Tuesday, December 18, 2012
ஆன்மீகத் துறவி விவேகானந்த 1
“ஒருவன் சில பரீட்சைகளில் தேர்வு பெற்று, சொற்பொழிவுசெய்யும் திறன் உள்ளவனாக இருந்தால்தான், அம்மனிதனைப் படித்தவன் என்று கருதுவீர்களா? வாழ்க்கையில் ஏற்படும் போராட்டங்களிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ளும் தகுதியைப் பெறுவதில் பாமர மகளுக்கு உதவி புரியாத கல்வியை, அவர்களது குணநலன்களைக் கட்டி வளர்க்காத கல்வியை, அதே போல் அம்மக்களிடம் ஈகைக் குணத்தையும், சிங்கத்திற்குள்ளது போன்றதைரியத்தையும் ஊட்டி வளர்க்காத கல்வியை, கல்வி என்று சொல்வதில் அர்த்தம் இருக்கிறதா? எவனொருவன் தன் அறிவைக் கொண்டே தன்னைக் காத்துக் கொள்ளத் திறன் உடையவனோ, அவனே உண்மையான கல்வியை அடைந்தவனாவான்.”
இப்படி ஒரு காவியுடை அணிந்த ஒரு சாமியார் சொன்னார் என்றால் பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் உண்மையில் இதைவிட வேகமான, விவேகமான கருத்துக்களைச் சொல்லிச் சென்றிருக்கிறார் விவேகானந்தர்.
‘செங்காவிச் சிங்கம்’ என்று சொல்லும் அளவுக்கு விவேகானந்தரின் சிந்தனைகள் கொட்டிக் கிடக்கின்றன.
இந்து மத மேன்மை, இந்தியாவின் வலிமை, மூடத்தனத்தின் ஒழிப்பு, பகுத்தறிவின் தேவை, மெய்யான கல்வியாளர்கள், ஏழைகளின் நிலைமை என பல்வேறு பொருள்கள் பற்றி விவேகானந்தர் கூறிய கருத்துகள் மனித குல வளர்ச்சிக்கு மாமருந்தாகும்.
விசுவநாதர் – புவனேஸ்வரி தம்பதிக்கு 1863 ஜனவரி 12 அன்று பிறந்த விவேகானந்தரின் இயற்பெயர்நரேந்திரநாதர்.
சிறு வயதிலிருந்தே எது பற்றியும் ஆய்ந்து அறிகின்ற போக்கு நரேந்திர நாதருக்கு இருந்தது. ராமகிருஷ்ணரின் சீடராகச் சேர்ந்தார் நரேந்திரர். மற்ற சீடர்களிலிருந்து வேறுபட்டு விவேகமிக்கவராகநரேந்தர் திகழ்ந்தார். அதனால் நரேந்திர நாதருக்கு ‘விவேகானந்தர்’ என்று ராமகிருஷ்ணர் பெயர் சூட்டினார். இந்தப் பெயரே நிலை பெற்றுவிட்டது.
1885 ஆம் ஆண்டு ராமகிருஷ்ணர் மறைந்ததும், விவேகானந்தர் யாத்திரையை மேற்கொண்டார். காசி, லக்னோ,ஆக்ரா, பிருந்தாவனம், ஹத்ராஸ், ரிஷிகேஷ், பிரானாகோர் ஆகிய இடங்களுக்குச் சென்றார்.
மற்றொரு முறை விவேகானந்தர் யாத்திரை புறப்பட்ட போது ராமேஸ்வரத்திற்கு வந்தார்.இந்த யாத்திரைதான் விவேகானந்தரின் அறிவாற்றலை வெளிப்படுத்துவதற்கும், உலக மேதைகள் இந்திய தேசத்தின் வலிமையைப் புரிந்து கொள்வதற்கும், இந்து மத்த்தின் மேன்மையை உலக மதவாதிகள் தெரிந்து கொள்வதற்கும் காரணமாயின.
அப்போது இராமநாதபுரம் மன்னராக இருந்தவர் பாஸ்கர சேதுபதி. இவர் ஆன்மீகத்தில் அறிவாற்றல் மிக்கவராகவும் சொறபொழிவு நிகழ்த்துவதில் வல்லவராகவும் திகழ்ந்தார்.அதனால் அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் நடக்க இருந்த உலக ஆன்மீக மாநாட்டில், இந்து மதத்தின் பிரதிநிதியாகக் கலந்து கொள்ள மன்னருக்கு அழைப்பு வந்தது.
இந்த அழைப்பு மன்னருக்கு வந்த வேலையில்தான் விவேகானந்தர் இராமநாதபுரம் வந்திருந்தார். விவேகானந்தருக்கும் மன்னருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. அறிமுகம் நட்பாக மாறியது. நட்பு விவேகானந்தரிடம் மன்னரை பக்தி செலுத்த வைத்தது.
விவேகானந்தர் அறிவாற்றலும், ஆன்மீகச் சிந்தனையும் தெளிந்த பார்வையும், தேர்ந்த ஞானமும் மன்னரை வியக்க வைத்தது. அதனால் தம்மைவிடச் சிறந்தவரான விவேகானந்தர் சிகோகோ செல்வதே சிறந்தது என்று மன்னர் முடிவு செய்தார். முடிவை விவேகானந்தரிடம் தெரிவித்தார். யோசித்துச் சொல்வதாகச் சொல்லிவிட்டு விவேகானந்தர் மன்னரிடம் விடைபெற்றார்.
அதன்பின் தாம் அமெரிக்கா செல்வதாக விவேகானந்தர் சென்னையிலிருந்து அறிவித்தார். அதையறிந்த இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி, விவேகானந்தர் அமெரிக்கா செல்வதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்தார்.
1893 மே 31 அன்று அமெரிக்கா புறப்பட்ட விவேகானந்தர், ஜூலை மாதத்தில் அமெரிக்காவில் உள்ள சிகாகோவை அடைந்தார்.
உலக ஆன்மீக மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன் ‘மெட்காப்’ என்ற நகரில் மகளிர் மன்றக் கூட்டத்தில் ‘இந்தியப் பெண்கள்’ என்ற தலைப்பில் விவேகானந்தருக்குப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. இதுதான் அமெரிக்க மண்ணில் ஒலித்த விவேகானந்தரின் முதல் முழக்கமாகும்.
பெண்கள் நிறைந்த அந்த மாநாட்டில் விவேகானந்தரின் முழக்கம் எழுச்சியோடு வரவேற்கப்பட்டது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஒரு இளம் பெண் விவேகானந்தரின் மீது அளவற்ற அன்பு கொண்டாள். அதனால் அமெரிக்காவில் விவேகானந்தரின் ஒவ்வொரு காலடியையும் இந்த இளம் பெண் உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கினாள்.
இந்த மாநாட்டிற்குப் பின் உலக ஆன்மீக மாநாட்டில் கலந்து கொண்ட விவேகானந்தர், அனைத்துச் சமயத்தைச் சார்ந்தவர்கள் பேசுவதையும் கவனித்தார். அங்கு பேசிய மேலைநாட்டு மதபோதகர் அனைவரும் “ஜென்டில்மேன்” என்று தங்களின் பேச்சைத் தொடங்கினர். இந்த வார்த்தைகூடியிருப்போருக்கும், சொற்பொழிவாளருக்கும் இடைவெளி ஏற்படுத்துவதாக விவேகானந்தர் எண்ணினார்.
செப்டம்பர் 1-ம்தேதி விவேகானந்தர் பேச வேண்டிய முறை வந்தது. அவர் மேடை ஏறியதும், வேடிக்கைப் பொருளைப் பார்ப்பதுபோல் அனைவரும் விவேகானந்தரைப் பார்த்தனர். அவருடைய காவி உடையும், தலைப்பாகையும் மேலை நாட்டவர்களுக்குச் சிரிப்பை உருவாக்கியது.
பேண்ட், கோர்ட், டை என் மேடையில் பேசியவர்கள் மத்தியில் இப்படியொரு கோலத்தில் விவேகானந்தர் மேடையில் தோன்றியதும், கூடியிருந்தோரில் பலர் முகம் சுளித்தனர். இதுபற்றி அவர் கவலை கொள்ளவில்லை; கண்டு கொள்ளவும் இல்லை.
எடுத்த எடுப்பிலேயே ‘சகோதரசகோதரிகளே!’ என்று தமது சொற்பொழிவைக் கம்பீரமாக விவேகானந்தர் தொடங்கினார்.ஏளனம் செய்தவர்கள் வாய் மூடினர். ஆடையைக் கண்டு அறுவறுப்டைந்தவர்கள் ஆச்சரியப்பட்டனர்.
சிறிது இடைவெளிவிட்டு மீண்டும் விவேகானந்தர் தமது பேச்சைத் தொடங்கினார். அரங்கம் முழுவதம் அவரையே பார்த்தது; அவர் பேச்சை மட்டுமே கேட்டது; அவர் சொல்வதைத் தங்கள் மனதில் பதிந்து கொண்டது. இந்தக் கூட்டத்தில ஆடையிலும், தோற்றத்திலும் அவர் தனித்து நின்றார் மேடை முழக்கத்திலும் அவரே தனித்து வென்றார். பேசி முடித்த பின் அவரைத் தொடர்ந்து ஒரு கூட்டமே வந்தது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment