Saturday, December 8, 2012

ஹிட்லர் 2

ஹிட்லரின் இராணுவப் பிரவேசமும், வெற்றியும்: 1918 இல் ஜேர்மனி தோற்றது.இத் தோல்விக்கு ஜனநாயகவாதிகளும் யூதர்களும் தான் காரணம் என்று ஹிடலர் நினைத்தார்.உலகில் ஜெர்மானியரே உயர்ந்த இனத்தவர்.உலகம் முழுவதையும் ஜேர்மனிய ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என விரும்பினார்.ஹிட்லர் பேச்சு வல்லமை மிக்கவர்.தேசிய சோசலிஸ்ட் ஜெர்மன் தொழிலாளர் கட்சியில் ஒரு உறுப்பினராகசேர்ந்து தனது பேச்சு வல்லமையால் விரைவிலே கட்சித் தலைவரானார். அரசாங்கத்தின் நிர்வாக திறமை இன்மையால் தான் நாட்டில் வறுமை வேலையின்மைபெருகிவிட்டதாக பிரச்சாரம்செய்தார்.அரசாங்கத்துக்கு எதிராக மக்களை தூண்டிவிட்டு ஆட்சியை கைப்பற்ற முயன்றார்.ஆனால் அந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.அரசாங்கம் அவரை கைது செய்து 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.பின்பு அது ஓராண்டு தண்டனையாக குறைக்கப்பட்டது.சிறையிலிருந்த போது "எனது போராட்டம்"என்ற பெயரில் தன் சுயசரிதையை எழுதினார். 1928 இல் நடந்த தேர்தலில் ஹிட்லரின் கட்சி தோல்வியடைந்தது.ஆனால் ஹிட்லர் சோர்ந்து போய்விடவில்லை.தன்னுடைய கட்சியின் பெயரை"நாசி"கட்சி என்று மாற்றி நாடுமுழுவதும் தீவிரவாதத்தில் ஈடுபட்டார்.அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் புரட்சிக்கு வழிவகுத்தார். இவருடைய இடைவிடாத உழைப்பும் பேச்சுத் திறனும் இராஜ தந்திரமும் வெற்றி பெற்றன.ஆட்சிக்கு எதிராக மக்ககள் கிளர்ந்தெழுந்து பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பாராளுமன்ற கட்டடம் கொளுத்தப்பட்டது.ஜனாதிபதியாக இருந்த ஹில்டன் பேர்க் மக்கள் போராட்டத்துக்கு அடிபணிந்தார்.1933 ஜனவரி 30ஆம் திகதி ஹிட்லரை பிரதமராக நியமித்தார்.பிரதமராக இவர் பதவி ஏற்ற ஒன்றரை வருடத்தில் ஜனாதிபதி ஹில்டன் பேர்க் மரணமடைந்தார். அதனால் ஜனாதிபதி பதவியையும் கைப்பற்றிக்கொண்டு ஜேர்மனின் சர்வாதிகாரியானார்.பாராளுமன்றத்தை கலைத்தார்,இராணுவ திணைக்களத்தினையும்,இராணுவதளபதி பதவியினையும் தானே ஏற்றுக்கொண்டார்.அரசியல் கட்சிகள் எல்லாவற்றையும் தடை செய்தார்.இனிமேல் ஜெர்மனியில் ஜனநாயகம் என்றபேச்சுக்கே இடமில்லை என அறிவித்தார். யூதர்களை அடியோடு அழிக்க வேண்டும் என முடிவு செய்து ஒரு பாவமும் அறியாத யூதர்களை கைது செய்து சிறையில் பட்டினி போட்டு சித்திரவதை செய்து கொன்றான்.தினமும் சராசரியாக 6000 - 10000 பேர் வரை விஷப் புகையிட்டு கொல்லப்பட்டனர்.ஹிட்லரால் கொல்லப்பட்ட யூதர்களின் எண்ணிக்கை சுமார் ஐம்பது லட்சம் ஆகும்.1939 அல்பேனியா,செக்கொச்லோவக்கியா ஆகிய நாடுகளை கைப்பற்றிக்கொண்டு போலந்துநாட்டின் மீது படைஎடுத்தான். இதனால் இரண்டாம் உலக யுத்தம் ஆரம்பமாகியது.யுத்தத்தின் ஆரம்பத்தில் ஹிட்லரின் கை ஓங்கியிருந்தது.ஆனால் போரில் அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்த பின்பு நிலைமை மாறியது.ஜேர்மனி தலைநகரான பெர்லினில் ஒரு சுரங்கம் அமைத்து தங்கியிருந்தார்.இச் சுரங்கத்தில் தான் ஹிட்லரின் அலுவலகமும் படுக்கை அறையும் இருந்தது.ஹிட்லரின் அறை 15 அடி நீளமும் 10 அடி அகலமும்கொண்டது.1945 ஏப்ரலின் பின்பெர்லின் நகரின் மீது ரஷ்ய விமானங்கள் குண்டுகளை வீசின.ஹிட்லர் தங்கியிருந்த பாதாள சுரங்கத்தின் அருகிலும் குண்டுகள் விழுந்தன.ஈவா பிரவுன் என்ற பெண் 1930 ஆம்ஆண்டு முதல் ஹிட்லர் உடைய மனம் கவர்ந்த காதலியாக இருந்து வந்தார்

No comments:

Post a Comment