Saturday, December 8, 2012
நெப்போலியன் 2
நெப்போலியனின் சிறை வாழ்க்கை:
1815 ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி கப்பலில் ஹெலீனா தீவுக்கு நெப்போலியன் கொண்டு போகபட்டான்.புத்தகங்களை படிப்பதில் தன் நேரத்தை செலவிட்டார்.முன்பு தங்க தட்டில் சாப்பிட்டவர் பின்னர் பீங்கான் தட்டில் சாப்பிட்டார் .ஆரம்பத்தில் நெப்போலியனுக்கு செய்துகொடுக்கபட்ட வசதிகள்குறைக்கபட்டன.சுகாதார வசதிகள் இல்லாத அறையில் அவர் இருந்தார்.எலிகள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் இரவில் தூக்கம் இன்றி தவித்தார்.
நாளுக்கு நாள் அவரது உடல் நலம் சீர்கெட்டது.தனக்கு மரணம் நெருங்குகிறது என்பதை உணர்ந்து கொண்டு தனது மரண சாசனத்தை எழுதினார்."நான் இறந்த பின்என் உடலை சேன் நதிக்கரையில் புதைக்க வேண்டும் .என் மகனையும் மனைவியையும் பகைவரிடம் இருந்து காப்பாற்ற வேண்டும். இறந்துவிட்ட என் நண்பர்களின் குடும்பத்தினருக்கும் உயிரோடு இருக்கும் நண்பர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் " என்பதே அவருடைய மரண சாசனம்.
நெப்போலியனின் மரணம்:
நெப்போலியனின் உடல் நிலை மோசமடைந்தது. 1821 மே 15 ஆம் திகதி தனது 52 ஆவது வயதில் மரணமடைந்தார்.அவர் உடலை பிரான்சிற்கு கொண்டு செல்ல அனுமதி கிடைக்கவில்லை .ஹெலேனா தீவிலேயே இராணுவ மரியாதையுடன் அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.நெப்போலியனின் மரணத்துக்கு காரணம் என்ன என்பது பற்றி மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. இரப்பையில் இடம்பெற்ற புற்று நோய் காரணமாக அவர் இறந்ததாக வைத்தியர்கள் கொடுத்த சான்றுதல்களில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் மெல்ல மெல்ல கொல்லக்கூடிய விஷத்தை உணவில் கலந்து அவரை கொன்றிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.நெப்போலியனின் மனைவியின் பெயர் யோசப்பின்(Josephine).இவருடைய முதல் கணவரின் பெயர் அலெக்சாண்டர் போகர்னே. யோசப்பின்னுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன.பிரெஞ்சு புரட்ச்சியின் போது போர்கனின் மரணமடைந்தார்.அதன் பின் நெப்போலியன் அவளை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
ஜோசப்பின் மீது நெப்போலியன் உயிரையே வைத்திருந்தான்.போருக்கு போனாலும் அவளுக்கு தவறாது கடிதம் எழுதுவான்.இவ்வாறு உயிருக்குயிராக காதலித்தவள் தனக்கு ஒரு குழந்தையை பெற்று தரவில்லைஎன்பதற்காக அவளை விவாகரத்துக்கு செய்தான்.என்றாலும் அவளுக்கு மாளிகை ஒன்றை கொடுத்து அங்கு வசிக்க செய்தான்.வாரிசு வேண்டும் என்பதற்காக ஆஸ்திரிய மன்னனின் மகள் லூசியாவை(Marie-Louise) 1810ஏப்ரலில் மறுமணம் செய்தார்.
இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.யோசப்பினை விவாகரத்து செய்த போதிலும்அவள் மீது நெப்போலியன் அளவற்ற அன்பு கொண்டிருந்தார்.இறுதி மூச்சை நிறுத்தும் அவர் உதடுகள் பிரான்ஸ் யோசப்பின் என்று தான் முணுமுணுத்தன. நெப்போலியனுக்கு சில அபூர்வ ஆற்றல்கள் இருந்தன.இரவில் சில நிமிடங்கள் தான் தூங்குவார்.பகலில் அவ்வப்போது தூங்குவார்.குதிரை சவாரி செய்யும் போது கூட சிறிது தூங்குவார்.என்றாலும் மிகுந்த எச்சரிக்கையோடு இருப்பார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment