாகும். வட ஆஸ்திரியாவில்(Braunau am Inn) உள்ள பிரானோ என்ற ஊரில் 1889 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் திகதி பிறந்தார்.இவருடைய தந்தையின் பெயர் அலாயிஸ் சிக்கில் கிராப்பர் ஹிட்லர்(Alois Hitler ).இவர் சுங்க திணைக்களத்தின் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். அவரின் மூன்றாவது மனைவியின் நான்காவது மகன் ஹிட்லர். பிறந்தது முதலே ஹிட்லர் நோயுற்றவராக இருந்தார்.அடிக்கடி காய்ச்சல் வரும். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு தான் உடம்பு தேறியது. ஹிட்லருக்கு தாயிடம் செல்லம் அதிகம்.தாய் மீது மிகுந்த பக்தியும் பாசமும்கொண்டவர்.பாடசாலையில் படிக்கும் போது ஹிட்லர் தான் வகுப்பின் முதல் மாணவன். பிறகு அவருக்கு படிப்பில் ஆர்வம் குறைந்தது.படம் வரைவதில் ஆர்வம் ஏற்பட்டது.விரைவிலே அழகான ஓவியங்கள் வரையும் ஆற்றலை பெற்றார்.மாணவப்பருவத்திலேயே நிறைய நாவல்கள் படித்தார். போர்கள் பற்றிய கதைகள் என்றால் நாட்டம் அதிகம். 1903 இல் ஹிட்லரின் தந்தை இறந்தார். தந்தையின் கண்டிப்பு இல்லாமல் வளர்ந்த ஹிட்லர் நாளுக்கு நாள் முரடனாக மாறினான் . மாணவர்,ஆசிரியருடன் சண்டை பிடிப்பார்.தனது 17 ஆவது வயதில் கல்லூரி இறுதி தேர்வில் தேறினார் ஹிட்லர்.அதற்காக கொடுத்த சான்றிதழை வாங்கிக்கொண்டு வரும் வழியில் நண்பர்களோடுசேர்ந்து மது அருந்தினார்.சான்றிதழையும்கிழித்து எறிந்தார். 1907 ஆம் ஆண்டில் ஓவியக்கல்லூரியில் சேர முயன்றார்,அதில் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை.அந்த ஆண்டின் இறுதியில் ஹிட்லரின் தாயார் இறந்துபோனார்.அதன் பின்பு ஓவியங்களை தயாரித்து வாழ்க்கை நடத்தினார்.இரவில் கூட மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் கூட ஓவியங்களை வரைவார்.இவர் வரைந்த ஓவியங்கள் நல்ல விலைக்கு விற்பனையாகின.அதனால் சொந்தமாக ஓவியக்கூடம் அமைத்தார்.இச் சமயத்தில் சிந்தியா என்ற பெண்ணை ஹிட்லர் காதலித்தார்.காதல் தோல்வியடையவே இராணுவத்தில்சேர்ந்தார்.முதலாம் உலகப்போரின் போது ஜேர்மனி இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார்.

No comments:

Post a Comment