Thursday, December 20, 2012

ஒலிம்பிக் போட்டி வரலாறு

ஒலிம்பிக் போட்டி கி.மு. 776- ஆம் ஆண்டு கிரிஸ் நாட்டின் ஒலிம்பியா நகரில் தொடங்கியது. ஒலிம்பிக் போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வந்தது. கி.பி. 393-ல் அப்போதைய கிரேக்க அரசர் தியோடிசியல் இந்த ஒலிம்பிக் போட்டிக்கு தடைவிதித்தார். பின்னர் 1890-ல் மீண்டும் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கப்பட்டன. கிரேக்கர்களின் கடவுள்களில் ஒருவரான ஜியஸ் கடவுளை போற்றும் வகையில் கொண்டாடப்பட்ட திருவிழாவின் ஒரு பிரிவுதான் ஒலிம்பிக்போட்டி. இந்த போட்டியில் கிரேக்க மரபினர் மட்டுமே கலந்துகொண்டனர். அப்போதைய கிரேக்க சாம்ராஜ்யம் ஸ்பெயின், துருக்கி வரை பெரியாதாக இருந்தது. போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு ஆலிவ் இலைகளால் ஆனா கிரிடம் சூட்டப்பட்டது.

இந்த ஒலிம்பிக் போட்டியை புதுபிக்க பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த பேரன் பியரி டி குபர்டின் என்பவர் விரும்பினார். அதன்படி 1896 ஏப்ரல் 6 -ம் தேதி ஏதென்ஸ் நகரில் பல நாடுகள் கலந்து கொண்ட முதல் ஒலிம்பிக் போட்டிஆரம்பமானது. இந்த போட்டியை அப்போதைய கிரிஸ் அரசர் முதலாம் ஜார்ச் அரசன் தொடங்கிவைத்தார். முதல் ஒலிம்பிக் போட்டியில் 14 உலக நாடுகள் கலந்து கொண்டன. தடகள போட்டிகள், குத்துசண்டை, மல்யுத்தம், துப்பாக்கிசுடுதல், டென்னிஸ், சைக்கிள் ரேஸ், நீச்சல்,ஜிம்னாஸ்டிக், பளுதூக்குதல் ஆகிய போட்டிகள் இதில் இடம் பெற்றன. ஒலிம்பிக்கின் 11-வது நாள் மராத்தான் போட்டிகள் நடத்தப்பட்டன. முதல் மராத்தான் போட்டியில் கிரேக்க வீரர் ஸ்பிரி டான் லூயின் தங்கம் வென்றார். 1914-ம் ஆண்டு பேரான் டி.குபர்ட் ஒலிம்பிக் கமிட்டியின் 20-வது ஆண்டு விழாவை குறிக்கும் வகையில் ஒலிம்பிக் சங்க மாநாட்டின் போது வெள்ளைநிறத்திலான ஒலிம்பிக் கொடியை நிர்வாகிகளிடம் வழங்கினார்.

பிடல் காஸ்ட்ரோ…

1926 ஆகஸ்டு 13 – கியூபாவில் பிரான் அருகில் ஒரு கரும்புத் தோட்டத்தில் பிடல் அய்ஜாந்தி ரோ காஸ்ட்ரோ ருஸ் பிறப்பு 1945-50 – அவானா பல்கலைக் கழகத்தில் வழக்கறிஞராகப் பட்டம் பெறுகிறார். கொலம்பியாவில் புரட்சிகர அரசியலில் ஈடுபாடு கொள்கிறார். 1952 – நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, ஜெனரல் குல்ஜெம்சியோ பத்திஸ்தா தலைமையிலான இராணுவக் கவிழ்ப்புக்குப் பின் தேர்தல் நீக்கம் செய்யப்படுகிறது. 1953 – சூலை 26 காஸ்ட்ரோ தலைமையில் சாந்தியாகோ டி கியூபாவில் மன்காடா பாசறை மீது நடைபெற்ற தாக்குதல் தோல்வி. காஸ்ட்ரோவும் தம்பிரவுலும் சிறைப்பிடிக்கப்படுகின்றனர். ஈராண்டு கழித்து பொதுமன்னிப்பின் பகுதியாக விடுதலை. 1955 – சூலை 26 இயக்கத்தை கட்டுப்பாடுமிக்க கரந்தடிப் படையாகச் சீரமைக்க வேண்டி மெக்சிகோவுக்கு இடம் பெயர்கிறார். 1956 திசம்பர் 2 – கிரான்மா என்ற கப்பலில் காஸ்ட்ரோவும் சிறிய புரட்சிக் குழுவினரும் கியூபா செல்கின்றனர். புரட்சிக்காரர்கள் தோற்கடிக்கப்பட்டுத் தப்பிப் பிழைத்தவர்களில் ரவுல், எர்னெஸ்டோ சே குவேரோ உள்ளிட்ட 12 பேர் கரந்தடிப்போர் நடத்துவதற்காக சியரா மேஸ்ட்ரா மலைகளுக்குச் செல்கின்றனர். 1959 – காஸ்ட்ரோ தலைமையில் ஒன்பதாயிரம் வீரர் கொண்ட கரந்தடிப் படை அவானாவிற்குள் நுழைய, பத்திஸ்தா வேறு வழியின்றித் தப்பியோடுகிறார். காஸ்ட்ரோ தலைமை அமைச்சராகிறார். 1960 – குருச்சேவ் தலைமையிலான சோவியத்து ஒன்றியத்தின் நெருக்கமான கூட்டாளியாகிறார். கியூபாவில் அமெரிக்க நலன்கள் அனைத்தையும் இழப்பீடின்றி நாட்டுடைமையாக்குகிறார். கியூபாவுடன் அரசநிலை உறவுகளை அமெரிக்கா துண்டித்துக் கொள்கிறது. 1061 – அமெரிக்க சி.ஐ.ஏ. பயிற்றுவித்த, 1,300 கியூப அகதிகள் அமெரிக்க ஆதரவுடன் பன்றிகள் விரிகுடாவில் நடத்திய படையெடுப்பு தோல்வி. காஸ்ட்ரோவுக்கு கியூப மக்கள் பேராதரவு. 1962 – கியூப ஏவுகணை நெருக்கடியால் அணுவாயுதப் போரின் விளம்பில் உலகம். துருக்கியிலிருந்து அமெரிக்க ஏவுகணைகள் விலக்கிக் கொள்ளப்படுவதற்குப் பதிலாககியூபாவிலிருந்து ஏவுகணைகளை அகற்ற சோவியத்து நாடு ஒப்புக் கொண்டதால் நெருக்கடி தீர்வு. 1976 – கியூபப் பொதுமைக் கட்சி புதிய சோசலிச அரசமைப்புக்கு ஒப்புதல் அளிக்கிறது. காஸ்ட்ரோ அதிபராகத் தேர்வு. 1976-81 அங்கோலாவிலும் எத்தியோப்பியாவிலும் சோவியத்து ஆதரவுப் படைகளுக்கு கியூபா இராணுவ ஆதரவு. 1980 – அகதி நெருக்கடி – சுமார் 1,25,000 கியூபர்கள் மேரியல் துறைமுகம் வழியாக அமெரிக்காவுக்கு ஓட்டம். 1991 – சோவியத்து ஒன்றியத்தின் வீழ்ச்சியினால் கியூபாவில்கடுமையான நிதி முடை. 1993 – கியூபா மீதான முப்பதாண்டு வணிகத் தடையை இறுக்குகிறது அமெரிக்கா. சரிந்து வரும் பொருளியலுக்கு முட்டுக் கொடுக்க காஸ்ட்ரோ அமெரிக்க டாலரை சட்டமுறைச் செல்லுபடியாக்குகிறார். வரம்புக்குட்பட்ட அளவில் தனியார் தொழில் முனைவை அனுமதிக்கிறார். 1996 – கியூப அகதிகள் ஓட்டிச் சென்ற அமெரிக்க வானூர்திகள் இரண்டை கியூபா சுட்டு வீழ்த்தியபின் அமெரிக்க வணிகத் தடை நிரந்தரமாக்கப்படுகிறது. 2000 – ஆறு வயதான கியூப அகதிஎல்லன் கோன்சாலஸ் புளோரிடாவிலிருந்து தாயகம்திரும்பச் செய்வதற்கான 7 மாத காலப் போராட்டத்தில் காஸ்ட்ரோவுக்கு வெற்றி! 2002 – ‘தீய நாடுகளின்’ அச்சில் கியூபாவையும் சேர்க்கிறது அமெரிக்கா. 2006 – சூலை – அவசர அறுவை சிகிச்சைக்குப் பின் காஸ்ட்ரோ இடைக்காலப் பொறுப்பை ரவுலிடம் கையளிக்கிறார். 2008 – பிப்ரவரி 19. பொதுமைக் கட்சி ஏடு கிரான்மாவில் வெளியிடப்பட்ட கடிதத்தில் காஸ்ட்ரோ தமது பதவி விலகலை அறிவிக்கிறார்

Wednesday, December 19, 2012

சேகுவரா


உலகின் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒரு மனிதன் சுடப்பட்டு கீழே விழுவான். அவனை யார் எங்கிருந்து, எதற்காகச் சுட்டார்கள் என எதுவும் தெரியாது. ஆனால், அவனைச் சுட்ட துப்பாக்கியின் மிச்ச புகை, அமெரிக்காவில் கசியும். உலக வரைப்படத்தில் இந்த ஓநாயின் காலடி படாது இடமே இல்லை.

"சே குவராவின் அமெரிக்கப் பயணமும், அமெரிக்க எதிர்ப்பு பேச்சும் சி.ஐ.ஏ வுக்கு சினமூட்டின. அதுவரை காஸ்ரோவை குறிவைத்து இயங்கிய சி.ஐ.ஏ தன் முழு எரிச்சலையும் சேகுவராவின் பக்கம் திருப்பியது. காஸ்ரோவைக் காட்டிலும் இவர் தான் ஆபத்தானவர் என இலக்கு தீர்மானிக்கப்பட்டது.

விழும் இடமெல்லாம் விதை போல விழுவதும், எழும் இடமெல்லாம் மலைபோல எழுவதுமாக இருந்த சே குவரா சதித்திட்டம் குறித்து அறிந்தும்....

புன்னகைத்தார். தோடர்ந்தும் சீனாவுக்கும் அவ்ஜீரியாவிற்குமாக தன் பயணங்களைத் தொடங்கினார். சென்ற இடங்களிலெல்லாம் அமெரிக்காவைக் கடுமையாகத் தாக்கிப்பேசினார். ரஷ்யாவையும் ஒரு பிடி பிடித்தார். அமெரிக்காவால் பாதிக்கபடுகின்ற மூன்றாம் உலக குட்டி நாடுகளுக்கு ரஷ்யா பொருளாதார ரீதியில் பாதுகாப்பளிக்க வேண்டியது அதன் தார்மீகக் கடமை என முழங்கினார்.

தொடர்ந்து தான்சானியா கானா, கொங்கோ போன்ற ஆபிரிக்க நாடுகளுக்கும் பயணம் தொடர்ந்தது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தாலும் அடக்குமுறை சர்வாதிகாரத்தாலும் ஆபிரிக்க மக்கள் அவதிப்படுவதை நேரடியாக உணர்ந்தார். குறிப்பாக கொங்கோவின் அரசியல் சூழல், அவரை மிகவும் பாதித்தது. மக்கள் புரட்சிக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.

மூன்று மாத கியூபா அரசால் அங்கீகரிக்கப்படாத பயணத்திற்கு பிறகு சே குவரா 1965 மார்ச்சில் கியூபா திரும்பினார். விமான நிலையத்தில் அவரை பிடல் காஷ்ரோ கை குலுக்கி வரவேற்றார். அதுதான வெளியுலகுக்கு சே குவரா நேரடியாக வெளிப்பட்ட கடைசி நிகழ்வு. அதன் பிறகு சேகுவராவைக் காணவில்லை. எங்கே போனார் என யாருக்கும் தெரியவில்லை.

அன்றிரவு ஒரு சந்திப்பில், காஸ்ரோவின் தம்பி ரால் காஸ்ரோ சே குவராவை டிராஸ்கியிஸ்ட் என சுடு சொல்லால் அழைத்ததாகவும், அது சே குவராவின் மனதை மிகவும் காயப்படுத்தியதாகவும் அதுதான செகுவராவை கியூபாவை விட்டு வெளியே செல்லக் காரணம் என்றும் சொல்லப்படுவதுண்டு.

சே குவரா எங்கே? பத்திரிகைகள் அலறின. அனைவரது பார்வையும் காஸ்ரோவின் பக்கம் திரும்பியது. சேகுவராவை சுட்டுக்கொன்று விட்டார் காஸ்ரோ எனமளவு கோபம் கிளம்பியது. காஸ்ரோவின் மௌனம் சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியது.

சே குவரா காஸ்ரோ இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் நிலவியது உண்மை. அடிப்படையில் சேகுவரா ஒரு யதார்த்தவாதி. உள்ளது உள்ளபடியே போட்டு உடைக்கின்ற செயற்புயல். காஸ்ரோ ஒரு ராஜதந்திரி. அரசியல்பூர்வமாகக் காய்களை நகர்த்துபவர். "யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது சே குவராவின் உலகம். ஆனால், கியூபாவையும் அதன் மக்களையும் காப்பாற்றவேண்டிய பொறுப்பு காஸ்டோவிற்கு. இருவருக்குமிடையிலான முரண்கள் அனைத்துக்கும் இந்த வேறுபாடுகளே அடிப்படை.

உண்மையில் சே குவரா அப்போது காஸ்ரோவுக்கும், அவரது தாய்க்கும் ஒரு கடிதத்தை எழுதி அனுப்பிவிட்டு தனது அடுத்த புரட்சிக்காக கொங்கோ கிளம்பி இருந்தார். காஸ்ரோ எவ்வளவோ முயற்சித்தும் சே குவராவை நிறுத்த முடியவில்லை. "மக்களுக்கான் பணியில் தனது பாதை தொடர்ந்து நீளும். அதனை ஒருபோதும் தடுக்கக் கூடாது" என சே குவரா காஸ்ரோவிடம் உறுதிமொழி வாங்கியிருந்ததும் அதற்கு ஒரு காரணம்.சேகுவரா எங்கே? எனக் கேட்ட யாருக்கும் காஸ்ரோவால் வெளிப்படையாக பதில் சொல்ல முடியவில்லை. காரணம், சி.ஐ.ஏ!

சே குவராவை அழித்தொழிக்கத் தேடிவரும் சி.ஐ.ஏ விற்கு துப்பு கிடைத்துவிடும் என காஸ்ரோ அஞ்சியதே காரணம். வியட்நாமுக்கு சே குவரா சென்றுவிட்டதாக சொன்னதை நம்பி, வியட்நாம் காடுகளில் சே குவராவை சி.ஐ.ஏ தேடி அலைந்து ஏமாற்றமும் எரிச்சலும் அடைந்தது. அந்தக் கடுப்பில் சே குவராவை காஸ்ரோ சுட்டுக்கொன்றதற்கு தங்களிடம் ஆதாரங்கள் இருப்பதாகப் பொய்ச் செய்தியைப் பரப்பத்தொடங்கியது. இது காஸ்ரோவிற்கு மிக நெருக்கடியை உருவாக்க அக்டோபர், 03, 1965 ல் பொதுமக்கள் முன்னிலையில் சே குவரா தனக்கு எழுதிய கடிதத்தை அவரது அனுமதியுடன் சே குவரா கியூபாவை விட்டு தான் வெளியேறியதற்கான காரணத்த்தையும் கொங்கோ புரட்சிக்குச் செல்வதையும் குறிப்பிட்டிருந்தார்.

சே குவரா கொங்கோ காடுகளில் துப்பாக்கியுடன் களத்தில் இருந்தார். கியூபா வீர்ர்கள் மற்றும் கறுப்பினப் போராளிகளுடன் கொங்கோவின் சர்வாதிகார அரசை வேரறுக்கும் பணியில் இறங்கியிருந்தார். ஆனால் அவர் நினைத்தது போல் அந்த புரட்சி சே குவராவிற்கு வெற்றி தேடித் தரவில்லை. கொங்கோ நாட்குறிப்புக்கள் எனும் டைரியில் எழுதியிருந்தது போல, அது ஒரு தோல்வியின் வரலாறாக முடிந்தது.

அமெரிக்க சி.ஐ.ஏ கழுகுகள் அவரைத் தேடி கொங்கோ காடுகளுக்குள் புகுந்த போது சே குவரா தனது பட்டாளத்துடன் செக்கோஸ்லாவியாவுக்கு இடம் பெயர்ந்திருந்தார்.

சே குவராவிற்கு மீண்டும் கியூபா செல்ல விருப்பம் இல்லை. பொலீவிய மாவேயிஸ்ட் தலைவரான மோஞ்சேவின் அழைப்பின் பேரில் தன் அடுத்த இலக்கான் பொலிவீயாவுக்குள் 1966 இறுதிவாக்கில் மாறுவேடத்தில் நுழைந்தார். அவருடன் 50 பேர் கொண்ட கெரில்லாப்படையும் புனிதப் பணியில் ஈடுபட்டது. அவருக்கு கொங்கோவைப் போல தோல்வியே காத்ததிருந்தது.

1967 அக்டோபர் 8 தென் அமெரிக்கச் சரித்திரத்திலேயே ஒர் இருண்ட தினம்தட்ப வெப்ப சூழ்நிலைகளின் முரண், கலாச்சாரப் புரிதலின்மை, போன்றவையே அவரது திட்டங்களின் தோல்விகளுக்கு காரணம். இன்னொரு பக்கம் அவர் யார் யாரை தனது அரசியல் நண்பர்களாக நம்பி இருந்தாரோ, அவர்கள் யாரும் உதவி செய்யாமல், மௌனமாக கைகட்டி வேடிக்கை பார்த்ததும் தோல்விக்கான முக்கியமான காரணங்களில் ஒன்று. இந்த மனவேதனையுடன் ஆஸ்துமாவும் சேர்ந்து சே குவராவை வாட்டி வதைத்தது. போதிய வீரர்கள் இல்லாதது மற்றும் உணவின்மை போன்ற பிரச்சனைகளுடன் சே குவரா காடுகளில் அலைந்தார். சி.ஐ.ஏ பொலிவியாவுக்குள்ளும் புகுந்தது. பெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் என்பவர் தலைமையில் வேட்டையாடத் தொடங்கியது.

1967 அக்டோபர் 8 தென் அமெரிக்கச் சரித்திரத்திலேயே ஓர் இருண்ட தினம்.

காலை 10.30

யூரோ கணவாயை ஆறு கெரில்லா வீரர்களுடன் சே குவரா கடந்து செல்கிறார். வழியில் தென்பட்ட ஆடுமேய்க்கும் குண்டுப்பெண்ணின் மேல் பரிதாபப்பட்டு ஐம்பது பெஸோக்களைப் பரிசாகத் தருகிறார்.

நண்பகல் 1.30..

அந்தக் குண்டுப் பெண் பொலீவிய ராணுவத்திற்கு சே குவராவின் இருப்பிடத்தைக காட்டிக் கொடுக்கிறாள். அலறிப் புடைத்துப் பறந்த வந்த பொலீவிய ராணுவம் சுற்றி வளைத்துச் சராமாரியாகச் சுடத்தொடங்குகிறது. பதிலுக்கு கெரில்லாக்களும் துப்பாக்கிகளால் சுடுகின்றனர்.

பிற்பகல் 3.30

காலில் குண்டடிபட்ட நிலையில், தன்னைச் சுற்றித் துப்பாக்கியுடன் சூழ்ந்த பொலீவிய இராணுவத்திடம் நான்தான் சே குவரா இறப்பதைக் காட்டிலும் உயிருடம் பிடிபடுவது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்றார். மாலை 5.30 அருகிலிருந்த லா ஹிகுவேராவிற்கு வீரர்கள் கைத்தாங்கலாக சேகுவராவை அழைத்துவருகின்றார்கள்.

அங்கிருக்கும் பழைய பள்ளிக்கூடம் ஒன்றில் சே குவரா கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறைவைக்கப்படுகிறார். இரவு 7.00 மணி சே குவரா பிடிபட்டார் என சி.ஐ.ஏ வுக்கு தகவல் பறக்கிறது. அதே சமயம் சே குவரா உயிருடன் இருக்கும் போதே இறந்து விட்டதாக பொய்யான தகவல் பொலீவிய இராணுவத்தால் பரப்பப்படுகிறது.

தனக்கு உணவு வழங்கி வந்த பள்ளி ஆசிரியையிடம் " இது என்ன இடம்" என்று சே குவரா கேட்கிறார். பள்ளிக்கூடம் என்று அந்தப்பெண் கூற "பள்ளிக்கூடமா? ஏன் இத்தனை அழுக்காக இருக்கிறது? என வருத்தப்படுகின்றார். சாவின் விளிம்பிலும் சேகுவராவின் இதயத்தை எண்ணி அப்பெண் வியந்து போகிறார்.

அக்ரோபர் 9 அதிகாலை 6.00 மணி

லாஹிகுவேராவின் பள்ளிக்கூட வளாகத்தில் ஒரு ஹெலிகப்ரர் வட்டமடித்து வந்து இறங்குகிறது. அதிலிருந்து சக்திவாய்ந்த ரேடியோ மற்றும கமராக்களுடன் பெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் எனும் சி.ஐ.ஏ உளவாளி இறங்குகிறார்.

கோழையே நீ சுடுவது சே குவராவை அல்ல! ஒரு சாதாரண மனிதனைத்தான் - சே குவராவின் இறுதி வசனம்

கசங்கிய பச்சைக் காகிதம் போல கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் அழுக்கடைந்த ஆடைகளுடன் சே குவராவைப் பார்த்ததும், அவருக்கு அதிர்ச்சி. அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த மாவீரனா இந்தக் கோலத்தில் இங்கே நாம் காண்பது என அவருக்கு வியப்பும் திகைப்பும்! பிடிபட்டிருப்பது சே குவராதான் என அமெரிக்காவிற்கு தகவல் பறக்கிறது. சே குவராவின் டைரிகள் மற்றும் உடமைகள் கைப்பற்றப்படுகின்றன. தான் கொண்டுவந்த கமராவில் சேகுவராவை பல கோணங்களில் புகைப்படங்கள் எடுக்கிறார் பெலிக்ஸ். கைவிடப்பட்ட ஏசு கிறிஸ்துவைப் போல காட்சி தரும் சே குவராவின் அப்புகைப்படங்கள் இன்றளவும் வரலாற்றின் மிச்சங்கள்.

என்றும் அழியாத போராளியின் இறுதிக்கணங்கள்

காலை 10.00

சே குவராவை உயிருடன் வைத்து விசாரணைகள் நடத்தினால் அவர் மேல் பரிதாபத்தையும், நாயகத்தன்மையும் உருவாக்கி விடும் என்பதால் அவரை உடனடியாக தீர்த்துக்கட்டி விடுவதுதான் சரி என சி.ஐ.ஏ விடம் இருந்து தகவல் வருகிறது.

வாலேகிராண்டாவில் இருந்து வந்த அத்தகவல் 500,600 எனக் குறிச்சொற்கள் தாங்கி வருகிறது. 500 என்றால் சே குவரா 600 என்றால் கொல் என்பவை அதன் அர்த்தங்கள்.

காலை 11.00 மணி

சே குவராவை சுட்டுக்கொல்வது என முடிவெடுக்கப்படுகிறது. யார் அதைச் செய்வது எனக் கேள்வி வருகிறது. "மரியோ ஜேமி" என்ற பொலீவிய இராணுவ சார்ஜன் அக்காரியத்திற்காக பணியமர்த்தப்படுகிறார்.

ஆதனியிடத்திற்கு மரியோ அழைத்துச் செல்கிறார். "முட்டி போட்டு உயிர் வாழ்வதைவிட நின்று கொண்டே சாவது எவ்வளவோ மேல்" என்பார் சேகுவரா. ஆனால் மரியோ அவரை ஒரு கோழையைப்போல் கொல்லத் தயாராகிறார். தன்னை நிற்க வைத்துச் சுடுமாறு சேகுவரா கேட்க, அதை அலட்சியப்படுத்துகிறார்.

கோழையே சுடு! நீ சுடுவது சே குவராவை அல்ல: ஒரு சாதாரண மனிதனைத்தான்!

இதயம் கிழிக்கும் விழிகள் மின்ன உலகம் புகழும் மனிதன் சொன்ன கடைசி வசனம் இதுதான்!

1967, அக்ரோபர், 9 மணி நண்பகல் 1.10

மனித குல விடுதலைக்காகத் தன் வாழ்நாளெல்லாம் போராடிய மாமனிதனை நோக்கி துப்பாக்கி திறக்கிறது. ஆறு தோட்டாக்களில் ஒன்று, அவரது இதயத்துக்குள் ஊடுருவியது. இனம், மொழி,தேசம் என எல்லைகளை கடந்து பாடுபட்ட உலகின் ஒரே வீரன் இதோ விடை பெறுகிறான்.

சே குவரா இறந்த தகவல் உலகத்தை உலுக்கியது. அக்ரோபர் 18... கியூபா.. ஹவானாவில் வரலாறு காணாத கூட்டம் சே குவராவின் அஞ்சலிக்காக காஸ்ரோவின் தலைமையில் கூடியிருந்த்தது. அவர்கள் முன் தலைமை உரையாற்றுகிறார் காஸ்ரோ. "வரலாற்றின் மகத்தான பக்கங்களில் இடம்பெற்று விட்ட சே குவரா நம் காலத்தின் ஒப்பற்ற தலைவர். கியூப மக்கள் அந்த மகத்தான தலைவனை முன்மாதிரியாக கொண்டு செயற்பட வேண்டும். என வேண்டுகோள் விடுக்கிறார்.

இறந்தபோது சே குவராவிற்கு வயது 40. உலகம் முழுக்க சேகுவராவின் புகழ் இன்னும் அதிகமாக பரவியது. உலகின் அனைத்து இதழ்களிலும் சே குவரா குறித்துக் கட்டுரைகள் எழுதப்பட்டன. உலகின் பெரும் கவிகளான ஆக்டோவியா பாஸ், ஹூலியா கொத்சார் போன்றவர்கள் சே குவரா குறித்து கவிதைகள் எழுதினர். பிரெஞ்சு அறிஞர் ழான் போல் சார்த்தர், பூமியில் வந்து போன முழுமையான மாமனிதர் சே குவரா என மகுடம் சூட்டினார்.

நிகரகுவாவில் புரட்சி ஏற்பட்டு குவோராயிசம் எனும் கொள்கை கொண்ட சான்டனி ஸ்டாஸ் அரசு, ஆட்சியைக் கைப்பற்றியது. அதன் வெற்றி ஊர்வலத்தில் ஏசுவைப் போன்ற சே குவராவின் உருவம் கொண்ட அட்டைகளை அனைவரும் தாங்கிப் பிடித்திருந்தனர்.

கியூப அரசாங்கம் சே குவராவின் நினைவை தொடர்ந்து சமூகத்தின் ஞாபகத்தில் பதியவைக்கும் விதமாக தனது கட்டங்கள் மற்றும் பூங்காக்களில் சித்திரங்களாகவும், சிலைகளாகவும், பல்வேறு உருவ வேலைப்பாடுகளாகவும் நிர்மாணித்து பெருமைப்படுத்தியது. சான்டோ கிளாரா எனும் நகரில் சேகுவராவின் மியூசியம் ஒன்றும் உள்ளது. வருடந்தோறும் மில்லியன் கணக்கில் பயணிகள் வெளிநாடுகளிலிருந்து இந்த மியூசியத்தைப் பார்ப்பதற்காக மட்டுமே கியூபாவிற்கு செல்கின்றனர். கியூபாவில் இப்போதும் ஒரு வழக்கம் உண்டு. அதிகாலைகளில் வகுப்பறைக்கு செல்ல முன், அத்தனை குழந்தைகளும் ஒருமித்த வாசகம் என்ன தெரியுமா?

"ஆம் எங்களது முன்னோர்கள் கம்யூனிஸ்டுகளாக இருந்தனர். நாங்கள் சே குவராவைப் போல இருப்போம்

பில்கேட்ஸ் 2

1977 ஆம் ஆண்டு ஆல்புகர்க் நகரின் மிகப் பெரிய அடுக்குமாடிக் கட்டடத்தின் எட்டாவது மாடியில் ஒரு அறையில் இவர்கள் நிறுவனத்தைஆரம்பித்தனர். அந்த அறையில் அங்கும் இங்குமாகக் கணினிகள் கிடந்தன. விசைப்பலகைகளில் சில விரல்கை விளையாடிக் கொண்டிருந்தன. அங்கு சுமார் நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ரைப்பிரைட்டரில் அமர்ந்து கொண்டிருந்தாள். திடீரென புயல் போல ஒரு பையன் அந்த அறைக்குள் நுழைந்து நிர்வாகியின் அறைக்குள் போய்க் கொண்டிருந்தான். ஹலோ ..ஹலோ..யாரது ? முதலாளி ஊரில் இல்லை என உரக்க குரல் கொடுத்தார். ஏனெனில் வெளியார் யாரும் அந்த அறைக்குள் நுழையக் கூடாது என்பது உத்தரவு. அவனோ கதிரையில் அமர்ந்து கணினியில் கவனம் செலுத்த ஆரம்பித்தான். அந்தப் பெண் புதிதாக நியமனம் பெற்றவள்.அவள் வேகமாக தனது அலுவலகரை நோக்கிச் சென்று சார் யாரோ ஒரு பையன் .. அவள் முடிக்கவில்லை அவர் சிரித்தபடி பையனா ? அவர் தான் இந்தக் கம்பனியின் முதலாளி பில்கேட்ஸ் என்றார். அந்தப் பெண்ணின் விழிகள் வியப்பில் விரிந்தன. இருபது வயது இந்த சின்ன பெடியன் இக் கம்பனியின் முதலாளியா ? நம்பவே முடியவில்லை ? ஆனால்உண்மை அதுதான். அச்சிறிய கம்பனி"மைக்ரோசொப்ட் "(" Microsoft") என்ற பெயருடன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர ஆரம்பித்தது. இன்று உலகமே திரும்பிப்பார்க்கும் அளவுக்கு மைரோசொப்டின் இயங்கு மென் பொதிகளும் , பிரயோக மென்பொதிகளும் , புரோக்கிராம் மொழிகளும் , அனைத்துக் கணினிகளிலும் விரும்பிப் பயன்படுவதை அனைவரும் அறிந்ததே. இவ் வெற்றிக்கு பில்கேட்சின் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் மைக்ரோசொப்ட் உத்தியோகத்தர்களின் அயராத உழைப்பும் காரணம் என்றால் மிகையாகாது. இதனாலேயே மைக்ரோசொப்ட் உலகெங்கும் கொடி கட்டி பறக்க ஆரம்பித்தது. இதற்கிடையில் பில்கேட்ஸ் எந்தக் கல்லூரியிலும் பட்டம் பெற்றவர் அல்லர். அவருக்குப் பட்டப் படிப்போ , பட்டயப் படிப்போ முக்கியமானதாகத் தெரியவில்லை. கணினி மொழியில் அவர் கொண்டிருந்த ஆர்வமும் விடாமுயற்சியும் அவரை இன்று உலகம் அறிய வைத்தது. தனது நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் திறமை மதிப்பிடப்பட்டு திறமைக்கேற்றவாறு ஊக்கிவிப்பு பரிசில்கள் , சம்பள உயர்வு , பதவி உயர்வு , போனஸ் என்பன வழங்கப்பட்டு வருகின்றமை சிறப்பம்சமாகும். கடினமாக , தீவிரமாக முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி வேலை செய்ய முடியாதவர்களை இந்த இடம் உங்களுக்கு ஏற்றதல்ல என்று சொல்லி வெளியே அனுப்பிவிடுவாராம். பில்கேட்சிடம் உள்ள ஒரு நல்ல அம்சம் தொழிலாளர் , நிர்வாகி , முதலாளி என்ற இரும்புத் திரைப் பிரிவு வேறுபாடுகள் இல்லை. எல்லோரும் கலந்து பழகலாம் , ஆலோசனை வழங்கலாம் . மைக்ரோசொப்ட் நிறுவனத்தில் பணியாற்றிய மெலிண்டா பிரெஞ்ச் என்ற பெண்ணை நேசிக்கத் தொடங்கினார். கண்டதும் காதல் என்று கொள்ளாது ஐந்து வருடங்களுக்கு மேலாக நெருங்கிப் பழகிய பின்னர் அந்த நட்பு காதலாக மலர்ந்தது. அவள் அழகைவிட அறிவால் , உழைப்பால் உயர்ந்தவள். சுறுசுறுப்பானவள். , கலகலப்பான இயல்பு உடையவள். 1994 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் நாள் புது மணவாழ்வில் இணைந்து கொண்டனர். இவர்களுக்கு 1996 இல் ஒரு மகளும் 1999 இல் ஒருமகனும் பிள்ளைச் செல்வங்களாக கிடைத்தன."ஆசைக்கொரு மகளும் , ஆஸ்திக்கொரு மகனும்"என்பதே பலர் இலட்சியக் கனவு இந்த வகையிலும் பில்கேட்ஸ் கொடுத்து வைத்தவரானார். அமெரிக்கக் கோடை வள்ளல்களில் மூன்றாம் இடத்தை வகிக்கும் அவர் கோடீஸ்வரர் வரிசையிலும் மூன்றாவது இடத்தில் இன்று ( 2008 ) உள்ளார். உலகில் எல்லாக் கணினிகளிலும் மைக்ரோசொப்டின் மென்பொருள்களே பயன்படுத்தப்படுகின்ற நிலையில் அதன் திருட்டு மென்பொருள் பாவனையை கடுமையாக எதிர்க்கின்றார் பில்கேட்ஸ் .இதனால் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட மென்பொருளை அதிக விலை கொடுத்து வங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முன்னர் இவை குறைந்த பெறுமதியில் சாதாரண CD களில் அனைத்து இடங்களிலும் பெறக்கூடியதாக இருந்தது. உலகில் மைக்ரோசொப்ட் மென்பொருள் மூலம் அன்றும் இன்றும் கொடி கட்டிப் பறக்கும் பில்கேட்ஸ் 1995 ம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கைக்கு வருகை தந்து ஒருமணித்தியாலத்திற்குள் தனது சொந்த விமானத்தில் திரும்பிவிட்டார். பில்கேட்ஸ் தனது தலைமைப் பதவியை 27 .06 .2008 இல் ஸ்டீவ் போல்மருக்கு கொடுத்துவிட்டு அந்நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்று அவரால் ஸ்தாபிக்கப்பட்ட பில் அன்ட்மலிந்த பவுண்டேசன் எனப்படும் சமூக சேவை அமைப்பில் அதிக நேரத்த செலவிடுவதற்கு தீர்மானித்தார். " தான் கணினி பாதையில் சென்ற தூரம் சொற்பம் செல்ல வேண்டிய தூரம் மிக மிக அதிகம் " என்று கூறுகின்றார்.

பில்கேட்ஸ் 1

இன்றைய நவீன மயமான உலகத்திலே தொழில்நுட்பத் திறனையும் அதன் வளர்ச்சியையும் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும். அந்த வகையிலே சிறுவயதில் இருந்து கணினி மென்பொருள் துறையில் சுய விடாமுயர்ச்சியினால் முன்னேறி வெற்றி வாகை சூடி உலகக் கோடீஸ்வரர் எனப் பெயர்பெற்ற மைக்ரோசொப்ட் அதிபர் பில்கேட்ஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாகப் பார்ப்போம் . அமெரிக்காவிலே சியாடில் என்ற ஓர் அழகிய அற்புதமான இயற்கை எழில் கொஞ்சும் நகரில் வாழ்ந்து வந்த வில்லியம் ஹென்றி கேட்ஸ் மேரி தம்பதியினருக்கு மகனாக( 1955 -10 ௦- 28 ) ம் நாளன்று பிறந்தார். அப்போது தந்தையார் வில்லியம் ஹென்றிகேட்ஸ் புகழ்பெற்ற வழக்கறிஞர் ஆகவும் தாயார் கல்லூரி ஆசிரியையாகவும் கடமையாற்றினார்கள். கணினியை பில் பிடித்துக்கொண்டானோ அல்லது கணினி பில்லைப் பிடித்துக்கொண்டதோ தெரியாது.இவரிடம் சிறுவயதில் இருந்தே அறிவியல் , கணிதம் போன்ற துறைகளில் நாட்டம் அதிகமாக காணப்பட்டது. சிறுவயதில் பாடசாலையில் முதலாவது மாணவனாக பில் திகழ்ந்ததால் இவர் ஆசிரியர்களின் செல்ல மாணவனாக திகழ்ந்தார். எட்டாம் வகுப்பில் படிக்கும் போதே கணினி கல்வியில் ஆர்வம் காட்டினார் பில். அக்காலத்தில் அமெரிக்கா ஐக்கிய நாடுகளில் கூடக் கணினி ஓர் ஆடம்பரப் பொருளாக , அனைவருக்கும் எட்டாத ஒரு கருவியாக இருந்தது. அப்பொழுது அப்பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் (அன்னையர் சங்கம் ) மாணவர்களின் நலன் கருதி கணினி நிறுவனம் ஒன்றுடன் உடன்படிக்கை செய்து கொண்டது. இதன் மூலமாகக் கணினியை மாணவர்கள் பயன்படுத்தும் வாய்ப்பை பெற்றுக் கொண்டனர். அப்போது பயன்படுத்திக் கொண்டவர்களில் முக்கியமானவர்கள் பில் கேட்ஸும் அவன் நண்பன் பால் ஆலனும் ஆவர். இவர்களில் பில்கேட்ஸ் எட்டாம் வகுப்புமாணவனாகவும் பால் ஆலன் பத்தாம் வகுப்பு மாணவன் ஆகவும் இருந்தனர். ஆனால் கணினிக் கல்வியைக் கற்பதில்இருவருக்கும் தணியாத ஆர்வம் , தீராத தாகம் .அனால் அவர்களின் பாடசாலையில் திறமையான கணினி ஆசிரியர் கூட அப்போது இருக்கவில்லை. இருப்பினும் இரு நண்பர்களும் ஆசிரியர்களே வியக்கும் வகையில் தங்களின்கணினி அறிவை வளர்த்துக் கொண்டார்கள். கணினித் தொழிற்பாடு பற்றிய நூல்களை எல்லாம் ஆர்வமாக தேடித் படித்தார்கள். programming மொழியில் இவர்களுக்கு தனி வெறியே ஏற்பட்டுவிட்டது எனலாம். இதனால் இவர்களுக்கு இரவு , பகல் , என்று கிடையாது. பாடசாலை நேரம் , விடுமுறை என்று கிடையாது. கடும் பயிற்சியில் இருவரும் ஈடுபட்டனர். நடைமுறை வாழ்க்கைக்கு பயன்படும் வகையில் ப்ரோக்ராம்மிங் மொழிகளை உருவாக்க பில் ஆர்வம் கொண்டான். சுருக்கச் சொன்னால் கணினியால் இருவரும் புகுந்து விளையாடிப் புதுமைகள் காண விரும்பினர். ஆனால் அக்கால கட்டத்தில் பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் நிதி நெருக்கடி காரணமாக பிள்ளைகளின் பெற்றோர்களிடம் நிதி அறவிட்டு செயற்பட வேண்டிய நிலை ஏற்பட்ட பொழுது மட்டுப்படுத்தப்பட்ட நேரம் வழங்கப்பட்டது .அது பில்லுக்கு போதுமானதாக காணப் படவில்லை. பாடசாலையில் கணினிக்கல்விக்கு ஆபத்து நேரிட்ட போதும் பில்லும் , பாலுவும் பல்கலைக்கழக இளைஞர்களின் ஸி.ஸி.ஸி நிறுவனத்துடன் இணைந்து கொண்டார்கள். இவர்கள் அவர்களைவிடச் சிறியவர்களாக காணப்பட்டமையால் இவர்களின் திறமையில் நம்பிக்கை ஏற்படவில்லை. ஆனாலும் பில்லுக்கும் , பாலுக்கும் மீண்டும் நீண்ட நேரம் கணினியுடன் உறவாட வாய்ப்புக் கிடைத்தது. பாடசாலைக் கல்வியை முடித்த பிறகு மேல் படிப்பை தொடர்ந்து அப்பாவைப்போல் வக்கீலாகி விட வேண்டும் என்று குடும்பத்தினரும் உறவினர்களும் வற்புறுத்தினர். ஆனால் பில்லின் ஆழ்மனதில் விதைக்கப்பட்ட கணினிக் கனவுகள் , கணினி programming யை சுற்றி சுற்றி வந்தன. பில்லும் , பாலும் அங்கு உள்ளவர்களை விடத் திறமையாக நேரகாலம் பாராது வேலை செய்தபோதும் அவர்களுக்கு மாணவர்களுக்குரிய கொடுப்பனவே வழங்கப்பட்டது. ஆனாலும் அவர்கள் பணத்திற்காக அங்கு வேலை செய்யவில்லை. கணினியுடன் வேலை செய்யும் வாய்ப்புக்காக பணியை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். இதில் வெற்றி கண்டனர். இதன் பின்னர் பாடசாலை இறுதித் தேர்விலும் சிறப்பாக வெற்றிபெற்றார் பில். ஆனால் பாலு பாடசாலைக் கல்விக்கு முழுக்குப் போட்டுவிட்டான்.மேலும் பில் பெற்றோர்களின் விப்பத்திற்கு இணங்க வக்கீல் கல்வியை அவரால் தொடர முடியாத நிலையில் இடைநிறுத்தினார். அதன் பின்னர் பில்லும் பாலும் ஒரு கணினி நிறுவனத்தை ஆரம்பித்து பற்றி கனவு காண்பார்கள். திட்டம் தீட்டுவார்கள். விவாதிப்பார்கள்.ஆனால் நிதிநெருக்கடியினால் அவர்கள் திட்டத்தை தள்ளிப் போட்டு விட்டார்கள். ஆனால் அவர்களிடம் ஆசை இருந்தது , ஆற்றல் இருந்தது.அறிவு இருந்தது. அனுபவமும் கூடவேயிருந்தது .காலம் மட்டும் கனியவில்லை. 1974 ம்ஆண்டு இன்டெல் ( intel) நிறுவனம் புதியதோர் Micro Processor யை அறிமுகம் செய்தது. அதன் programming பணிக்கு அந்நிறுவனம் பில் , பால் இடமும் உதவியை நாடியது. இச்சந்தர்ப்பத்தைச் சரியாக பயன்படுத்தி வெற்றி காண வேண்டும் என்ற ஆர்வத்துடன் COBOL, FORTRON, PASCAL போன்ற மொழிகளில் தேர்ச்சி பெற்ற அவர்கள் BASIC முறையில் programming எழுத ஆரம்பித்தனர். அனால் இப்பணியை விரைவாக முடிக்க வேண்டும் , பிழையின்றி முடிக்க வேண்டும் , மற்றவர்களை முந்திக்கொண்டு முடிக்க வேண்டும் , சரியாக முடிக்க வேண்டும் என்று எண்ணினார்கள். அல்லாவிட்டால் தமது இரவு பகல் பாராது உழைத்த கடினமானஉழைப்பு பயனற்றுப் போய்விடும் என்று எண்ணினார்கள். இவர்களின் விடாமுயற்சியினால் எழுதப்பட்ட programme ஆனது பரிசோதித்து பார்க்கப்பட்டது. முயற்சி வெற்றி கண்டது. இதனால் மகிழ்ச்சியடைந்த பில்லின் ஆனந்தத்திற்கு அளவே இல்லை. அப்போது பில்லுக்கு இருபது வயது .இந்த வெற்றியின் திருப்பு முனை அவர்களை உலகறியச் செய்தது.

நேதாஜி 2

பர்மாவின் மேஜர் ஜெனரல் ஆங்சான் என்னும் புரட்சித் தளபதி தலைமையில் பர்மியப் புரட்சி ராணுவம் ஜப்பானியரை எதிர்த்துப் போராடியது. அந்தப் புரட்சிப் படையை ஒடுக்க நேதாஜியின் உதவியை ஜப்பானியர் கேட்டனர். ஆனால், நேதாஜி மறுத்தார். அதற்கு அவர் சொன்ன காரணம்,"இந்திய தேசிய ராணுவம் என்பது ஒரு கூலிப் படை அல்ல" ஒரே ஒரு முறை மதுரைக்கு வந்தார், பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர் மேற்கொண்ட முயற்சியால் அது சாத்தியமாயிற்று. இந்திய தேசிய ராணுவத்தில் நேதாஜியின் பட்டாலியனின் கீழ் 600-க்கும் அதிகமான தமிழர்கள் இருந்தார்கள். அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று அன்று நெகிழ்ந்தார் நேதாஜி. பெண்களை ராணுவத்தில் பங்கேற்கச் செய்தது முக்கியமான வரலாற்று நிகழ்வு. காந்தி எப்படி பெண்களை அகிம்சையின் வடிவமாகப் பார்த்தாரோ, அதற்கு நேர்மாறாகப் பெண்களைச் சக்தி வாய்ந்த துர்க்கைக்கு நிகராகப் பாவித்தார் நேதாஜி!!! 1943-ல் நேதாஜியின் படை வெள்ளையர்களிடம் இருந்து அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளைக் கைப்பற்றியது. அவற்றைக் கைப்பற்றியவுடன், நேதாஜி செய்த முதல் வேலை அந்தத் தீவுகளுக்கு `ஷாஹீத்’ (தியாகம்) மற்றும் `ஸ்வராஜ்’(சுயராஜ்யம்) என்று பெயர் மாற்றியதுதான். அந்தத் தீவுகளுக்கு ஆளூநராக தமிழர் ஒருவரைத்தான் நியமித்தார். அவர்.... கர்னல் லோகநாதன்! டோக்கியோவில் நடைபெற்ற கிழக்கு ஆசிய மாநாட்டில் நேதாஜி உரையாற்றி முடித்ததும், எழுந்த ஜப்பானியப் பிரதமர் டோஜோ, ``இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, நேதாஜி அந்நாட்டில் எல்லாமுமாக இருப்பார்!’’ என்றார். உடனே நேதாஜி, "சுந்திர இந்தியாவில் யார் எல்லாமுமாக இருப்பார் என்பதை இந்திய மக்கள்தான் முடிவு செய்வார்கள்" என்றார். ஜனநாயகத்தின் மீதும், மக்களாட்சியின் மீதும் அவருக்கு இருந்த அளவற்ற நம்பிக்கைக்கு இது ஒரு சான்று. 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம்தேதி பார்மோசா வழியாக மன்சூரியா செல்ல, நேதாஜி தன் தோழர் ஹபீப்புடன் விமானத்தில் ஏறினார். ஆகஸ்ட் 18-ம் தேதி தைபேவில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறினால் நேதாஜி இறந்தார் என்று சொல்லப்படுகிறது. ஆனால், தைவான் அரசாங்கமோ... அப்படி ஒரு விபத்தே நடக்கவில்லை என்கிறது. இதுவரை 12 கமிஷன்கள் வைத்துவிசாரித்தும் ஒரு பயனும் இல்லை. நேதாஜியின் மரணம் இன்றும் மர்மம்! "ஒரு இந்தியனின் புனித யாத்திரை" இவர் எழுதி முற்றுப் பெறாத சுயசரிதை, 1937-ல் எழுத ஆரம்பித்தார்.1921 வரை தன் வாழ்வில் நடந்த சம்பவங்களை எழுதினார். `என்னுடைய நம்பிக்கைத் தத்துவம்’ என்று தலைப்பிட்டு தனியே ஒரு கட்டுரையுடன் சேர்த்து இவர் எழுதியது 10 அத்தியாயங்கள் மட்டுமே!!! இவரின் பிறந்த தேதி மட்டும்தான் முழுமை . இறந்த தேதி இன்னும் மர்மம்தான்

நேதாஜி 1

ஜனவரி(JANAUARY) 23, 1897-ம் வருடம் ஜானகிநாத் போஸ்- பிரபாவதி தேதி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். குடும்பத்தின் 14 குழந்தைகளில் 9-வது குழந்தை போஸ். கல்கத்தா மாநிலக் கல்லூரியில் படிக்கும் போது, இந்தியாவுக்கு எதிரானகருத்துக்களைச் சொன்னதால் பேராசிரியர் ஓடென் என்பவரைத் தாக்கினார் போஸ்,அதற்காக, கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார். சுதந்திரப் போராட்டத்துக்கான நேதாஜியின் முதல் அடி அதுதான். லண்டனில் எனக்குக் கிடைத்த ஒரே சந்தோஷம் என்ன தெரியுமா? வெள்ளைக்கார சேவர்கள் எனது ஷீக்களுக்கு பாலீஷ் போட்டுக் கொடுத்துதான். அது ஓர் அற்ப மகிழ்ச்சியை அளித்தது. மற்றபடி வெள்ளையர்களின் ஒழுங்கு, கட்டுப்பாடு ஆகியவை எனக்குப் பாடமாக அமைந்தன! ஐ.சி.எஸ் தேர்வு எழுத லண்டன்சென்று திரும்பியதும் இப்படிச் சொன்னார் நேதாஜி. ஐ.சி.எஸ். தேர்வில் தேறிய போஸ், லண்டனில் பொறுப்பை ஏற்றிருந்தார். அப்போதுதான்இந்தியாவின் ஜாலியன் வாலாபாக் படுகொலை கொடூரம் அரங்கேறியது. அது அவருக்குள் விடுதலை வேட்கையைத் தூண்டிவிட, 1921-ம் ஆண்டு ஏப்ரல் மாதம்தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியா திரும்பினார்.! சித்தரஞ்சன் தாஸ்தான் நேதாஜியின் குரு. அவரின் வழிகாட்டுதலில்தான் காங்கிரஸில் இணைந்தார். `ஸ்வராஜ்’என்ற பத்திரிகையிலும் பணியாற்றினார். "குருதியைக் கொடுங்கள், உங்களுக்கு விடுதலையைத் தருகிறேன்" என்று இவர் உரக்கக் கூவிய பிறகுதான் இளைஞர்கள் பலர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுக்க ஆர்வமுடன் முன் வந்தார்கள். நேதாஜியின் கொள்கை : "நான் தீவிரவாதிதான், எல்லாம் கிடைக்க வேண்டும். அல்லது ஒன்றுமே தேவை இல்லை என்பதுதான் எனது கொள்கை" 1938ம் ஆண்டு காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது இப்படி முழக்கமிட்டார் ! போஸ், காங்கிரஸ் தலைவரானதும், மகாகவி ரவீந்திரநாத் தாகூர் அவரை சாந்திநிகேதனுக்கு அழைத்துப் பாராட்டு விழா நடத்தினார். அப்போதுதான் போஸீக்கு `நேதாஜி’ என்ற பட்டத்தை அளித்தார் தாகூர்."மரியாதைக்குரிய தலைவர்" என்று அர்த்தம்!! ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குத் தலைமை ஏற்று நடத்திய ஜெனரல் டயரைச் சுட்டுக் கொன்றார் உத்தம் சிங். அதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார் காந்தி. ஆனால், உத்தம் சிங்கைப் பாராட்டி கடிதம் அனுப்பினார் நேதாஜி, காந்திக்கும் நேதாஜிக்கும்இடையிலான விரிசலை அதிகமாக்கிய சம்பவம். 1939 -ல் இரண்டாவது முறையாககாங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார்.நேதாஜியின் செல்வாக்கு உயர்ந்து வருவதை அறிந்து காந்தி, அவருக்கு எதிராக ராஜேந்திரப் பிரசாத்தையும், நேருவையும் போட்டியிடுமாறு வற்புறுத்தினார். அவர்கள் மறுக்கவே, பட்டாபி சீதா ராமையாவை நிறுத்தினார். போஸ். 1,580 வாக்குகளுடனும், சீதா ராமையா 1,371 வாக்குகளுடனும் இருந்தனர். சீதா ராமையாவின் தோல்வி தனக்குப் பெரிய இழப்பு என்று பகிரங்கமாகவே காந்தி தெரிவித்து உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். அதனால், அவரைச் சமாதானப்படுத்த நேதாஜி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். அப்போது அவர் ஆரம்பித்தது தான் "ஃபார்வர்டு பிளாக்" கட்சி. பிரிட்டிஷ் அரசாங்கத்தால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருந்த சுபாஷ் சந்திர போஸ் , 1941 ஜனவரி 17அன்று தப்பினார். பெஷாவர் வழியே காபூல் தொட்டு,கைபர் கணவாய் வழியாகநடந்தே ஆஃப்கானிஸ்தானை அடைந்தார். பிறகு இத்தாலிக்குச் சென்று, இந்துகுஷ் கணவாய் வழியாக ரஷ்யாவில் நுழைந்து மாஸ்கோ சென்றார். இப்படி 71 நாட்கள் பயணித்து இறுதியில் அவர் பெர்லின் அடைந்தார். ஆயுதப் போராட்டம் மூலம் இந்தியாவுக்கு சுதந்திரம் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் சர்வாதிகாரி ஹிட்லரைச் சந்தித்தார் நேதாஜி"இந்தியாவின் வருங்கால சர்வாதிகாரியை வரவேற்பதில்பெருமைகொள்கிறேன்" என்று ஹிட்லர் கை குலுக்க, வருங்கால சுதந்திர இந்தியாவை உருவாக்க மட்டுமே உங்கள் உதவி நாடி வந்திருக்கிறேன், என்று உடனே பதில் அளித்தார் நேதாஜி. திருமணம் செய்துகொள்வதில்லை என்ற முடிவில் இருந்தார். ஆனால், 1934-ல் ஆஸ்திரியப் பெண்மணி எமிலி ஷெங்கலைச் சந்தித்ததும், அவர் மனதில் காதல் துளிர்விட்டது. இரண்டு ஆண்டுக் காதலின் சாட்சியாகப் பிறந்தவர்தான்அனிதா, ஜெர்மனியில் இருந்து நீர் மூழ்கிக் கப்பல் மூலம் ஜப்பான் செல்லும் சூழலில் விடைபெற்றது தான் எமிலியுடனான இறுதிச் சந்திப்பு. ஜெர்மனியில் இருந்தபோது இவர் ஆரம்பித்த "இந்திய சுதந்திர அரசு" என்ற அமைப்புக்கு ஜெர்மன் அரசு நிதி உதவி அளித்தது. 1944-ம் ஆண்டின் இறுதியில் அந்தக் கடனைக் கழிக்கும் விதமாக, இந்திய நாட்டு மக்களிடம் திரட்டப்பட்ட நிதியில் இருந்து 50 லட்சம் யென் பணத்தை டோக்கியோவில் இருந்த ஜெர்மன் தூதரிடம் அளித்தார் நேதாஜி.! "இன்னும் உயிரோடு இருக்கும்சுபாஷ் சந்திரபோஸ் பேசுகிறேன்" இப்படித்தான் நேதாஜியின் முதல் வானொலி உரை தொடங்கியது. 1944-ல் ஆசாத் ஹிந்த் வானொலியில் உரை நிகழ்த்தியபோதுதான் மகாத்மா காந்தியை,"தேசப்பிதா" என்றுமுதன்முதலில் அழைத்தார்.`ஆசாத் ஹிந்த்’ என்றால் "சுதந்திர இந்தியா"என்று பொருள். காந்திக்கும் போஸீக்கும் கொள்கை ரீதியாக வேறுபாடு இருந்தாலும், மனதளவில் அன்பைப் பொழிபவர்களாகவும் இருந்தனர். எப்படி சுபாஷ், காந்தியை"தேசப் பிதா" என்று அழைத்தாரோ, அப்படியே காந்தி, போஸை "தேச பக்தர்களின் பக்தர்" என்று அழைத்தார்!! சிங்கப்பூரில் 1942-ம் வருடம் மோகன் சிங் என்பவரால்தான் முதன்முதலில் இந்திய தேசிய ராணுவம் அமைக்கப்பட்டது. அது ஜப்பானியப் படைகளால் சிதைக்கப்பட்டது. மீண்டும் 1943-ல் நேதாஜியின் தலைமையின் கீழ் கட்டமைக்கப்பட்டது. தனது இந்திய தேசிய ராணுவத்துக்குத் தாரக மந்திரமாக "ஜெய் ஹிந்த"... அதாவது,"வெல்க பாரதம்" என்ற சொல்லைப் பரவலாக்கியவர் நேதாஜி அவர்கள் , அந்தச் சொல்லை நேதாஜிக்கு அறிமுகப்படுத்தியவர் செண்பகராமன் பிள்ளை என்ற தமிழர்!!

Tuesday, December 18, 2012

விமானம் உருவானகதை - ரைட் சகோதரர்கள் 2

1903 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ந்தேதி முதல் வெள்ளோட்டத்திற்கு தயாராகநின்றது ஃப்ளையர் என்று அவர்கள் பெயரிட்டிருந்த அந்த விமானம். யார் அதனை ஓட்டுவது என்று நாணயத்தை சுண்டிப் பார்த்ததில் வில்பருக்கு வெற்றிக் கிடைத்தது. இருவரின் மனமும் எதிர்பார்ப்பில் படபடக்க விமானத்தில் ஏறி குப்புற படுத்துக்கொண்டே விமானத்தைக் கிளப்ப முயன்றார் வில்பர், ஆனால் ஏதோ இயந்திரக் கோளாறு காரணமாக விமானம் நகரவே இல்லை. அப்போதுகூட அந்த சகோதரர்கள் மனம் தளர்ந்து போயிருந்தால் நமக்கு விமானம் கிடைக்காமல் போயிருக்கும். அடுத்த மூன்று நாட்கள் சிந்தித்து மேலும் சில மாற்றங்களை செய்தனர். டிசம்பர் 17ந்தேதி மீண்டும் முயன்றனர். இம்முறை நாணயத்தை சுண்டிப்பார்த்ததில் ஆர்விலுக்கு அடித்தது யோகம்.விமானத்தில் வயிறுக்குப்புற படுத்துக்கொண்டு அமெரிக்க நேரப்படி காலை 10:35 க்கு விசையை இழுத்தார் ஆர்வில்.அந்த இயந்திர விமானம் ஆடி குலுங்கி, கனைத்து புகையைக் கக்கியபடியே மெதுவாக மேலே எழத்தொடங்கியது. அந்தரத்தில் அப்படியும் இப்படியுமாக ஆடி சரியாக 12வினாடிகள் பறந்து 37 மீட்டருக்கு அப்பால் போய் பத்திரமாக தரையிறங்கியது.அந்த 12 வினாடிகள்தான் ஆகாய போக்குவரவுக்கு அடிகோலிய மந்திர வினாடிகள். வெற்றிக் களிப்பில் மிதந்தனர் ரைட் சகோதரர்கள். அவர்கள் பல நாட்கள் சிந்திய வியர்வைக்கு கடைசியில் பலன் கிட்டியது. அதேதினம் மேலும் மூன்று முறை ரைட் சகோதரர்கள் மாறி மாறி பறந்து சோதனைகள் செய்தனர்.நான்காவது முறை வில்பர் 57வினாடிகள் அந்தரத்தில் பறந்தார். அதற்கு அடுத்த ஆண்டே ரைட் சகோதரர்கள் நூறு அடி உயரம்வரை சென்று பன்னிரெண்டு மைல்கள் பறந்து சாதனை படைத்தனர். தொடர்ந்து பல முன்னேற்றங்களை செய்து 1908 ஆம் ஆண்டு 57 நிமிடங்கள் ஆகாயத்தில் பறந்து சாதனை படைத்தார் ஆர்வில். Wilbur flying almost four circles of Huffman Prairie, about 2 and 3/4 miles in 5 minutes 4 seconds; flight#82, November 9, 1904.rko. அடுத்த சோதனையின்போது தன்னுடன் ஒரு பயணியை அழைத்துச் சென்றார் ஆனால் எதிர்பாராத விதமாக விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறால் அது பூமியில் விழுந்து நொறுங்கியது. பயணி மாண்டார் ஆர்வில் தெய்வாதீனமாக உயிர் தப்பினார். ஆகாயப் போக்குவரவை சாத்தியமாக்கிய வில்பர் ரைட் 1912 ஆம் ஆண்டு மே மாதம் 30 ந்தேதியும் ஆர்வில் ரைட் 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30ந்தேதியும் இயற்கை எய்தினர். அந்த சகோதரர்கள் கிட்டிக்காக்கில் வடிவமைத்து உருவாக்கி முதன் முதலில் பயணம் செய்தஅந்த விமானம் வாஷிங்டெனில் உள்ள தேசிய வான்வெளி அருங்காட்சியகத்தில் இன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ரைட் சகோதரர்களின் அடிப்படையைக் கொண்டு பற்பல மாற்றங்களைக் கண்டு நவீன விமானம் உதயமானது. இன்று உலகின் எந்த மூலை முடுக்குக்கும் நினைத்தவுடனே சென்று வர முடிவதற்கு காரணம் ரைட் சகோதரர்கள்..aeroplane..rko.. இன்று உலகின் எந்த மூலை முடுக்குக்கும் நினைத்தவுடனே சென்று வர முடிவதற்கு காரணம் ரைட் சகோதரர்கள் அன்று கண்ட கனவும், சிந்திய வியர்வையும் அந்தக் கனவை நனவாக்க அவர்கள் மேற்கொண்ட விடாமுயற்சியும்தான். ஆனால் ஆரம்பத்தில் அவர்களின் கனவைக் கேட்டு உலகம் என்ன சொன்னது தெரியுமா? 'முட்டாள்கள் இவர்கள் வானத்தில் பறக்கப் போகிறார்களாம்' என்று எள்ளி நகையாடியது. அதேபோல இன்று நீங்கள் கானும் கனவை எள்ளி நகையாட ஆயிரம்பேர் அணிவகுத்து நிற்பார்கள். ஒருவர்கூட உங்களை தட்டிக் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை வள்ளுவன் கூறியதுபோல, ரைட் சகோதரர்கள் நிகழ்த்திக் காட்டியதுபோல் நிச்சயம் தொய்வின்றி முயல்பவர்களுக்கு எந்த வானமும் வசப்பட்டே ஆக வேண்டும் என்பது வரலாறு சொல்லும் உண்மை..

விமானம் உருவானகதை - ரைட் சகோதரர்கள் 1

“பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்” ஆம் உண்மையிலேயே பறவைகள் பறக்கும் அழகைக் கண்டு வியந்து நாமும் அவற்றைப்போல் பறந்தால் நன்றாக இருக்குமே!! ஏன் மனிதனும் பறக்க முடியாது? என்று கேள்வி கேட்டு பல ஆண்டு காலம் உறுதியோடு உழைத்து தங்கள் உயிரையும் பணயம் வைத்து கடைசியில் தங்கள் கனவை நனவாக்கிய இரண்டு வரலாற்று நாயகர்களின் கதையைத் தெரிந்துகொள்வோம்.. மனுகுலத்திற்கு பறக்கும் சக்தியைக் கொடுத்த அந்த சகோதரர்கள் ஆர்வில் ரைட் மற்றும் வில்பர் ரைட்.இவர்களை சுருக்கமாக ரைட் சகோதரர்கள் என்று அழைக்கிறது வரலாறு. குடும்பம் ஏழ்மையான குடும்பம்தான் அதனால் உயர்நிலைப் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்க முடியவில்லை ரைட் சகோதரர்களால் ஆனால் இருவருக்குமே அறிவுத்திறனும், ஆற்றலும் நிறையவே இருந்தது. ஒருமுறை இருவருக்கும் பறக்கும் விளையாட்டுப் பொம்மை ஒன்றை பரிசாகத் தந்தார் தந்தை. மூங்கில் தக்கை, காகித அட்டை ஆகியவற்றால் செய்யப்பட்ட அந்த பொம்மை வீட்டின் கூரைவரை ஒரு ஹெலிகாப்டரைப்போல் பறந்துசெல்லக்கூடியதாக இருந்தது.அப்போதே ரைட் சகோதர்கள் இருவருக்கும் அந்தப் பொம்மையை பெரிய அளவில் செய்தால் அதனை வெளியில் இன்னும் அதிக உயரத்தில் பறக்க விடலாமே என்ற எண்ணம்உதித்தது. முயன்று பார்த்தனர் தோல்வியைத் தழுவினர். ரைட் சகோதரர்கள் இருவருக்குமே பறவைகள் பறக்கும் அழகைப் பார்த்து வியப்பதில் அலாதி பிரியம்.அதே நேரத்தில் பலவிதமான பட்டங்களை செய்து பறக்க விட்டு மகிழ்வார்கள். அந்தப் பட்டங்களைப்போல், பறவைகளைப்போல் என்றாவது ஒருநாள் நாமும் வானத்தில் பறப்போம் என்ற நம்பிக்கையைச் சுமந்துகொண்டு பிழைப்புக்கு வழி தேடினர் இருவரும். ஒரு அச்சு நிறுவனத்தை தொடங்கி செய்தித்தாள்கள் அச்சிட்டனர் ஆனால் அது நொடித்துப்போனது. பின்னர் அப்போது சைக்கிள்கள் பிரபலமாக தொடங்கியிருந்ததால் அவர்கள் சைக்கிள் வியாபாரத்தில் ஈடுபட்டனர். அந்தச் சமயத்தில்தான் OttoLilienthal என்ற ஜெர்மானியரைப் பற்றி கேள்விப்பட்டனர் இருவரும்.தங்களுக்கு முன்பே பறப்பதைப்பற்றி சிலர் சிந்தித்திருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு அப்போதுதான் புரிந்தது. Otto தான் தயாரித்த கிளைடர் என்ற கருவியின் மூலம் இயந்திரம் எதுவுமின்றி காற்றின் சக்தியினால் ஆகாயத்தில் பறந்ததைப்பற்றி ரைட் சகோதரர்கள் கேள்விப்பட்டனர். பறக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்துவிடலாம் என்ற நம்பிக்கை மேலும் வளர்ந்தது. அதைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள முற்பட்டபோது Otto Lilienthalஒரு பறக்கும் சோதனை முயற்சியில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். ரைட்சகோதரர்கள் அதிர்ந்து போனாலும் அவர்களது நம்பிக்கை உதிர்ந்து போகவில்லை. Smithsonian Institution என்ற அமைப்பின் தலைவருக்கு அவர்கள் கடிதம் எழுதினர். ரைட் சகோதரர்களின் ஆர்வத்தை உணர்ந்த கழகத்தின் தலைவர் Samuel P. Langley ஆகாயத்தில் பறக்க அதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைப் பற்றியும், வெற்றி தோல்விகளைப் பற்றியும், முன்னேற்றம் பற்றியும் இப்படி எல்லாத் தகவல்களையும் அனுப்பி வைத்தார்.ரைட் சகோதரர்கள் தங்களுக்கு முன் பலர் மேற்கொண்ட அரிய முயற்சிகளைக் கண்டு அவர்கள் மலைத்தனர். அந்த முயற்சிகளால் பெறப்பட்ட அறிவைக்கொண்டு வெவ்வேறு கோணங்களில் சிந்தித்தனர். ரைட் சகோதரர்கள் தங்கள் முதல் கிளைடரை 1900 ஆம் ஆண்டில் உருவாக்கினர் அதனை எங்கு சோதித்துப் பார்க்கலாம் என்று சிந்தித்தபோது பருவநிலை ஆராய்ட்சி நிலையத்திற்கு கடிதம் எழுதினர். வட கேரனொய்வில் உள்ள கிட்டிகாக் என்ற இடம் உகந்தது என்று பதில் வந்தது. அங்கு சென்று முயன்று பார்த்தனர் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அப்போதும் அவர்கள் மனம் தளரவில்லை அடுத்த நான்கு ஆண்டுகள் தங்கள் வடிவமைப்பில் வெவ்வேறு மாற்றங்களை செய்வதும் சோதிப்பதுமாக இருந்தனர் ரைட் சகோதரர்கள். வேறு முன்மாதிரிகள் இல்லாததால்சிந்தித்து சிந்தித்து மாற்றங்கள் செய்தனர். ஒவ்வொரு முறையும் அவர்களால் முன்னேற்றத்தை உணர முடிந்தது. 1903 ஆம் ஆண்டு தாங்கள் தயாரித்த ஒரு கிளைடரில் தாங்களே உருவாக்கிய ஒரு மோட்டார் இயந்திரத்தைப் பொருத்தினர். அதில் விமானிகுப்புற படுத்துக்கொண்டே தன் கை, கால்களால் இயக்கி அதனை பறக்கச் செய்ய வேண்டும்.

ஆபிரகாம் லிங்கன் 1

மனித இனத்திலேயே ஒருவர் மற்றொருவரை அடிமையாக நடத்துகின்ற போக்கு, மனித இனம் தோன்றிய காலத்திலேயே தொடங்கிவிட்டது. பணம், பதவி, நிறம், இனம், மொழி ஆகியவற்றைக்கொண்டு மனிதர்கள் பிரிவதும், பேதம் காணுவதும், அதன் மூலம் கலவரங்கள் மூள்வதும் இன்றும் நடந்து வருகிறது. அடிமைத்தனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று போராடியவர்கள் உலகில் பலருண்டு. அவர்களில் தலைசிறந்தவர் ஆபிரகாம் லிங்கன். ஏழ்மைக் குடும்பத்தில் 1809 பிப்ரவரி 12-ல் ஆபிரகாம் லிங்கன் பிறந்தார் சிறுவனாக இருந்த போது, தந்தையின் பணிகளில் லிங்கன் உதவி புரிந்தார். காடுகளுக்கிடையே ஒன்பது மைல் நடந்து சென்று கல்வி பயின்றார் லிங்கன். அப்போது அவருக்கு வயது ஒன்பது. சிறுவயதிலயே தாய் இறந்து போனதால், சிற்றன்னையால் லிங்கன் வளர்க்கப்பட்டார். பிறருக்கு உதவி செய்தால், அடுத்தவர் மீது அன்பு செலுத்துதல் போன்ற அரிய குணங்கள் சிறு வயதிலேயே லிங்கனிடம் இருந்தது. எப்போதும் கலகலப்பாகப் பழகுதல்; கதை சொல்லுதல்; வேடிக்கையாப் பேசுதல் ஆகிய லிங்கனின் குணங்கள் அவர் மீது மற்றவர்களை விருப்பம் கொள்ளச் செய்தன. ஒருமுறை, நியூ ஆர்லியன்ஸ் என்ற நகரத்திலுள்ள சந்தைக்கு லிங்கன் சென்றிருந்தார். அங்கே ஒருநீக்ரோ பெண் அடிமையாக விற்கப்படுவதைக் கண்டார். அவர் மனம் துடித்தது. இந்தக் கொடுமைக்கு முடிவு காண வேண்டும் என்று லிங்கன் விரும்பினார். அதற்கான வழிமுறைகளைக் கண்டறிய முற்பட்டார். அரசியலில் ஈடுபடுவதன் மூலமே இதுபோன்ற அடிமைத் தனங்களை ஒழிக முடியும் என்ற முடிவுக்கு லிங்கன் வந்தார். 1834இல் முதன் முதலாக சட்டமன்றத் தேர்தலில் லிங்கன் போட்டியிட்டார். பொது மக்களிடம் அவர் செய்த பிரச்சாரம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. முடிவில் லிங்கன் வெற்றி பெற்றார். அடுத்து அமெரிக்க செனட்டுக்கு தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில்மிகப் பிரபலமான நீதிபதி ஒருவர் போட்டியிட்டார். அந்த நீதிபதியை லிங்கன் எதிர்த்து நின்றார். இந்தத் தேர்தலின் வெற்றியை அமெரிக்க மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். அமெரிக்க தேசத்தின் வரலாறு; அமெரிக்க அரசியல்; அன்றைய அமெரிக்க நிலைமை; பல்லாயிரம் நீக்ரோக்களை அடிமையாக நடத்தும் வழக்கம்; வெள்ளையர் – கறுப்பர் என்ற பாகுபாடு; தேசத்தைச் சீரழிக்கும் சூழ்நிலை ஆகியற்றை யெல்லாம் தமது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் லிங்கன் குறிப்பிட்டார். லிங்கனின் இந்த அணுகுமுறை அமெரிக்க மக்களிடத்தில் எழுச்சியை உண்டாக்கியது. தேர்தல் முடிவு லிங்கனுக்கு சாதகமாக அமைந்தது. முதன் முதலாக லிங்கன் அமெரிக்க செனட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்க செனட் உறுப்பினர்களில் லிங்கனின் பணி முற்றிலும் வேறுப்பட்டிருந்தது. மக்களின் அடிப்படை உரிமைகளையும், அடிமைத்தனத்தை ஒழிக்க வேண்டியதின் அவசியத்தையும் வலியுறுத்தி லிங்கன் முழங்கினார். கறுப்பர் இன மக்களிடம் லிங்கனின் செயல்பாடுகளும், சொற்பொழிவுகளும் வரவேற்பைப் பெற்றன. 1861-ல் அமெரிக்கக் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலிலும் லிங்கன் போட்டியிட்டார். மக்களை மட்டுமே லிங்கன் நம்பினார். ஆனால் லிங்கனை எதிர்த்தவர்கள் தங்கள் பணபலத்தாலும், படை பலத்தாலும், பதவியின் துணையாலும் வெற்றி பெற்றுவிடலாம் என எண்ணினார். இறுதியில் ஆபிரகாம் லிங்கனே அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார்.

ஆபிரகாம் லிங்கன் 2

ஒரு தேசத்தின் தலைவர் எப்படிப்பட்டவராக இருத்தல் வேண்டும்; அவருடைய செயல்கள் எத்தகைய எளிமை மிக்கதாக இருத்தல் வேண்டும் என்பதற்கு ஆபிரகாம் லிங்கன் மிகச்சிறந்த சான்று. லிங்கன் அமெரிக்க குடியரசுத் தலைவராக இருந்த போது அவருடைய காரை அவரே ஓட்டிச் செல்வது வழக்கம். ஒரு நாள் அமெரிக்க பாராளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஆபிரகாம் லிங்கன் காரை ஓட்டிச் சென்றார். வழயில் ஒரு பள்ளத்தில் விழுந்த ஒரு பன்றிக்குட்டி வெளியேற முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. அந்த வழியில் சென்ற எவரும் பள்ளத்தில் தவிக்கும் பன்றிக் குட்டியைப் பார்க்கவில்லை; பார்த்த சிலரும் அதுபற்றிக் கவலையில்லாமல் கடந்த சென்றனர். ஆனால் இதைக் கண்ட ஆபிரகாம்லிங்கனால் அந்த இடத்தைக் கடந்து செல்ல இயலவில்லை. தாம் ஓட்டி வந்த காரை சாலையின் ஓரத்தில் நிறுத்தி விட்டு, பள்ளத்தில் தவித்த பன்றிக் குட்டியைத் தூக்கிக் கரை ஏற்றினார். அதன் பின் பாராளுமன்றக் கூட்டத்திற்கு லிங்கன் பயணம் மேற்கொண்டார். ஆபிரகாம் லிங்கன் பாராளுமன்றத்திற்குள் நுழையும்போது பாராளுமன்றம் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. தாமதமாக வந்ததற்கு அனைவரும் என்னை மன்னிக்க வேண்டும்” என்று சொல்லியபடி பாராளுமன்றத்திற்குள் ஆபிரகாம் லிங்கன் நுழைந்தார். ஆபிரகாம் லிங்கன் ஆடை முழுவதும் சேறும் சகதியும் அப்பியிருந்தன….அதைக் கண்டு அனைவர் முகத்திலும் அதிர்ச்சி.. அதைப் புரிந்துகொண்ட ஆபிரகாம் லிங்கன் வழியில் நடந்ததை விவரித்தார். அதைக் கேட்ட அனைவரும் ஒரு ஐந்தறிவு ஜீவனான பன்றியைக் காப்பாற்றுவத்றாக ஆபிரகாம் லிங்கன் பாடுபட்டதைச் சொல்லிப் பாராட்டினார் அப்போது, ” ஒரு பன்றிக்குட்டியை நான் காப்பாற்றியதற்காக நீங்கள் என்னைப் பாராட்டுகிறீர்கள்…. ஆனால் இதில் என் சுயநலமும்அடங்கியிருக்கிறது” என்றார் ஆபிரகாம் லிங்கன். “இதில் என்ன சுயநலம் இருக்கிறது?” என்று அனைவரும் விழித்தனர். “பள்ளத்தில் தவித்த பன்றியைப் பார்த்து என் மனம் தவித்தது.. அந்தப் பன்றியைக் காப்பாற்றியதன்மூலம் என் மனம் நிம்மதி பெற்றது.. அதனால் என் மனம் சம்பந்தப்பட்ட விஷயமாகிறது. அந்த நேரத்தில் அந்தப் பன்றியை நான் காப்பாற்றாமல் வந்திருந்தால், அந்த கவலையால் இந்தப் பாராளுமன்ற விவாதத்தில் என்னால் முழுமையாக ஈடுபட முடியாது போயிருக்கும்… அதன் பின் சாலையோரங்களில் எந்தப் பன்றியைப் பார்த்தாலும், பள்ளத்தில் தவித்த பன்றியின் காட்சியே என் கண்ணில் தெரியும். தக்க சமயத்தில் அந்தப் பன்றிக்கு உதவாமல் வந்து விட்டோமே என்று என் உள்மனம் உறுத்திக் கொண்டே இருக்கும்… அந்த வடு என் வாழ்நாள் முழுமையும் நீடிக்கும்… அத்தகைய சூழலிலிருந்து விடுபடுவதற்காகத்தான் அந்தப் பன்றியை நான் காப்பாற்றினேன். இதில் என்னைப் பாராட்டுவதற்கு ஒன்றுமே இல்லை” என்ற சொல்லிச் சிரித்தார்.”. ஆம்! செய்த உதவிக்காக கிடைக்கின்ற பாராட்டுதலைக்கூட உதறித்தள்ளும் மனப் பக்குவத்தைக் கொண்டிருந்தார் ஆபிரகாம் லிங்கன்! அடிமைத்தனத்தை எதிர்த்து ஆரம்ப காலத்திலிருந்து முழங்கி வந்த லிங்கன், குடியரசுத் தலைவர் ஆனதும் உள்நாட்டுக் களவரங்கள் ஏற்பட்டன. ‘அடிமைத்தனம் தொடர வேண்டும் அது ஆண்டவனால் தீர்மானிக்கப்பட்டது. அதை அகற்ற ஆபிரகாம் லிங்கன் யார்?’ என்று அடிமைத்தனத்தால் பயன் பெறுபவர்கள் தூண்டிவிட்டனர். அமெரிக்காவின் தெற்கில் உள்ள சில சில மாநிலங்கள் தனியே பிரிந்து செல்ல வேண்டும் என விரும்பின. அடிமைத்தனத்தை கைவிடுவதைவிட, பிரிந்து செல்வதே பெருமை சேர்க்கும் என்று பிற்போக்குவாதிகள் முடிவெடுத்தனர். அதற்குண்டான காரண காரியங்கள விளக்கி, கலவரங்களையும் தூண்டி விட்டனர். உள்நாட்டு போர்மூண்டது. இவற்றையெல்லாம் லிங்கன் முறியடித்து நாட்டின் ஒற்றுமயைக் காப்பாற்றினார். அடிமைத்தனத்தையும ஒழித்தார். ‘மக்களால், மக்களுக்காக நடத்தப்படுவதே மக்களாட்சி, என்று மக்களாட்சிக்கு லிங்கன் விளக்கம் கொடுத்தார். லிங்கனின் சீர்திருத்தக் கருத்துக்களும், மக்களாட்சித் தத்துவமும், அடிமைத்தன ஒழிப்பும் அடித்தட்டு மக்களிடம் எழுச்சியை உண்டாக்கியது. ஆனால், தங்கள் சுயநலம் எதிர்த்துக் குரல் கொடுத்துக் கொண்டே இருந்தனர். அமெரிக்க குடியரசில் அடிமைத்தனத்தை ஒழித்த முதல் குடியரசுத் தலைவர் என்ற பெருமைக்குரிய ஆபிரகாம் லிங்கனை 1868 – ல் ஒரு பைத்தியக்காரன் சுட்டுக் கொன்றான்.

தத்துவ மேதை அரிஸ்டாட்டில்

உலகின் மிகச்சிறந்த தத்துவஞானிகளில் தலை சிறந்தவர் அரிஸ்டாட்டில் என்று குறிப்பிடுவர். மாசிடோனிய மன்னன் அமென்டால் என்பவனுக்கு மருத்துவராகப் பணியாற்றியஸ்நிக்கோ மாக்கஸ் என்பவரின் மகனாக ஸ்டஜிரா என்ற மாநிலத்தில் அரிஸ்டாட்டில் கி.மு. 384-ல் பிறந்தார். தந்தையிடம் மருத்துவக் கல்வியைப் பயின்று வந்தபோது கலை, தத்துவம் ஆகியவற்றிலும் அரிஸ்டாட்டில் ஈடுபாடு கொண்டார். சாக்ரடீஸின் மாணவரான பிளாட்டோவின் புகழ் அப்போது மாசிடோனியாவிலிருந்து அரிஸ்டாட்டிலையும் கவர்ந்தது. கலை, இலக்கியம்,தத்துவம் ஆகியவற்றில் வல்லுனராகத் திகழ்ந்த பிளட்டோவிடம் கல்வி பயில வேண்டுமென்று அரிஸ்டாட்டில் விரும்பினார். ஆனால் தமது தந்தை அதற்கு ஒத்துக்கொள்ள மாட்டார் என்பதை அறிந்து, அந்த ஆசையை அரிஸ்டாட்டில் மனதிற்குள்ளேயே வைத்துக் கொண்டார். சிறிது காலத்தில் அரிஸ்டாட்டிலின் தந்தை மறைந்தார். தனது அறிவுத் தாகத்திற்கு பிளாட்டோவிடம் கல்வி பயில்வதே சிறந்தது என்று எண்ணியிருந்த அரிஸ்டாட்டில், பிளாட்டோவைச் சந்திக்க ஏதென்ஸ் நகரத்திற்குச் சென்றார். பிளாட்டோவைச் சந்தித்து தம்மை மாணவனாக ஏற்றுக்கொள்ளும்படி அரிஸ்டாட்டில் வேண்டினார்.அரிஸ்டாட்டலின் புத்திக் கூர்மையையும், தத்துவ ஞானத்தையும் கண்டறிந்த பிளாட்டோ மகிழ்ந்தார். சுமார் இருபது ஆண்டுகள் அரிஸ்டாட்டில் ஏதென்ஸ் நகரிலேயே தங்கி பிளாட்டோவின் மாணவராக இருந்து கல்வி பயின்றார். கி.மு. 347-ல் பிளாட்டோ மறைந்தார். தம் ஆசிரியர் மறைவிற்குப் பின் ஏதென்ஸ் நகரத்தில் வாழ அரிஸ்டாட்டில் விரும்பவில்லை. சைராகஸ் மன்னன் ஹர்மியாஸ் என்பவன் அரிஸ்டாட்டிலைத் தம் நாட்டிற்கு அழைத்துக் கொண்டான். மன்னன் ஐர்மியாஸின் சகோதரி பைத்தியஸ் என்ற அழகியை அரிஸ்டாட்டில் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். சிறிது காலத்தில் மன்னன் ஹரமியாஸ் மரணத்தைத் தழுவியதால் அரிஸ்டாட்டில்என்ன செய்வதென்று திகைத்தார். அப்போது அரிஸ்டாட்டிலின் அறிவாற்றலைக் கேள்வியுற்றமாசிடோனியா மன்னன் பிலிப்,தம் மகனுக்குக் கல்வி கற்றுக் கொடுக்க அரிஸ்டாட்டிலை அழைத்தான். அதனால் தாம் பிறந்த மாசிடோனியாவுக்கு அரிஸ்டாட்டில் சென்றார். மாசிடோனியாவின் மன்னரான பிலிப்பின் மகனும் எதிர்காலத்தில் மாவீரனாகத் திகழ்ந்தவனுமான அலெக்சாண்டருக்கு ஆசிரியர் பொறுப்பை அரிஸ்டாட்டில் ஏற்றார். பன்னிரண்டு ஆண்டுகள் அலெக்சாண்டருக்கு நண்பராகவும், ஆசிரியராகவும் அரிஸ்டாட்டில் செயல்பட்டார். விலங்குகளைப் பற்றி முதன் முதலாக ஆய்வு செய்த அறிஞர்அரிஸ்டாட்டில்; விலங்குகள் பற்றி மக்களிடமிருந்த தகவல்களைத் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டவரும்அரிஸ்டாட்டில்தான். 454 விலங்கினங்களின் வாழ்க்கை முறையையும், பழக்க வழக்கங்களையும், உணவு முறைகளையும் சேகரித்து, அவற்றைத் தொகுத்தவரும் அரிஸ்டாட்டில்தான். அதனால்தான் அவர் ‘விலங்கினங்களின் தந்தை’ என்று அழைக்கப்படுகிறார். அலெக்ஸாண்டர் உலகையே வெல்லும் பேரார்வம் கொண்டு படையெடுத்தான். இதில் விருப்பமில்லாத அரிஸ்டாட்டில் மீண்டும் ஏதென்ஸ் நகருக்குச் சென்றார். அங்கு ஒரு பள்ளிக்கூடத்தை நிறுவி மாணவர்களுக்கு கல்வி போதித்து வந்தார். பிதியாஸ் என்ற பெண் குழந்தையைப் பெற்றெடுத்த அரிஸ்டாட்டிலின் மனைவி சிறிது காலத்தில் இறந்தார். அதன்பின் ஹெர்ஃபிலிஸ் என்ற பெண்ணுடன் அரிஸ்டாட்டிலுக்கு தொடர்பு ஏற்பட்டது. இந்த உறவில் பிறந்த குழந்தை நிக்கோமக்கஸ் என்று அழைக்கப்பட்டான். இவனும் சிறு வயதிலேயே மரணத்தைத் தழுவினான். மனிதன், இறைவன், அரசியல், என மூன்று பிரிவுகளையும் அலசி ஆராய்ந்து தமது த்த்துவ தரிசனமாக உலகிற்கு வங்கினார் அரிஸ்டாட்டில். “இந்த உலகம் இறைவனால் தோற்றுவிக்கப்படவில்லை. ஆனால் இந்த உலகை இயக்குபவன் இறைவனே!” “மனிதன் தனிமனிதச் சிந்தனை கொள்ளாமல், சமூகச்சிந்தனையோடு வாழ வேண்டும்.” “அரசியல் அதிகாரம் என்பது ஒருவரிடமோ, அல்லது சிலரிடமோ இல்லையெனில் பலரிடமோ இருக்கலாம். ஆனால்அதிகாரத்தில் இருப்பவர்கள் பொது நன்மைக்காகப் பாடுபட வேண்டும். அப்போதுதான் சரியான அரசியல் நடப்பதாகப் பொருள். அதை விடுத்து அதிகாரத்தில் இருப்பவர்க்களின் நலன் மட்டுமே பேணப்படுமாயின் அது மோசமான நிலமைக்குக் கொண்டு செல்லும்.” இது போன்ற கருத்துக்களை அரிஸ்டாட்டில் தமது நூல்களில் பதிவு செய்தார். அலெக்ஸாண்டர் மறைந்த பின் ஏதென்ஸ், நகர மக்களுக்கும்மாசிடோனியா மக்களுக்கும் பகை உணர்ச்சி வளர்ந்தது. அரிஸ்டாட்டில் மாசிடோனியாவில் பிறந்தவர்என்பதாலும், அலெக்ஸாண்டருக்கு ஆசிரியர் என்பதாலும் எதென்ஸ் மக்களின் கோபம் அரிஸ்டாட்டில் பக்கம் திரும்பியது. ஏதென்ஸ் இளைஞர்களைத் தவறான வழிகளில் அரிஸ்டாட்டில் அழைத்துச் செல்கிறார் என்றபொய்யான குற்றச்சாட்டும் அவர்மீதுசுமத்தப்பட்டது. தமக்கும் அரசியலுக்கும் எந்தவித்த் தொடர்பும் இல்லையென்றும், அலெக்ஸாண்டர் உலக நாடுகளைக் கைப்பற்ற எண்ணம் கொண்டதும் தாம் மாசிடோனியாவை விட்டு வெளியேறிவிட்டதாகவும் அரிஸ்டாட்டில் வாதாடினார். ஆனால் ஏதெனஸ் அரசு அரிஸ்டாட்லுக்கு மரண தண்டனை விதித்தது. பிளாட்டோவின் ஆசிரியர் சாக்ரடீஸூக்கும் மரண தண்டனை. பிளாட்டாவின் மாணவர் அரிஸ்டாட்டிலுக்கும் மரண தண்டனை. இந்த ஒற்றுமையை நினைத்து நல்லவர்கள் கவலை கொண்டனர். ஆனால் சிலரின் உதவி கொண்டுஏதென்ஸ் நகரைவிட்டு அரிஸ்டாட்டில் தப்பினார். இருப்பினும் சால்சிஸ் என்ற தீவில் கி.மு.. 322-ல் அரிஸ்டாட்டில் மரணத்தைத் தழுவினார்

ஆன்மீகத் துறவி விவேகானந்த 1

“ஒருவன் சில பரீட்சைகளில் தேர்வு பெற்று, சொற்பொழிவுசெய்யும் திறன் உள்ளவனாக இருந்தால்தான், அம்மனிதனைப் படித்தவன் என்று கருதுவீர்களா? வாழ்க்கையில் ஏற்படும் போராட்டங்களிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ளும் தகுதியைப் பெறுவதில் பாமர மகளுக்கு உதவி புரியாத கல்வியை, அவர்களது குணநலன்களைக் கட்டி வளர்க்காத கல்வியை, அதே போல் அம்மக்களிடம் ஈகைக் குணத்தையும், சிங்கத்திற்குள்ளது போன்றதைரியத்தையும் ஊட்டி வளர்க்காத கல்வியை, கல்வி என்று சொல்வதில் அர்த்தம் இருக்கிறதா? எவனொருவன் தன் அறிவைக் கொண்டே தன்னைக் காத்துக் கொள்ளத் திறன் உடையவனோ, அவனே உண்மையான கல்வியை அடைந்தவனாவான்.” இப்படி ஒரு காவியுடை அணிந்த ஒரு சாமியார் சொன்னார் என்றால் பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் உண்மையில் இதைவிட வேகமான, விவேகமான கருத்துக்களைச் சொல்லிச் சென்றிருக்கிறார் விவேகானந்தர். ‘செங்காவிச் சிங்கம்’ என்று சொல்லும் அளவுக்கு விவேகானந்தரின் சிந்தனைகள் கொட்டிக் கிடக்கின்றன. இந்து மத மேன்மை, இந்தியாவின் வலிமை, மூடத்தனத்தின் ஒழிப்பு, பகுத்தறிவின் தேவை, மெய்யான கல்வியாளர்கள், ஏழைகளின் நிலைமை என பல்வேறு பொருள்கள் பற்றி விவேகானந்தர் கூறிய கருத்துகள் மனித குல வளர்ச்சிக்கு மாமருந்தாகும். விசுவநாதர் – புவனேஸ்வரி தம்பதிக்கு 1863 ஜனவரி 12 அன்று பிறந்த விவேகானந்தரின் இயற்பெயர்நரேந்திரநாதர். சிறு வயதிலிருந்தே எது பற்றியும் ஆய்ந்து அறிகின்ற போக்கு நரேந்திர நாதருக்கு இருந்தது. ராமகிருஷ்ணரின் சீடராகச் சேர்ந்தார் நரேந்திரர். மற்ற சீடர்களிலிருந்து வேறுபட்டு விவேகமிக்கவராகநரேந்தர் திகழ்ந்தார். அதனால் நரேந்திர நாதருக்கு ‘விவேகானந்தர்’ என்று ராமகிருஷ்ணர் பெயர் சூட்டினார். இந்தப் பெயரே நிலை பெற்றுவிட்டது. 1885 ஆம் ஆண்டு ராமகிருஷ்ணர் மறைந்ததும், விவேகானந்தர் யாத்திரையை மேற்கொண்டார். காசி, லக்னோ,ஆக்ரா, பிருந்தாவனம், ஹத்ராஸ், ரிஷிகேஷ், பிரானாகோர் ஆகிய இடங்களுக்குச் சென்றார். மற்றொரு முறை விவேகானந்தர் யாத்திரை புறப்பட்ட போது ராமேஸ்வரத்திற்கு வந்தார்.இந்த யாத்திரைதான் விவேகானந்தரின் அறிவாற்றலை வெளிப்படுத்துவதற்கும், உலக மேதைகள் இந்திய தேசத்தின் வலிமையைப் புரிந்து கொள்வதற்கும், இந்து மத்த்தின் மேன்மையை உலக மதவாதிகள் தெரிந்து கொள்வதற்கும் காரணமாயின. அப்போது இராமநாதபுரம் மன்னராக இருந்தவர் பாஸ்கர சேதுபதி. இவர் ஆன்மீகத்தில் அறிவாற்றல் மிக்கவராகவும் சொறபொழிவு நிகழ்த்துவதில் வல்லவராகவும் திகழ்ந்தார்.அதனால் அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் நடக்க இருந்த உலக ஆன்மீக மாநாட்டில், இந்து மதத்தின் பிரதிநிதியாகக் கலந்து கொள்ள மன்னருக்கு அழைப்பு வந்தது. இந்த அழைப்பு மன்னருக்கு வந்த வேலையில்தான் விவேகானந்தர் இராமநாதபுரம் வந்திருந்தார். விவேகானந்தருக்கும் மன்னருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. அறிமுகம் நட்பாக மாறியது. நட்பு விவேகானந்தரிடம் மன்னரை பக்தி செலுத்த வைத்தது. விவேகானந்தர் அறிவாற்றலும், ஆன்மீகச் சிந்தனையும் தெளிந்த பார்வையும், தேர்ந்த ஞானமும் மன்னரை வியக்க வைத்தது. அதனால் தம்மைவிடச் சிறந்தவரான விவேகானந்தர் சிகோகோ செல்வதே சிறந்தது என்று மன்னர் முடிவு செய்தார். முடிவை விவேகானந்தரிடம் தெரிவித்தார். யோசித்துச் சொல்வதாகச் சொல்லிவிட்டு விவேகானந்தர் மன்னரிடம் விடைபெற்றார். அதன்பின் தாம் அமெரிக்கா செல்வதாக விவேகானந்தர் சென்னையிலிருந்து அறிவித்தார். அதையறிந்த இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி, விவேகானந்தர் அமெரிக்கா செல்வதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்தார். 1893 மே 31 அன்று அமெரிக்கா புறப்பட்ட விவேகானந்தர், ஜூலை மாதத்தில் அமெரிக்காவில் உள்ள சிகாகோவை அடைந்தார். உலக ஆன்மீக மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன் ‘மெட்காப்’ என்ற நகரில் மகளிர் மன்றக் கூட்டத்தில் ‘இந்தியப் பெண்கள்’ என்ற தலைப்பில் விவேகானந்தருக்குப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. இதுதான் அமெரிக்க மண்ணில் ஒலித்த விவேகானந்தரின் முதல் முழக்கமாகும். பெண்கள் நிறைந்த அந்த மாநாட்டில் விவேகானந்தரின் முழக்கம் எழுச்சியோடு வரவேற்கப்பட்டது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஒரு இளம் பெண் விவேகானந்தரின் மீது அளவற்ற அன்பு கொண்டாள். அதனால் அமெரிக்காவில் விவேகானந்தரின் ஒவ்வொரு காலடியையும் இந்த இளம் பெண் உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கினாள். இந்த மாநாட்டிற்குப் பின் உலக ஆன்மீக மாநாட்டில் கலந்து கொண்ட விவேகானந்தர், அனைத்துச் சமயத்தைச் சார்ந்தவர்கள் பேசுவதையும் கவனித்தார். அங்கு பேசிய மேலைநாட்டு மதபோதகர் அனைவரும் “ஜென்டில்மேன்” என்று தங்களின் பேச்சைத் தொடங்கினர். இந்த வார்த்தைகூடியிருப்போருக்கும், சொற்பொழிவாளருக்கும் இடைவெளி ஏற்படுத்துவதாக விவேகானந்தர் எண்ணினார். செப்டம்பர் 1-ம்தேதி விவேகானந்தர் பேச வேண்டிய முறை வந்தது. அவர் மேடை ஏறியதும், வேடிக்கைப் பொருளைப் பார்ப்பதுபோல் அனைவரும் விவேகானந்தரைப் பார்த்தனர். அவருடைய காவி உடையும், தலைப்பாகையும் மேலை நாட்டவர்களுக்குச் சிரிப்பை உருவாக்கியது. பேண்ட், கோர்ட், டை என் மேடையில் பேசியவர்கள் மத்தியில் இப்படியொரு கோலத்தில் விவேகானந்தர் மேடையில் தோன்றியதும், கூடியிருந்தோரில் பலர் முகம் சுளித்தனர். இதுபற்றி அவர் கவலை கொள்ளவில்லை; கண்டு கொள்ளவும் இல்லை. எடுத்த எடுப்பிலேயே ‘சகோதரசகோதரிகளே!’ என்று தமது சொற்பொழிவைக் கம்பீரமாக விவேகானந்தர் தொடங்கினார்.ஏளனம் செய்தவர்கள் வாய் மூடினர். ஆடையைக் கண்டு அறுவறுப்டைந்தவர்கள் ஆச்சரியப்பட்டனர். சிறிது இடைவெளிவிட்டு மீண்டும் விவேகானந்தர் தமது பேச்சைத் தொடங்கினார். அரங்கம் முழுவதம் அவரையே பார்த்தது; அவர் பேச்சை மட்டுமே கேட்டது; அவர் சொல்வதைத் தங்கள் மனதில் பதிந்து கொண்டது. இந்தக் கூட்டத்தில ஆடையிலும், தோற்றத்திலும் அவர் தனித்து நின்றார் மேடை முழக்கத்திலும் அவரே தனித்து வென்றார். பேசி முடித்த பின் அவரைத் தொடர்ந்து ஒரு கூட்டமே வந்தது

ஆன்மீகத் துறவி விவேகானந்த 2

அந்தக் கூட்டத்தில் ‘மெட்காப்’ நகர் மகளிர் மன்றத்தில் விவேகானந்தர் பேசிய போது மனதைப் பறிகொடுத்த அந்த இளம் பெண்ணும் இருந்தாள். இந்த மாநாட்டில் மீண்டும் செப்டம்பர் 15, 19, 20 ஆகியமூன்று நாட்கள் விவேகானந்தர் முழங்கினார்.அப்போது, “அளவுக்கு மீறிய மதப்பற்று, மூடபக்தி இவற்றிலிருந்து தோன்றிய மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாகப் இறுகப் பற்றியுள்ளன; வன்முறையை நிரப்பியுள்ளன; அடுத்தடுத்து உலகை உதிரப் பெருக்கில் மூழ்கடித்து, நாகரீகத்தை அழித்து, எத்தனையோ சமுதாயங்களை நம்பிக்கை இழக்கச் செய்து விட்டன. அந்தப் பயங்கரப் பைசாக் கொடூரச் செயல்கள் தோன்றாதிருப்பின், மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பன்மடங்கு உயர் நிலைஎய்திருக்கும்” என்று விவேகானந்தர் முழங்கினார். விவேகானந்தர் பேசிவிட்டு வெளியில் வந்ததும் ஒரு பெரும் கூட்டம், அவரிடம் கையெழுத்துப் பெறுவதற்காகக் காத்திருந்தது…. அவற்றில் அந்தப் பெண்ணும் இருந்தாள்.. அந்தப் பெண் யார்? மெட்காப் மகளிர் மன்றத்தில் விவேகானந்தர் பேசியதைக் கேட்டு, அவரைத் தனிமையில் சந்திக்க முயன்றாள். அது முடியாமல் போயிற்று! சிகாகோவில் விவேகானந்தர் நான்கு நாட்கள் முழங்கிய போதும், வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு விவேகானந்தரைத் தனிமையில்சந்தித்து விட வேண்டும் என்று விரும்பினாள்; அப்போதும் அதற்கு வாய்ப்புக் கிட்டவில்லை! அதன்பின் விவேகானந்தரின் மந்திரச் சொற்பொழிவைக் கேட்டு மயங்கிய அமெரிக்கர்கள், அயோவா, செயிண்ட் லூயிஸ், கேம்பிரிட்ஜ், வாஷிங்டன், நியூயார்க் ஆகிய இடங்களில் எல்லாம் விவேகானந்தரைப் பேச வைத்து மகிழ்ந்தனர். அத்தனை இடங்களுக்கும் அந்தப் பெண் வந்தாள்; விவேகானந்தரின் முழக்கத்தைக் கேட்டாள்; அப்போதும் அவளுக்கு விவேகானந்தரைத் தனியாகச் சந்திக்கும் வாய்ப்பு வாய்க்கவில்லை. ‘செயின்ட் லாரன்ஸ்’ என்ற நகரில் உள்ள தீவுப் பூங்காவில் விவேகானந்தர் ஐம்பது நாட்கள் ஓய்வெடுத்தார் அப்போதும அந்தப் பெண் அந்தத் தீவுப்பூங்காவிற்கு ஒவ்வொரு நாளும் வந்தாள். இருப்பினும் விவேகானந்தரைஅவளால் தனிமையில் சந்திக்க இயலவில்லை. விவேகானந்தர் அமெரிக்காவில் இருந்தபோதேஅவருடைய சொற்பொழிவுகள் நூல்வடிவம் பெற்று அமெரிக்க மக்களிடத்தில் மகத்தான வரவேற்பைப் பெற்றன. அந்தப் புத்தகங்களைக் கையில் ஏந்தியபடி விவேகானந்தர் தங்கியிருக்கும் இடத்திற்குச்சென்று தனிமையில் அவரைச்சந்திக்கஅந்தப் பெண் முயன்றாள். இருப்பினும் அவளுடைய முயற்சி பயன் தரவில்லை! அமெரிக்காவிலிருந்து விவேகானந்தர் பாரீசுக்கு புறப்பட்டார். அமெரிக்க விமானத்தளத்தில் வைத்து ந்தப் பெண் விவேகானந்தரை மடக்கி விட்டாள்! “தங்களிடம் கொஞ்சம் தனியாகப் பேச வேண்டும்” என்றாள். கூட்டத்திலிருந்து விலகியவிவேகானந்தர், “சொல்லு! தாயே! என்றார். அந்தப் பெண்ணுக்கோ இருபது வயது இருக்கும்… அப்போது விவேகானந்தருக்குமுப்பது வயது… அந்தப்பெண்ணோ நவ நாகரீக மங்கை… விவேகானந்தரோ முற்றும் துறந்த முனிவர்… எதற்காக விவேகானந்தரை விரட்டி விரட்டி அந்தப் பெண் பின் தொடர்கிறாள்? மீண்டும், “சொல்லு தாயே!” என்றார் விவேகானந்தர். “நான் மெட்காப் நகரில் நடந்த மகளிர் மாநாட்டில் இருந்து உங்களைக் கவனித்து வருகிறேன்.. தனிமையில் சந்தித்துப் பேச பலமுறை மயன்றும் முடியாமல் போயிற்று.. இனியும் காலம் தாழ்த்தினால் காரியம் கெட்டுவிடும் என்பதனால் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டேன். அமெரிக்க இளைஞர் பலர் என் அழகில் மயங்கி, என்னை அன்றாடம் சுற்றி வருகின்றனர. ஆனால் நான் உங்கள் அறிவில் மயங்கி உங்களைச்சுற்றி வருகிறேன்..” என்று தயங்கினாள். “அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் தாயே” என்றார் விவேகானந்தர். “என்னுடைய அழகும் உங்களுடைய அறிவும் சேர்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். நாம் திருமணம் செய்து கொண்டால் எனது அழகோடும் உங்கள் அறிவோடும் நமக்கு குழந்தை பிறக்கும்.. அதற்காகத்தான் நான் உங்களிடம் தனியாகப் பேசுவதற்கு அலைந்து கொண்டிருந்தேன்” என்றாள் அந்தப் பெண்! “தாயே! எனக்கு முப்பது வயது! உனக்கோ சுமார் இருபது வயது இருக்கலாம். நாம் திருமணம் செய்து, நமக்குக் குழந்தை பிறந்து,அந்தக் குழந்தை வளர்ந்து, இருபது வயதைத் தொடுகின்றபோதுதான் அந்தக்குழந்தை அறிவு மிக்கதா? இல்லையா? என்பது தெரியும்.அதற்குப் பதிலாக நீ என்னையே மகனாக ஏற்றுக் கொள்ளலாமே!” என்றார் விவேகானந்தர். இந்தப் பதிலைக் கேட்டு அந்தப் பெண் விக்கித்துவிட்டாள். ஆம்! காணுகின்ற பெண்களை எல்லாம் தாயாக்க் கருதியவர் விவேகானந்தர் என்பது அப்போதுதான் அந்தப் பெண்ணிற்குப் புரிந்தது! 1893-ல் விவேகானந்தர் சொன்ன கருத்துக்கள் இப்போதும் நினைவுபடுத்த வேண்டிய நிலையில்தான் உலகமும், இந்தியாவும், தமிழகமும் இருக்கிறது. சிகாகோவிலிருந்து உலகில் பல நாடுகளுக்கு விவேகானந்தர் சுற்றுப் பயணம் செய்துவிட்டு, 1897 ஜனவரியில் இராமேஸ்வரத்தில் உள்ள குந்தக்கல்லுக்கு வந்தார்.அவர் வருவதை அறிந்த இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி குந்தக்கல் வந்து காத்திருந்தார். கப்பலில் வந்து இறங்கிய விவேகானந்தர் தம் பாதங்களை முதன்முதலில் தம் தலையில் வைத்து விட்டுத்தான் மண் மீது பட வேண்டும் என்றார் மன்னர். ஆனால் மனித நேயம் கொண்ட விவேகானந்தர் அதற்கு இணங்கவில்லை. உலக முழுவதும் இந்தியாவின் சிறப்பையும், இந்து மத்ததன் மேம்னைய முழங்கி வந்த விவேகானந்தர் 1902 ஜூலை 4 அன்று மறைந்தார். கன்னியாகுமரியில் விவேகானந்தர் தியானம் செய்த இடம் ‘விவேகானந்தர் பாறை’ என்று அழைக்கப்படுகிறது. சிகாகோவில் பேசிவிட்டு விவேகானந்தர் முதன் முதலில் தமிழகத்தில் வந்த இறங்கினார். அதுவும் எந்த மன்னர் தமது அமெரிக்கப் பயணத்திறகுக் காரணமாக இருந்தாரோ, அந்த மன்னர் வாழுகின்ற இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமேஸ்வரத்தில்தான் விவேகானந்தர் இறங்கினார். விவேகானந்தர் ஒரு காலைப் பதித்து மற்றொரு காலை மண்ணில் வைத்த அந்த இடம் இன்றும் ‘குந்துக்கால்’ என்று அழைக்கப்படுகிறது. சென்னையில் விவேகானந்தர் தங்கிய இடம் ‘விவேகானந்தர்இல்ல’மாகக் காட்சியளிக்கிறது.

விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன்

மேலே எறிந்த பந்து மீண்டும் மேலே செல்லாமல் ஏன் பூமிக்கே திரும்பி வருகிறது? மரத்திலிருக்கும் பழம் ஏன் பூமியை நோக்கிக் கீழே விழுகிறது? அந்தப் பழம் மரத்திலிருந்து அதற்கும் மேலே ஏன் செல்லவில்லை? எந்த ஒரு பொருளாக இருந்தாலும் இறுதியில் பூமியை நோக்கி வருகின்றனவே ஏன்? இது போன்ற நிகழ்ச்சிகள் எதனால் நடக்கின்றன? என்று கூட எவரும் நினைத்தும் பார்த்ததில்லை. இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் தமது அறிவுக் கூர்மையால் முயன்று விடை கண்டவர் சர் ஐசக் நியூட்டன் என்ற மேதை. இவர் கண்டுபிடித்து கூறிய பின் உலகம் வியந்தது. ‘ஒப்பற்ற அறிவுலக மேதை சர் ஐசக் நியூட்டன்’ என்று அவரைப் பாராட்டியது. இங்கிலாந்தில் ‘உல்ஸ் த்ரோப்’ என்று ஒரு ஊர் இருக்கிறது. இந்த ஊரில்தான் சர் ஐசக் நியூட்டன் பிறந்தார். இந்தஊர் அவர் பிறந்ததனாலேயே வரலாற்றில் இடம் பெற்றது. அறிவாளிகள் சோதனைகளோடுதான் பிறப்பார்கள்; அல்லது பிறந்தபின் வாழ்க்கை அவர்களுக்கு சோதனையாக அமையும். சோதனைகளையும், அதன் வழியாகக் கிடைக்கும் வேதனைகளையும் எதிர்த்துப போராடிக் கொண்டோ, அல்லது அவைகளை எல்லாம் துச்சமென மதித்தோ அவர்கள் வாழ்க்கையைக் கடத்திக்கொண்டே தான் வெற்றி என்னும் சிகரங்களை எட்டிப் பிடித்திருத்திருக்கிறார்கள் என்பதை பல மேதைகளின் வரலாறுகள் நமக்கு உணர்த்துகின்றன. இது சர் ஐசக் நியூட்டனுக்கும் பொருந்தும். உலகம் பேரானந்தத்தோடு கொண்டாடும் கிறிஸ்துமஸ் அன்றுதான் நீயூட்டன் பிறந்தார். அவர் பிறந்த ஆண்டு 1642. மகன் பிறந்ததை நினைத்து அவரது தாய் மகிழ்ச்சி கொள்ளவில்லை. ஏனெனில், நியூட்டன் பிறப்பதற்கு முன், அதுவும்இரண்டு மாதங்களுக்குப் முன்புதான் நியூட்டனின் தந்தை எதிர்பாராதவிதமாக மரணத்தைத் தழுவினார். இந்தச் சோகம் நியூட்டனின் தாயாரைப் பாதித்திருந்ததால், நியூட்டனின் பிறப்பு அவருக்கு வேதனையைத் தான் கொடுத்தது. கணவன் இல்லாமல் காலமெல்லாம் வாழ நியூட்டனின் தாயார் விரும்பவில்லை. நியூட்டனுக்கு மூன்று வயது ஆகின்ற போது அவரது தாய் மறுமணம் செய்துகொண்டார். பிறப்பதற்கு முன்பே, தாய் இன்னொரு மனிதரிடம் அடைக்கலம்.. ஏது செய்வதென்பது கூட புரியாத பருவத்தில் இருந்த நியூட்டனை அவரது பாட்டிதான் பராமரித்தார். தந்தையின் பொறுப்பும், தாயின் பரிவும் இந்தப் பாட்டியிடமிருந்து தான் நியூட்டனுக்கு கிடைத்தது. தாம் பிறந்த உல்ஸ்திரோப் என்ற கிராமத்தில்தான் ஆரம்பக் கல்வியை நியூட்டன் கற்றார். பள்ளிக் கல்வியை முடித்த பின்பு நியூட்டனுக்குக் கல்லூரி சென்று கணிதம் படிக்க வேண்டுமென்ற விருப்பம் இருந்தது. ஆனால்வறுமையோடு போராடிக்கொண்டிருக்கும் நியூட்டனின் பாட்டியால், மேற்கொண்டு அவரைப் படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் இயலவில்லை. ஏதாவதொரு வேலை தேடுவதே நல்லது என்ற முடிவுக்கு நியூட்டன் வந்தார். அதுவும் அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை. இறுதியில் நியூட்டனுக்கு ஒருவேலை கிடைத்தது. கிடைத்த வேலையிலும் விருப்பத்தோடுபணியாற்றினார். நியூட்டனுக்குக் கிடைத்த வேலை என்ன தெரியுமா? ஒரு நிலப்பிரபுவின் ஆடுகளை மேய்ப்பதே அந்தப் பணி. அதிலும் நான்காண்டுகள் ஈடுபட்டார்படிக்க வேண்டிய பையன், ஆடு மேய்ப்பதை அறிந்து, நியூட்டனின் தாய்மாமன் கலங்கினார். அவரது முயற்சியால் கேம்பிரிட்ஜ்பல்கலைக் கழகத்தில் உள்ள டிரினிடி கல்லூரியில் நியூட்டன் சேர்க்கப்பட்டார். கணிதத்தில் பட்டம் பெற்றார். விடுமுறைக்கு தமது கிராமத்திற்கு வந்த நியூட்டன் வீட்டிற்கு அருகில் உள்ள தோட்டத்தில் இருந்தார் அப்போது ஒரு மரத்தில் இருந்து ஆப்பிள் பழம் ஒன்று கீழே விழுவதை நியூட்டன் கண்டார். இந்தக்காடசிதான் அவரை சிந்திக்க செய்தது. மரத்தில் இருந்துஆப்பிள் பழம் ஏன் கீழே விழுகிறது, என்ற வினா அவர் உள்ளத்தில் உட்கார்ந்து கொண்டது…. எல்லாப் பொருட்களையும் தன் மையத்தை நோக்கி ஈர்க்கும் சக்தி கொண்டது பூமி என்பதை கண்டுபிடித்து பூமிக்கு ‘புவி ஈர்ப்பு சக்தி உண்டு’என்பதை நியூட்டன் கண்டறிந்தார். பூமிக்குள்ள ஈர்ப்பு சக்தி, வானத்திலுள்ள கோள்கள், விண்மீன்கள் ஆகியவற்றிற்கும் உண்டு என்று நியூட்டன் கண்டுபிடித்தார். அந்த ஈர்ப்பு சக்திதான் கோள்களைச் சூரியனைச் சுற்றி வரும்படி செய்கின்றன என்று அறிந்ததும் நியூட்டன்தான். தமது இருபத்து ஆறாம் வயதில் தாம் பயின்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் கணிதப் பேராசிரியராகச் சேர்ந்த நியூட்டன், இந்தப் பணியில்முப்பத்து இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். ஒளியைப் பற்றிய ஆய்வில் நியூட்டன் இரவு பகலாக பாடுபட்டார். சூரியனின் ஒளியை வெண்மை நிறம் என்றுதான் இன்றும் நாம் எண்ணிக்கொண்டிருக்கிறோம். ஆனால் சூரியனின் ஒளி வெண்மை அல்ல; அது ஏழு நிறங்களின் தொகுப்பு என்று நியூட்டன் கண்டுபிடித்தார். இந்த நிறங்களின் சுருக்கம்தான் ஆங்கிலத்தில் ‘விப்ஜியார்’என்று குறிப்பிடப்படுகிறது.. நியூட்டனின் வட்டத் தகட்டைக் கொண்டு, சூரிய ஒளியில் உள்ள ஏழு நிறங்களின் தொகுப்பைக் காணலாம். ‘டெலஸ்கோப்’பை வடிவமைத்ததும் நியூட்டன்தான். நியூட்டனின் அறிவாற்றலையும், கண்டுபிடிப்புகளையும் கவுரவிக்கும் வகையில், இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினராக நியூட்டன் நியமிக்கப்பட்டார். நாணயச்சாலை பாதுகாப்பாளராகவும் அவர் பணி ஆற்றினார். ஆனால் அரசியலில் நியூட்டனின் அக்கறை செல்லவில்லை. பூமியின் ஈர்ப்புத் தன்மையைக் கண்டுபிடித்த இந்த மேதையை, குடும்ப வாழ்க்கை ஈர்க்கவில்லை. அதனால் இறுதிவரை அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. தமது 85 ஆம் வயதில் நியூட்டன் இறந்தார். இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் அபேயில் நியூட்டன் கல்லறை இருக்கிறது. இங்குதான் இங்கிலாந்து நாட்டின் இளவரசியான டயானாவும் புதைக்கப்பட்டார்.

Saturday, December 8, 2012

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 1

20 ஆம் நூற்றாண்டின்அறிவியல் உலகின் தன்னிகரற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ந்தேதி உலக வரலாற்றில் ஒரு கருப்பு தினம். அன்று அமெரிக்க போர் விமானம் ஒன்று ஜப்பானில் அணுகுண்டு வீச சின்னாபின்னாமானது ஹிரோஸிமா, மூன்றே நாட்களுக்குள் இன்னொரு அணுகுண்டைத் தாங்கி சுக்கல் சுக்கலாக கிழிந்தது நாகசாகி. ஆயிரம் ஆயிரம் அப்பாவி உயிர்கள் பலியான அந்த செய்திகேட்டு நாள் முழுவதும் கைகளில் முகத்தை புதைத்துக்கொண்டு விம்மி விம்மி அழுதது ஓர் உள்ளம். காரணம் அந்த ஜீவன் கண்டுபிடித்து சொன்ன சார்பியல் கோட்பாடுதான் அணுகுண்டு உற்பத்தியாவதற்கு அடிப்படையாக இருந்தது. அறிவியல் கண்டுபிடிப்புகள்நன்மைக்காகவே பயன்பட வேண்டும் என நம்பிய அவர்தான் 20 ஆம் நூற்றாண்டின் தன்னிகரற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். 1879 ஆம் ஆண்டு மார்ச் 14 ந்தேதி ஜெர்மனியில் ஒரு யூத குடும்பத்ததில் பிறந்தார் ஐன்ஸ்டீன் அவர் பிறப்பிலேயே ஓர் மேதை இல்லைஉண்மையில் மூன்று வயது வரை பேசாமல் இருந்ததால் அவருக்கு கற்கும் குறைபாடு இருக்குமோ என்று பெற்றோர் அஞ்சினர். வகுப்பிலும் சராசரி மாணவராகத்தான் இருந்தார். ஐன்ஸ்டீனுக்கு அறிவியல் மீது ஆர்வம் பிறந்தபோது வயது 4 ஒருமுறை அவருக்கு காம்பஸ் எனப்படும் திசைகாட்டி கருவியை பரிசாக தந்தார் அவரது தந்தை. அதனுள் இருந்த காந்தம் அவரை அறிவியல் உலகைநோக்கி ஈர்த்தது. பள்ளியில் சொந்தமாகவே கால்க்ளஸ் என்ற கணித கூறை கற்றுகொண்டார் ஐன்ஸ்டீன். பின்னர் சந்தேகங்களை கேட்க தொடங்கினார். அவரது கேள்விகளுக்கு பதில் தர முடியாம ஆசிரியர் திகைத்ததாகவும் அடுத்து என்ன கேட்கப்போகிறார் என அஞ்சியதாகவும் ஒரு வரலாற்றுகுறிப்பு கூறுகிறது. சிறு வயதிலேயிருந்து வார்த்தைகளாலும் சொற்களாலும் சிந்திப்பதைக்காட்டிலும் படங்களாகவும் காட்சிகளாகவும் சிந்திப்பார் ஐன்ஸ்டைன். அவருக்கு வயலின் வாசிப்பதிலும் அதிக ஆர்வம் இருந்தது. இசைமேதை மோசார்ட்டின் தீவிர ரசிகராக இருந்த அவருக்கு மேடைகளில் கச்சேரி செய்யும் அளவுக்கு திறமை இருந்தது. ஐன்ஸ்டீனுக்கு 15 வயதானபோது இத்தாலியில் மிலான் நகருக்கு குடியேறினர். அங்கு அவரது தந்தை வர்த்தகத்தில் நொடித்துபோனதும் சுவிட்சர்லாந்துக்கு சென்றார் ஐன்ஸ்டீன். புகழ்பெற்ற சுவிஸ் பெட்ரல் பாலிடெக்னிக் நுழைவுத்தேர்வில் அவர் தோலிவி அடைந்தார். ஆனால் அடுத்த ஆண்டு ஐன்ஸ்டீனை சேர்த்துகொண்டது அந்த பலதுறை தொழிற்கல்லூரி. அதிலிருந்து தேர்ச்சிபெற்றதும் சுவிஸ் குடியுரிமை பெற்றார் ஐன்ஸ்டீன். அவருக்கு கிடைத்த முதல் வேலை விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை பதிவு செய்து ஆராய்வது. அந்த வேலையில் அதிக ஓய்வு நேரம் இருந்ததால் அவர் சொந்தமாக பல ஆராய்ட்சிகளை செய்ய உதவியாக இருந்தது. ஆய்வுக்கட்டுரைகளையும் அவர் எழுத தொடங்கினார். 1905 ஆம் ஆண்டு ஸூரிக் பல்கலைகழகத்தில் ஐன்ஸ்டீனுக்கு முனைவர் பட்டம் கிடைத்தது. கண்ணுக்கு புலப்படாத அணுவைப் பற்றியும் பரந்து விரிந்து கிடக்கும் ஆகாயத்தைப்பர்றியும் ஆராய்ந்த ஐன்ஸ்டீன் தியரி ஆப் ரிலேட்டிவிட்டி என்ற கோட்பாட்டை வெளியிட்டார். அதுதான் சார்பியல் கோட்பாடு அந்த கோட்பாடு மூலம் அவர் உலகுக்கு தந்த புகழ்பெற்ற கணித இயற்பியல் வாய்ப்பாடுதான்: விஞ்ஞான உலகத்திற்கே இந்த வாய்ப்பாடுதான் அடிப்படை மந்திரமாக கருதப்படுகிறது. இந்த கண்டுபிடிப்பை செய்தபோது ஐன்ஸ்டீனுக்கு வயது 26 தான்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 2

1921 ஆம் ஆண்டு ஐன்ஸ்டீனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்க விரும்பியது நோபல் குழு. ஆனால் சார்பியல் கோட்பாடு குறித்து அப்போது விஞ்ஞானிகளிடையே கருத்து வேறுபாடு நிலவியதால் அதற்காக அல்லாமல் ஃபோட்டோ எலெக்டிரிக் எபெக்ட் என்ற கண்டுபிடிப்புக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கபட்டது. முதலாம் உலகப்போரில் ஜெர்மனி கலந்துகொண்டதற்கு வெளிப்படையாக கண்டனம் தெரிவித்தார் ஐன்ஸ்டீன். பின்னர் ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்தபோது யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் வரும் என்று உணர்ந்த அவர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். 1939 ஆம் ஆண்டு வேறு சில இயற்பியல் வல்லுநர்களுடன் சேர்ந்து அமெரிக்கா அதிபர் ரூஸ்வெல்டுக்கு ஒரு கடிதம் எழுதினார் ஐன்ஸ்டீன். அப்போது ஹிட்லரின் ஆட்சியில் இருந்த ஜெர்மனிக்கு அணுகுண்டை தயாரிக்கும் வல்லமை இருப்பதாகவும் வெகு விரைவில் அணுகுண்டு தயாரிக்ககூடும் என்றும் கடிதத்தில் எச்சரித்திருந்தார் ஐன்ஸ்டீன். ஆனால் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாயிற்று. ஜெர்மனி அணுகுண்டு செய்வதை அமெரிக்கா தடுத்து நிறுத்தும் என்று நம்பினார் ஐன்ஸ்டீன். ஆனால்ரூஸ்வெல்ட் நிர்வாகமோ ஐன்ஸ்டீனுக்கு தெரியாமலே சொந்தமாக அணுகுண்டு தயாரிக்கும் முயற்சியில் இறங்கியது. அதன்விளைவுதான் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு உலக வரலாற்றை ஒருகனம் இருட்டடிப்பு செய்த நாகசாகி ஹிரோஸிமா சம்பவம். E=Mc2 என்ற மந்திரம்தான் அணுகுண்டின் அடிப்படையாக அமைந்தது. அந்த தவிப்பு இறப்பு வரை ஐன்ஸ்டீனை உறுத்தியிருக்கும். ஆனால் அந்த ஒரு கருப்பு புள்ளியைத் தவிர்த்து ஐன்ஸ்டீனின் கோட்பாட்டால் பல நன்மைகளை பெற்றிருக்கிறது உலகம். உண்மையில் சர் ஐசக் நீயூட்டனின் கண்டுபிடிப்புகள் பைபிலில்பழை ஏற்பாடு என்றால் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடுகள் பைபிலின் புதிய ஏற்பாடு என ஒரு ஒப்பீடு கூறுகிறது. தங்கள் இனத்தவர் என்ற பெருமைப்பட்ட இஸ்ரேல் தங்கள் நாட்டுக்கே அதிபராகும்படி ஐன்ஸ்டீனுக்கு அழைப்பு விடுத்தது. நான் அரசியலுக்கு லாயக்கில்லாதவன் என்று சொல்லி அந்த பதிவியை ஏற்க மறுத்துவிட்டார் ஐன்ஸ்டீன்.சுவிட்சர்லாந்தில் படிக்கும்போது மிலவா என்ற பெண்ணை காதலித்து மணந்தார்.இரு குழந்தைகளுக்கு தந்தையானார். பின்னர் மணமுறிவு ஏற்படவே எல்ஸா என்ற உறவு பெண்ணை மணந்து கொண்டார். எல்ஸா சிறிது காலத்திலேயே இறந்துவிட சுமார் 20 ஆண்டுகள் தனித்தேவாழ்ந்தார் ஐன்ஸ்டீன். அணுகுண்டு தயாரிப்பதற்கு ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடுதான் என்றாலும் யுத்தங்களை அறவே வெறுத்தவர் ஐன்ஸ்டீன். உலக அமைதிக்காக குரல் கொடுத்த அவர் 1955 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ந்தேதி தனது 76 ஆவது வயதில் காலமானார். நவீன அறிவியல் ஐன்ஸ்டீனுக்கு மிகப்பெரிய நன்றிக்கடன் பட்டிருக்கிறது. எதையுமே ஆழமாக சிந்திக்ககூடியவர் அவர். ஒருமுறை உங்களுக்கு இன்னும் எதை கண்டுபிடிப்பதில் ஆர்வம் என நண்பர் ஒருவர் கேட்க கடவுள் இந்த உலகை எப்படி படைத்தான் என்று ஒருநாள் நான் கண்டுபிடித்துவிடவேண்டும் என்று கூறினாராம் ஐன்ஸ்டீன். ஐன்ஸ்டீனுக்கு வானம் வசப்பட்டதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று ஆழமான சிந்தனை, மற்றொன்று அறியப்படாதவற்றை பற்றிய அளவிட முடியாத தாகம். அந்த ஆழமான சிந்தனையும் இயற்கையைப் பற்றிய தாகமும் நமக்கு இருந்தால் நமக்கும் அந்த வானம் நிச்சயம் வசப்படும். நன்றி

மொங்கோலியப் பேரரசன் செங்கிஸ்கான்

வருடம் 1211.: மொங்கோலியப் பேரரசன் செங்கிஸ்கான், சீனாவின் யான்ஜிங்க் (இன்றைய பீஜிங்)நகைரப் பிடிப்பதற்காக, தன் படையுடன் கிளம்பினார். ‘‘உடேன சரணைடயுங்கள். இல்லாவிட்டால் நிர்மூலம் செய்துவிடுவோம்’’ என்று, அரச தூதுவராக வந்த ஷாங்சூனை மிரட்டி அனுப்பினார்.வழியெங்கும் சீனப் படைவீர‌ர்களின் பிணங்கள் சின்னாபின்னாமாகச் சிதைக்கப்பட்டு பார்வைக்குவைக்கப்பட்டிருந்தைதக் கண்டு மிரண்டுபோய், அரசரிடம் தகவலைச் சொன்னார்ஷாங்சூன். சீன அரசர் கோபாவேசத்துடன் போருக்குக்கிளம்பினாலும், அவரது படைவீர‌ர்களிடம் செங்கிஸ்கானின் செயல்கள் பீதியை உருவாக்கியிருந்தன. நாட்டுக்குள் நுழைந்த செங்கிஸ்கான் படையுடன் சீனப் படைகள் மோதினாலும், பயத்தின் பிடியில் இருந்த அவர்களால் வெற்றிபெற முடியவில்லை. கூட்டம் கூட்டமாகப் படைவீர‌ர்கள் சரண்டையவே,யான்ஜிங்க் நகர்வீழ்ந்தது. அரசர் விரட்டியடிக்கப்பட்டார். ‘இத்தனை எளிதான வெற்றியை எதிர்பார்த்தீர்களா?’ என்று செங்கிஸ்கானிடம் படைத்தளபதி கேட்க, "தோல்வி அடைந்துவிடுவோமோ என்று அச்சப்படுபவன், வெற்றி பெற மாட்டான்’’ என்பது எனக்குத்தெரியும். இதுதான் என்னுடையபோர்த்தந்திரம். என் மீது இருக்கும் அச்சத்தை வைத்து, இந்த உலகம் முழுவைதயும்வெற்றி கொள்வேன்" என்றான். வருடம் 1162. மங்கோலியர்கள் பல்வேறு குழுவாகச் சிதறிக் கிடந்த காலகட்டத்தில், ஒரு மலைசாதிக் குழுவின் தலைவரான ‘யெஸ்சூஹைய்’யின் மூத்த மகனாகப் பிறந்தான் டேமுஜின். 13 வயதான சமயத்தில், டேமுஜினின் தந்தை எதிர்க்குழுவினரால் விஷம் கொடுத்துக் கொல்லப்படவே, அப்போத டேமுஜினைத் தலைவனாக்க முயற்சிகள் நடந்தன. ஆனால், சிறுவன் என்பதால் தல்மைப் பொறுப்பு கிடைக்கவில்லை. பள்ளிக்குப் போகாமல் தாயிடம் அரசியலும், போர்க்கலையும் பயின்றான். ‘‘தோல்வி அடைந்துவிடுவோமா என்று அச்சப்படுபவன்,வெற்றி பெறமாட்டான். அதனால், எதிரிகளுக்கு முதலில் உன் மீது அச்சத்தை உருவாக்கு!’’ என்று புதிய போர் மந்திரத்தை போதிததே அவன் தாய்தான். 17-வது வயதில் கொள்ளையர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட டேமுஜின், அவர்கள் அத்தனை பேரையும் கொன்று தப்பி வரேவ, அவனது சாகசத்தைப் பாராட்டி, தலைவனாக ஏற்றுக்கொண்டார்கள். அதன்பின், சிதறிக் கிடந்த மங்கோலியர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து, தனது படைவீர‌ர்களுக்குக் கடுமையான பயிற்சியளித்து, அண்டை நாடுகளை எல்லாம் கைப்பற்றத் தொடங்கினான் டேமுஜின். 1183-ம் ஆண்டில் எல்லா மங்கோலியர்களும் இணைந்த பின்னரும், சிறு வயது நண்பனான ஜம்முஹா என்பவன் மட்டும் தனி ராஜாங்கம் நடத்துவதைக் கண்டு, அவன் மீது போர் தொடுத்து வென்றான். சிறைப்பட்ட நண்பன் ஜம்முஹா, ரத்தம் வராத வகையில் தனக்கு மரணம் வேண்டும் எனக் கேட்டுக்கொள்ள, கம்பளிப் போர்வையை அழுத்தமாக அவன் உடலில் சுற்றி, மூச்சுவிட முடியாமல் செய்து, மரணத்தில் ஆழ்த்தினான். ஜம்முஹாவுக்குத் துணையிருந்த அத்தனை படைவீர‌ர்கைளயும் கொன்று குவித்தான். அப்போதுதான் ‘அரசர்க்கெல்லாம் அரசன்’, ‘தோற்கடிக்க முடியாத மாவீர‌ன்’ என்கிற பொருள் பொதிந்த ‘செங்கிஸ்கான்’ என்கிற பட்டம் வழங்கப்பட்டது. 30,000 படைவீர‌ர்களை மட்டுமே வைத்திருந்த செங்கிஸ்கானால் 400,000 படைவீர‌ர்கள் கொண்ட சீனாவைத் தோற்கடிக்க முடிந்ததற்குக் காரணம்,எதிரிகளுக்குக் கடும் அச்சத்தை உருவாக்கியதுதான்.இதையடுத்து ரஷ்யா, ஹங்கேரி, போலன்ட் நாடுகைளயும் வெற்றிகொண்ட நேரத்தில், குதிரையிலிருந்து தவறி விழுந்து, 1227-ம் ஆண்டு இறந்துபோனார் செங்கிஸ்கான்

மொங்கோலியப் பேரரசன் செங்கிஸ்கான்

வருடம் 1211.: மொங்கோலியப் பேரரசன் செங்கிஸ்கான், சீனாவின் யான்ஜிங்க் (இன்றைய பீஜிங்)நகைரப் பிடிப்பதற்காக, தன் படையுடன் கிளம்பினார். ‘‘உடேன சரணைடயுங்கள். இல்லாவிட்டால் நிர்மூலம் செய்துவிடுவோம்’’ என்று, அரச தூதுவராக வந்த ஷாங்சூனை மிரட்டி அனுப்பினார்.வழியெங்கும் சீனப் படைவீர‌ர்களின் பிணங்கள் சின்னாபின்னாமாகச் சிதைக்கப்பட்டு பார்வைக்குவைக்கப்பட்டிருந்தைதக் கண்டு மிரண்டுபோய், அரசரிடம் தகவலைச் சொன்னார்ஷாங்சூன். சீன அரசர் கோபாவேசத்துடன் போருக்குக்கிளம்பினாலும், அவரது படைவீர‌ர்களிடம் செங்கிஸ்கானின் செயல்கள் பீதியை உருவாக்கியிருந்தன. நாட்டுக்குள் நுழைந்த செங்கிஸ்கான் படையுடன் சீனப் படைகள் மோதினாலும், பயத்தின் பிடியில் இருந்த அவர்களால் வெற்றிபெற முடியவில்லை. கூட்டம் கூட்டமாகப் படைவீர‌ர்கள் சரண்டையவே,யான்ஜிங்க் நகர்வீழ்ந்தது. அரசர் விரட்டியடிக்கப்பட்டார். ‘இத்தனை எளிதான வெற்றியை எதிர்பார்த்தீர்களா?’ என்று செங்கிஸ்கானிடம் படைத்தளபதி கேட்க, "தோல்வி அடைந்துவிடுவோமோ என்று அச்சப்படுபவன், வெற்றி பெற மாட்டான்’’ என்பது எனக்குத்தெரியும். இதுதான் என்னுடையபோர்த்தந்திரம். என் மீது இருக்கும் அச்சத்தை வைத்து, இந்த உலகம் முழுவைதயும்வெற்றி கொள்வேன்" என்றான். வருடம் 1162. மங்கோலியர்கள் பல்வேறு குழுவாகச் சிதறிக் கிடந்த காலகட்டத்தில், ஒரு மலைசாதிக் குழுவின் தலைவரான ‘யெஸ்சூஹைய்’யின் மூத்த மகனாகப் பிறந்தான் டேமுஜின். 13 வயதான சமயத்தில், டேமுஜினின் தந்தை எதிர்க்குழுவினரால் விஷம் கொடுத்துக் கொல்லப்படவே, அப்போத டேமுஜினைத் தலைவனாக்க முயற்சிகள் நடந்தன. ஆனால், சிறுவன் என்பதால் தல்மைப் பொறுப்பு கிடைக்கவில்லை. பள்ளிக்குப் போகாமல் தாயிடம் அரசியலும், போர்க்கலையும் பயின்றான். ‘‘தோல்வி அடைந்துவிடுவோமா என்று அச்சப்படுபவன்,வெற்றி பெறமாட்டான். அதனால், எதிரிகளுக்கு முதலில் உன் மீது அச்சத்தை உருவாக்கு!’’ என்று புதிய போர் மந்திரத்தை போதிததே அவன் தாய்தான். 17-வது வயதில் கொள்ளையர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட டேமுஜின், அவர்கள் அத்தனை பேரையும் கொன்று தப்பி வரேவ, அவனது சாகசத்தைப் பாராட்டி, தலைவனாக ஏற்றுக்கொண்டார்கள். அதன்பின், சிதறிக் கிடந்த மங்கோலியர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து, தனது படைவீர‌ர்களுக்குக் கடுமையான பயிற்சியளித்து, அண்டை நாடுகளை எல்லாம் கைப்பற்றத் தொடங்கினான் டேமுஜின். 1183-ம் ஆண்டில் எல்லா மங்கோலியர்களும் இணைந்த பின்னரும், சிறு வயது நண்பனான ஜம்முஹா என்பவன் மட்டும் தனி ராஜாங்கம் நடத்துவதைக் கண்டு, அவன் மீது போர் தொடுத்து வென்றான். சிறைப்பட்ட நண்பன் ஜம்முஹா, ரத்தம் வராத வகையில் தனக்கு மரணம் வேண்டும் எனக் கேட்டுக்கொள்ள, கம்பளிப் போர்வையை அழுத்தமாக அவன் உடலில் சுற்றி, மூச்சுவிட முடியாமல் செய்து, மரணத்தில் ஆழ்த்தினான். ஜம்முஹாவுக்குத் துணையிருந்த அத்தனை படைவீர‌ர்கைளயும் கொன்று குவித்தான். அப்போதுதான் ‘அரசர்க்கெல்லாம் அரசன்’, ‘தோற்கடிக்க முடியாத மாவீர‌ன்’ என்கிற பொருள் பொதிந்த ‘செங்கிஸ்கான்’ என்கிற பட்டம் வழங்கப்பட்டது. 30,000 படைவீர‌ர்களை மட்டுமே வைத்திருந்த செங்கிஸ்கானால் 400,000 படைவீர‌ர்கள் கொண்ட சீனாவைத் தோற்கடிக்க முடிந்ததற்குக் காரணம்,எதிரிகளுக்குக் கடும் அச்சத்தை உருவாக்கியதுதான்.இதையடுத்து ரஷ்யா, ஹங்கேரி, போலன்ட் நாடுகைளயும் வெற்றிகொண்ட நேரத்தில், குதிரையிலிருந்து தவறி விழுந்து, 1227-ம் ஆண்டு இறந்துபோனார் செங்கிஸ்கான்

நெப்போலியன் 1

உலக வரலாற்றில் வீரசாகசம் செய்த மாவீரர்களில் பிரான்சு நாட்டின் நெப்போலியனுக்கு தனி சிறப்பிடம் உண்டு.1769 ஆம் ஆண்டு கார்சிகா தீவில் ஒரு வழக்கறிஞரின் மகனாக நெப்போலியன் பிறந்தார்.கட்டையான உருவம் சிறிய கண்கள், அளவுக்கு மீறிய நீண்ட காதுகள் உடையவராக காணப்பட்டார்.பள்ளிப் பருவத்தில் மொத்தமாக 58 மாணவர்களை கொண்ட வகுப்பில்42 ஆவது மாணவனாக இருந்தான்.படிப்பை முடித்த பின் இராணுவத்தில் சேர்ந்தான். 1785 ஆம் ஆண்டில் இராணுவ துணைத்தலைவன் ஆனான். நாட்டில் கலவரங்கள் நடைபெறும் போது அவற்றை அடக்குவதில் தன் திறமையை காட்டினான்.அதனால் அரசின் நன் மதிப்பை பெற்றான். 1796இல் ஆஸ்திரியாவுக்கு சொந்தமான் இத்தாலிய பகுதிகளை பிடிப்பதற்கு அனுப்பப்பட்டார்.வீரம்,ராஜதந்திரங்கள்,புதிய போர் முறைகள்,இவற்றினால் சென்ற இடமெல்லாம் வெற்றி வாகை சூடினான். நெப்போலியனுக்கு ஆஸ்திரியா பணிந்தது. பிரெஞ்சு நாட்டு மக்களின் உள்ளம் கவர்ந்தார் நெப்போலியன். நெப்போலியனின் பார்வை இங்கிலாந்து நாட்டை நோக்கிதிரும்பியது. கீழத்தேய நாடுகளுடன் இங்கிலாந்து கொண்டிருந்த வியாபார தொடர்புகளை துண்டிக்கும் நோக்குடன் எகிப்து மீது படைஎடுத்தான்.ஆனால் 1798 இல் நைல் நதிக்கரையில் நடந்த போரில் பிரிட்டிஷ் கடற்ப்படை தலைவனான நெல்சன்நெப்போலியன் படைகளை தோற்கடித்தான். அதனால் கிழக்கு நாடுகளை பிடிக்க நெப்போலியன் செய்த முயற்சிதோல்வியடைந்தது. இதற்கிடையில் பிரான்சில் அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டன. நெப்போலியன் அங்கு சென்று ஆட்சியை கவிழ்த்து விட்டு புதிய ஆட்சி அமைப்பை ஏற்படுத்தினான்.அதன் படி கான்ஸல் என்ற பட்டத்துடன் பல அதிகாரங்கள் நெப்போலியன் கைக்கு வந்தன . ஆலோசனை குழுக்களும் சட்ட சபைகளும் அமைக்கப்பட்ட போதிலும் உண்மையான அதிகாரங்கள் நெப்போலியனிடம் இருந்தன. பிரெஞ்சு புரட்சியினால் மக்கள் சோர்ந்து போயிருந்தனர்.அதன் காரணமாக நெப்போலியன் மூலமாக நல் ஆட்சி கிடைக்கும் என்று கருதி அவரை ஆதரித்தனர்.மக்கள் ஆதரவுடன் 1804 இல் நெப்போலியன் பிரெஞ்சு நாட்டின் சக்கவர்த்தியானான்.அது முதல் 1815 வரை ஐரோப்பாவின் சரித்திரத்தை நெப்போலியன் தான் எழுதினார் என்று கூறலாம். நிர்வாகத்தில் பல சீர்திருத்தங்கள் செய்தான். குழப்பத்தோடு இருந்த சட்டங்கள் தெளிவுபடுத்தப்பட்டன.நெப்போலியனின் நிர்வாக சீர்திருத்தங்களால் பிரான்ஸ் மட்டுமன்றி மற்ற ஐரோப்பிய நாடுகளும் பயனடைந்தன.ஆனால் நெப்போலியன் மேலும் மேலும்தன் ராஜ்ஜியத்தை விரிவுபடுத்த விரும்பினார். முக்கியமாக பிரிட்டனை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர திட்டமிட்டான்.நெப்போலியனின் போக்கை நன்கு அறிந்த பிரிட்டன் ஆஸ்திரியா,ரஷ்யா,பிரஷ்ஹியாஆகிய நாடுகளுடைய ஒத்துழைப்புடன் தன்னை பலப்படுத்திக்கொண்டது . 1805 இல் ஸ்பெயின் நாட்டின் துணையுடன் பிரிட்டன் மீது நெப்போலியன் படைஎடுத்தான்.ஆனால் ட்ரபாலகர் என்ற இடத்தில் நடந்த போரில் நெப்போலியன் படையை ஆங்கிலேய தளபதி நெல்சன் தோற்க்கடித்தான்.ஆயினும் இந்திலாந்து நாட்டின் நேச நாடுகளான் ஆஸ்திரியா,ரஷ்யா,பிரஷ்யா ஆகிய நாடுகளை நெப்போலியன் கைப்பற்றினான்.1806 இல் நெப்போலியன் ஈடு இணையற்ற சக்கரவர்த்தியாக விளங்கினான். எனினும் பிரிட்டனை தோற்க்கடிக்க வேண்டும் என்ற ஆவேசம் அவர் தூக்கத்தை விரட்டிக்கொண்டிருந்தது. தன் ஆதிக்கத்தில் உள்ள ஐரோப்பிய நாடுகள் பிரிட்டனுடன் வர்த்தக உறவுகொள்ளக்கூடாது என உத்தரவிட்டார்.இந்த உத்தரவினால் பிரிட்டன் பாதிப்படையவில்லை.ஐரோப்பியநாடுகள் தான் பாதிப்படைந்தன. ஸ்பெயின்,போர்த்துக்கல் ஆகிய நாடுகளை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர நெப்போலியன்செய்த முயற்சிகள் அந்த நாடுகளில் நெப்போலியனுக்குஎதிர்ப்பை உண்டாக்கின.ஸ்பெயின் நாட்டின் சில பகுதிகளில் நெப்போலியன் படைகள் தோற்றன .1812 இல் ரஷ்யா மீது நெப்போலியன் படைஎடுத்தான்.அந்நாட்டில் குளிர்காலம் தொடங்கியிருந்ததால் நெப்போலியன் படைகள் பெரும்சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டது. ரஷ்யாவுக்கு சென்ற 450 ,000பிரான்ஸ் நாட்டு வீரர்களில் வெறும் 20 ,000 பேரே உயிருடன் திரும்பினர்.அந்த பெரும் தோல்வி நெப்போலியன் ஆட்ச்சியை ஆட்டம் காண செய்தது . பல ஐரோப்பிய நாடுகள் நெப்போலியனை எதிர்க்க முடிவு செய்தன.இங்கிலாந்து ஆஸ்திரியா, ரஷ்யா, பிரஷ்யா ஆகிய நாடுகள் பிரான்ஸ் மீது படையெடுத்தன .1814 இல்நடந்த போரில் நெப்போலியன் தோற்க்கடிக்கப்பட்டு எல்பாதீவுக்கு நாடுகடத்தப்பட்டான்.ஆனால் சில நாட்களில் அங்கிருந்துதப்பி வந்து மறுபடியும் படைகளை திரட்டி போருக்கு தயாரானான் . 1815 இல் வாட்டர்லூ என்ற இடத்தில் நெப்போலியன் படைகளும்,நெல்சன் தலைமையில் பிரிட்டிஷ் படைகளும் சந்தித்தன.கடும் போர் இடம்பெற்றது.நெப்போலியனின்துணை தளபதி படைகளுடன் வந்து சேர ஏற்பட்ட தாமதம் காரணமாகவே நெப்போலியன் தோல்வியடைந்தான்.பாரிஸ் நகருக்கு திரும்பி சென்ற நெப்போலியன் ஆட்சிமன்ற குழுவினருடன் ஆலோசனை நடத்தினான்.நெப்போலியன் பதவி விலகினால் தான் பிரிட்டிஷ் கோபத்தை தணிக்கமுடியும் என சிலர் கருத்து தெரிவித்தனர். அதனால் நெப்போலியன் பதவி விலகினார். போசிடி என்பவன் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது. மாறுவேடத்தில் அமெரிக்காவுக்கு தப்பி செல்லும் படி நெப்போலியனுக்கு சிலர் யோசனை தெரிவித்தனர்.ஆனால் மாறுவேடத்தில் தப்பி செல்லநெப்போலியன் மறுத்துவிட்டான். புதிதாக பதவியேற்ற போசிடி எப்படியாவது நெப்போலியனை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டுமென திட்டம் தீட்டினான்.அவன் வகுத்த திட்டத்தின் படி நெப்போலியன் கப்பலில் புறபட்டான்.கப்பல் பிளிமத் என்ற துறைமுகத்தை அடைந்ததும். இங்கிலாந்து இராணுவத்தினர் அவரை கைது செய்தனர்.நெப்போலியனுக்கு மரண தண்டனை விதிப்பதா?அல்லது ஆயுள் காலம் முழுவதும் காவலில் வைப்பதா என்று இங்கிலாந்துஅரசு யோசித்தது.இறுதியில் ஐரோப்பாவில் இருந்து 10,000 கி மீட்டர் தூரத்தில் உள்ள ஹெலீனா என்ற தீவில் சிறை வைக்க தீர்மானித்தது.

நெப்போலியன் 2

நெப்போலியனின் சிறை வாழ்க்கை: 1815 ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி கப்பலில் ஹெலீனா தீவுக்கு நெப்போலியன் கொண்டு போகபட்டான்.புத்தகங்களை படிப்பதில் தன் நேரத்தை செலவிட்டார்.முன்பு தங்க தட்டில் சாப்பிட்டவர் பின்னர் பீங்கான் தட்டில் சாப்பிட்டார் .ஆரம்பத்தில் நெப்போலியனுக்கு செய்துகொடுக்கபட்ட வசதிகள்குறைக்கபட்டன.சுகாதார வசதிகள் இல்லாத அறையில் அவர் இருந்தார்.எலிகள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் இரவில் தூக்கம் இன்றி தவித்தார். நாளுக்கு நாள் அவரது உடல் நலம் சீர்கெட்டது.தனக்கு மரணம் நெருங்குகிறது என்பதை உணர்ந்து கொண்டு தனது மரண சாசனத்தை எழுதினார்."நான் இறந்த பின்என் உடலை சேன் நதிக்கரையில் புதைக்க வேண்டும் .என் மகனையும் மனைவியையும் பகைவரிடம் இருந்து காப்பாற்ற வேண்டும். இறந்துவிட்ட என் நண்பர்களின் குடும்பத்தினருக்கும் உயிரோடு இருக்கும் நண்பர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் " என்பதே அவருடைய மரண சாசனம். நெப்போலியனின் மரணம்: நெப்போலியனின் உடல் நிலை மோசமடைந்தது. 1821 மே 15 ஆம் திகதி தனது 52 ஆவது வயதில் மரணமடைந்தார்.அவர் உடலை பிரான்சிற்கு கொண்டு செல்ல அனுமதி கிடைக்கவில்லை .ஹெலேனா தீவிலேயே இராணுவ மரியாதையுடன் அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.நெப்போலியனின் மரணத்துக்கு காரணம் என்ன என்பது பற்றி மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. இரப்பையில் இடம்பெற்ற புற்று நோய் காரணமாக அவர் இறந்ததாக வைத்தியர்கள் கொடுத்த சான்றுதல்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் மெல்ல மெல்ல கொல்லக்கூடிய விஷத்தை உணவில் கலந்து அவரை கொன்றிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.நெப்போலியனின் மனைவியின் பெயர் யோசப்பின்(Josephine).இவருடைய முதல் கணவரின் பெயர் அலெக்சாண்டர் போகர்னே. யோசப்பின்னுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன.பிரெஞ்சு புரட்ச்சியின் போது போர்கனின் மரணமடைந்தார்.அதன் பின் நெப்போலியன் அவளை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஜோசப்பின் மீது நெப்போலியன் உயிரையே வைத்திருந்தான்.போருக்கு போனாலும் அவளுக்கு தவறாது கடிதம் எழுதுவான்.இவ்வாறு உயிருக்குயிராக காதலித்தவள் தனக்கு ஒரு குழந்தையை பெற்று தரவில்லைஎன்பதற்காக அவளை விவாகரத்துக்கு செய்தான்.என்றாலும் அவளுக்கு மாளிகை ஒன்றை கொடுத்து அங்கு வசிக்க செய்தான்.வாரிசு வேண்டும் என்பதற்காக ஆஸ்திரிய மன்னனின் மகள் லூசியாவை(Marie-Louise) 1810ஏப்ரலில் மறுமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.யோசப்பினை விவாகரத்து செய்த போதிலும்அவள் மீது நெப்போலியன் அளவற்ற அன்பு கொண்டிருந்தார்.இறுதி மூச்சை நிறுத்தும் அவர் உதடுகள் பிரான்ஸ் யோசப்பின் என்று தான் முணுமுணுத்தன. நெப்போலியனுக்கு சில அபூர்வ ஆற்றல்கள் இருந்தன.இரவில் சில நிமிடங்கள் தான் தூங்குவார்.பகலில் அவ்வப்போது தூங்குவார்.குதிரை சவாரி செய்யும் போது கூட சிறிது தூங்குவார்.என்றாலும் மிகுந்த எச்சரிக்கையோடு இருப்பார்

தாமஸ் அல்வா எடிசன்

அமெரிக்காவில் இரும்புத் தாதுவுக்குத் தேவையும் விலையும் மிக அதிகமாக இருந்ததால்,பாறைகளில் இருந்து இரும்புத் தாது பிரித்தெடுக்கும் கண்டுபிடிப்பில், 1897-ம் வருடம் இறங்கினார் எடிசன். அவரது கண்டுபிடிப்பைச் செயல்படுத்த பெரிய நிறுவனங்கள் முன்வந்தன. ஆனால், அவற்றை நிராகரித்து தனது முழு செல்வத்தையும் முதலீடு செய்து சொந்தமாகத்தொழிற்சாலை தொடங்கினார் எடிசன். மலைகளை உடைக்க, உடைத்த பாறைகளைக் கற்களாக்க,கற்களை மணலாக்க, மணைலப் பிரிக்க என எல்லாவற்றுக்கும் பெரிய அளவில் இயந்திரங்களை நிறுவினார் ஒரு டன் இரும்புத் தாது ஆறரை டொலருக்கு விற்பனையான நேரத்தில், நான்கு டொலர் அடக்க விலையில் எடிசன் உற்பத்தி செய்தார். விற்பனைதொடங்கிய நேரத்தில் அமெரிக்காவின் மிசாபா மலைப்பகுதிகளில் உயர் ரக இரும்புத் தாது பெருமளவு இருப்பது கண்டுபிடிக்கப்படவே, இரும்பு விலை மடமடவென ஒரு டன் மூன்று டொலராகக் குறைந்தது. நஷ்டமடைவது தவிரவேறு வழியில்லை எனத் தெரியவந்ததும், உடனே தொழிற்சாலைய மூடினார். எடிசனிடம் அவரது நண்பர்கள், ‘‘சிலருடன் கூட்டு சேர்ந்திருந்தால், ஒரேய‌டியாக நஷ்டமடைந்து இருக்க வேண்டியதில்லையே’’ என்றார்கள். ‘‘நஷ்டம் ஏற்படும் ஒரு வழியைத் தெரிந்து கொண்டது எனக்கு லாபமே! தோல்வி என்பது வீழ்ச்சியல்ல,படிப்பினையே!’’ என்றபடி மீண்டும் தன் ஆராய்ச்சியைத் தொடங்கினார்எடிசன். கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான கொங்கிரீட் கலவையைக் கண்டுபிடித்து, உடனே தயாரிப்பில் இறங்கி, மூன்றே வருடங்களில் இழந்த சொத்தைவிட அதிகமாகச் சேர்த்தார். அமெரிக்காவில் சாமுவேல் எடிசன் மற்றும் நான்ஸி எலியட் தம்பதியின் நான்காவது மகனாக, 1847-ம் வருடம் பிறந்தார் தோமஸ் அல்வா எடிசன்.தலை பெரிதாக இருந்ததால், ‘மண்டு, மூளைவளர்ச்சி குறைந்தவன்’ என ஆசிரியரும் மாணவர்களும்கிண்டல் செய்யவே, பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு தாயிடமே பாடம் பயிலத் தொடங்கினான் சிறுவன் தோம‌ஸ். ஊரில் விளையும் பொருட்களை புகை வண்டியில் நகரத்துக்குக் கொண்டு சென்று விற்பனை செய்தும், நகரத்தில் இருந்து பத்திரிகைகள் வாங்கி வந்துமற்ற ஸ்டேஷன்களில் விற்பனைசெய்தும் சம்பாதித்தான். உள்நாட்டுப் போர் காரணமாக, பத்திரிகைகளுக்கு நல்ல வரேவற்பு இருப்பதை அறிந்து, ரெயில்வெ அதிகாரிகளின் உதவியுடன் புகை வண்டியிலேயே இயந்திரத்தை வைத்து, நகரத்துச் செய்திகளை அச்சடித்து ‘வீக்லி ஹெரால்ட்’ பத்திரிகையை விற்கத் தொடங்கினான். ஆசிரியர், அச்சடிப்பவர், விற்பைனயாளர் என எல்லா வேலையையும் செய்த எடிசனுக்கு அப்போது வயது 15. எடிசன் தன் முதல் கண்டுபிடிப்பாக 1868-ல் பதிவு செய்த ‘வாக்குப்பதிவு இயந்திரம்’ அரசினால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. தந்தி மற்றும் பங்குச்சந்தை சாதனங்களைத் தொடர்ந்து மின்சார விளக்கைக் கண்டுபிடித்ததும், உலகமே இவரைத் தலையில் வைத்துக் கொண்டாடியது. பாடும் மற்றும் பேசும் ஃபோனோகிராஃப் இயந்திரம் இவரை பெரும் கோடீஸ்வரனாக்கியது. ஒலியைப் போலவே ஒளியையும் பதிவு செய்ய முடியும் என ‘சினிமாவைக் கண்டுபிடித்ததும், ‘கண்டு பிடிப்புகளின் தந்தை’ எனப் புகழாரம் கிடைத்தது! 1914-ம் வருடம் அவரது சோதனைச்சாலையில் மிகப் பெரிய தீ விபத்து ஏற்பட்டது. ஆறுதல் சொல்ல வந்த நண்பர்களைப் பார்த்து,‘‘தீ எவ்வளவு அழகாக எரிகிறது பாருங்கள். ரசாயனப் பொருட்களைத் தவறானவிகிதத்தில் கலந்துவிட்டேன் என்பதை , 67-வது வயதில் எனக்குக் கற்றுக்கொடுத்த இந்த தோல்வியும் எனக்குப் படிப்பினையே’’ என்றார் எடிசன் சிரித்தபடி.தனது 81-வது வயதில் மரணமடையும் வரை 1,093 கண்டுபிடிப்புக்களை எடிசன்பதிவு செய்ய முடிந்ததற்குக் காரணம், தோல்விகளை வீழ்ச்சியாகக் கருதாத இவரது தன்மையே!

அலெக்சாண்டர்

கிரேக்க மன்னரான அலெக்சாண்டர்,உலகில் இதுவரை தோன்றிய மாவீரர்களில் தலைசிறந்தவராக போற்றப்படுகிறார். 20 வயதில் மன்னராகி, 32 வயதுக்குள் பல நாடுகளை வென்ற அலெக்சாண்டர், வரலாற்றில் அழியா இடம் பெற்றவர். கிரேக்கத்தில் மாசிடோனியா நாட்டை ஆண்டு வந்த பிலிப் என்ற மன்னரின் மகன் அலெக்சாண்டர், கி.மு 356 ஆம் ஆண்டில் பிறந்தார்.சிறுவயதிலேயே சிறந்த வீரராகத் திகழ்ந்தார்.குதிரை சவாரி செய்வதில் அவருக்கு எவரும்நிகரில்லை என்று புகழ் பெற்றார். கிரேக்க நாட்டின் மாபெரும்சிந்தனையாளர் சோக்கிரடிசின் சீடரான பிளேட்டோவின் சீடர் அரிஸ்டோட்டில்,அலெக்சாண்டரின் குருவாக அமர்த்தப்பட்டார்.அதனால அலேசாண்டர் வீரராக மட்டுமின்றி,சிறந்த ராஜதந்திரியாகவும்,நீதமானாகவும் உருவானார். பிலிப் மன்னர் ஒரு போரில் ஈடுபட்டிருந்த போது கொலை செய்யப்பட்டார்.அதைத்தொடர்ந்து அலேசாண்டர் மன்னரானார்.அப்போது அவருக்கு வயது 20 . அப்போது நாட்டின் வடபகுதியில் கலவரங்கள் நடந்து வந்தன.அவற்றை அலெக்சாண்டர் அடக்கினார்.கிரேக்கம் முழுவதும் அவர் ஆட்சியின் கீழ் வந்தது.கிரேக்க நாகரிகத்தை வெளிநாடுகளிலும் பரப்ப விரும்பிய அலெக்சாண்டர், பாரசீகத்தின் மீது படையெடுத்தார்.அவருடைய படையில் 20 ஆயிரம் காலாட்படையினரும், 5 ஆயிரம் குதிரை வீரர்களும் இருந்தனர்.யுத்தத்தில்.பாரசீக மன்னர் தோல்வி அடைந்தார்.சிறை பிடிக்கப்பட்ட அவருடைய தாயாரையும், மனைவியையும் அலெக்சாண்டர் கண்ணியத்துடன் நடத்தினார். அலெக்சாண்டர் - இந்தியா அந்த சமயத்தில் இந்தியாவில் சிந்து வெளிப்பகுதியை பல சிற்றரசர்கள் ஆண்டு வந்தனர்.அலெக்சாண்டர் கி.மு326 இல் சிந்து ஆற்றை கடந்து இந்தியாவுக்குள் நுழைந்தார். அலெக்சாண்டரின் போர்த்திறனை நன்கு அறிந்த தட்சசீல அரசன்,அவரை வரவேற்று நட்புக் கொண்டான்.ஆனால் புருஷோத்தமன் என்ற மன்னன் அலெக்சாண்டரை எதிர்த்தார்.ஜீலம் நதிக்கரையில் இரு படைகளும்மோதின.அதில் வழக்கம் போல அலெக்சாண்டர் வென்றார். தோல்வி அடைந்த புருஷோத்தமரை பார்த்து"நான் உங்களை எவ்வாறு நடத்தவேண்டுமென்று நினைக்கிறீகள்?"என்று அலெக்சாண்டர் கேட்டார்."என்னை ஓர் அரசனைப் போல நடத்த வேண்டும் என்று விரும்புகிறேன்"என்று புருஷோத்தமர் தைரியமாகப் பதில் அளித்தார்.அவருடைய வீரத்தை மெச்சிய அலெக்சாண்டர்,தான் கைப்பற்றிய நாட்டை புருஷோத்தமருக்கே திருப்பிகொடுத்துவிட்டார். அலெக்சாண்டர் - இறுதிக்காலம் மேலும் பல நாடுகளை வெல்ல வேண்டும் என்று அலெக்சாண்டர் விரும்பினார்.அனால் பல ஆண்டுகளாகப் போர் புரிந்துசலித்துப்போன போர் வீரர்கள்,தாய் நாட்டுக்குத் திரும்ப வேண்டும் என்று கோரி கலகத்தில் ஈடுபட்டனர்.இதனாற் அலெக்சாண்டர் வேறு வழியின்றி,கிரேக்கத்துக்குத் திரும்பி செல்ல முடிவு செய்தார்.போர் வீர்கள் பலர்தரை வழியாகவும்,சிலர் கடல்வழியாகவும் திரும்பிச்சென்றனர்.அலேசாண்டர் தரை மார்க்கமாகத் திரும்பிச் சென்ற போது,பாபிலோன் நகரில் விஷ ஜுரம் கண்டு மரணம் அடைந்தார்.அப்போது அவர்க்கு வயது 32

ஜீலியஸ் சீஸர்

கி.மு. 75-ம் வருடம். சட்ட திட்டங்களில் நிபுணத்துவம்பெறுவதற்காக, கிரேக்க நாட்டுக்கு கடல் வழிப் பயணமானார் 25 வயது இளைஞரான ஜூலியஸ் சீஸர். எதிர்பாராதவிதமாக கப்பலில்இருந்த அனைவரும் கடற்கொள்ளையர்களால் பிடிக்கப்பட்டார்கள். ‘20 தங்கக் காசுகள் கொடுத்தால், உங்கள் நபர்களை விடுதைலை செய்கிறோம்’ என ஒவ்வொருவரின் நாட்டுக்கும்தனித்தனியாகத் தகவல் அனுப்பினார்கள். உடேன ஸீஸர்கோபமாகி, ‘‘என் விலை 20 தங்கக் காசுகள்தானா?! என்னைக் கேவலப்படுத்தாதீர்கள். 50 தங்கக் காசுகளாவது கேளுங்கள்’’ என்றார் தோரைணேயாடு. கொள்ளையர்கள் அலட்சியமாகச் சிரிக்க, ‘‘சிரிக்காதீர்கள். உங்கள் அனைவரையும் கழுத்தைஅறுத்துக் கொன்றுவிட என்னால் முடியும்’’ என்றார். கொள்ளையர்கள் மேலும் சிரித்தார்கள். சக பயணி ஒருவர், ‘‘எதற்காக இப்படி உன்னை நீயெ உயர்வாகப் பேசி கொள்கிறாய்!அது உனக்கே ஆபத்தாக முடியலாம்’’ என்று எச்சரிக்க, ‘‘நான் யார் என்பைத நான்தான் சொல்ல வேண்டும். எனக்காகப் பிறர் விளம்பரம் செய்யமாட்டார்கள். அரச நீதிநூல்களில் சொல்லியிருப்பைதத்தான் நான் கடைப்பிடித்து வருகிறேன்’’ என்றார் சீஸர். பின்னர், 38 நாட்கள் பயணக் கைதியாக இருந்து வெளியே வந்ததும்,வீரம் மிக்க ஆட்கைளத் திரட்டிக்கொண்டு போய் கடற்கொள்ளையர்களுடன் போரிட்டு, தான் சொன்னது போலவே அவர்கள் அத்தனை பேரையும் கழுத்தை அறுத்துக் கொன்றார். இந்த வெற்றியைப் பெரும் பொருட்செலவு செய்து கொண்டாடினார். ‘‘ஏன் இப்படிச் சுய தம்பட்டம் அடிக்கிறர்கள்?’’ எனப் பிறர் கேட்டபோது, ‘‘உன் தகுதியை நீயே உரக்கச் சொல்.பிறருக்காகக் காத்திருக்காதே!’’ என கூறினார். அறுவை சிகிச்சை மூலம் பிறந்த முதல் குழந்தை ஜூலியஸ் சீஸர். ரோம் நகர அதிகாரத்தில் இருந்த மரியஸ், சஸரின் உறவினர். எனவே , சஸரால் மிக எளிதாக படைத் தலைவராகி, போர்களில் பங்கேற்று வெற்றிகள் குவிக்க முடிந்தது.மரியஸுக்குப் பின் ஆட்சியைப் பிடித்த ‘சுல்லா’வின் பேத்தியைத் திருமணம் செய்துகொண்டு, செனட் சபையில் முக்கிய இடம் பிடித்தார் சீசர். மிகப்பெரும் செலவில் பிரமாண்டமான ஸ்டேடியம் அமைத்து, ‘அடிமைகளின் மரண விளையாட்டு’ நடத்தி, மக்களிடம் பெரும் புகழ் பெற்றார். கி.மு.58-ல் ஐரோப்பிய கண்டங்களில் உள்ளபல்வேறு நாடுகளில் வாழ்ந்து வந்த பழங்குடிகள்இடம்பெயர்ந்து, ‘கவுல்’ நோக்கி வருகிறார்கள் என்றதும், அவர்களால் ரோம் நகருக்கு ஆபத்து வருமெனப் படையுடன் கிளம்பினார் சீஸர். சுமார் ஒன்பது ஆண்டுகள் நடந்த இந்த ‘கவுல்’ போராட்டத்தில், சுமார் இருபது லட்சம் பழங்குடியினர் கொல்லப்பட்டனர். பத்து லட்சம் பேர் அடிமைகளாக விற்கப்பட்டனர். இந்தப் போர், சீஸ‌ருக்கு செனட் சபையிலும், மக்கள் மனதிலும் நிரந்தர இடத்தையும், பெரும் வீரன் என்கிற புகைழயும் பெற்றுத்தந்தது. ரோம் நகரின் அறிவிக்கப்படாத சர்வாதிகாரியாகச் செயல்படத் தொடங்கினார் ஜூலியஸ் சீஸர். ரோமன் காலண்டர் மாற்றியைமக்கப்பட்டது. நகெரங்கும் சீசரின் சிலைகள் நிறுவப்பட்டன. நாணயங்களில் அவரது உருவம் பொறிக்கப்பட்டது. தன் புகழ்இந்த பூமி உள்ளவைர நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக, பெரும் செலவுகள் செய்தார் சீஸர்.அவரை இனியும் விட்டுவைத்தால், ரோம் சீரழிந்துவிடும் என அவருக்கு வேண்டப்பட்டவர்கள் சிலரே கொல்லத் துணிந்தார்கள். எல்லோரும் அவைரக் கத்தியால் குத்த, மகன் போல்தான் நினைத்திருந்த புரூட்டஸிடம் ஓடினார் சீசர். அவனும் கத்தியெடுத்துக் குத்தேவ, ‘‘யூ டூ புரூட்டஸ்’’ என்று பதறித் துடித்தபடி உயிரைவிட்டார். ஜூலியஸ் சீசர் விமர்சனத்துக்கு உரியவராக இருந்தாலும், அவைரப் புகழின் உச்சியில் ஏற்றிவைத்தது, ‘உன் தகுதியைநீயே உரக்கச் சொல். பிறருக்காகக் காத்திருக்காதே!’ என்கிற அவரது மந்திரச் சொல்தான்.

பெருந்தலைவர் காமராஜர்

1903- ஆம் வருடம், ஜுலை மாதம் 15-ஆம் தேதி, காமராஜர் பிறந்தார். அவருக்கு குல தெய்வமான காமாட்சியம்மாளின் பெயரையே முதலில் சூட்டினார்கள். கண்ணனைப் பாரதி”கண்ணம்மா” ஆக்கி அழைத்துப் பாடிப் பரவசப்பட்டதுபோல் ஆணாகப் பிறந்த காமராஜரை”காமாட்சி” ஆக்கி அனைவரும் அழைத்து மகிழ்ந்தார்கள். தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், தன் செல்லக் குழைந்தையை ”ராஜா” என்றே அழைத்து வந்தாள். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராஜ்’ என்று ஆனது. காமராஜருக்குப் பின்னர், சிவகாமி அம்மாள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.நாகம்மாள் என்று அந்தக்குழந்தைக்குப் பெயர் சூட்டினார்கள். காமராஜரும் தங்கையிடம், அன்பும் பாசமும் கொண்டிருந்தார். காமராஜர் தனது பள்ளிப் படிப்புக்காலங்களிலேயே, இளம் வயதிலேயே, விருதுப்பட்டியில் நடந்த பொதுக்கூட்டங்களுக்குப் போகலானார். ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்திஆண்டு கொண்டிருந்த காலம் அது. காமராஜர் இளம் வயதில் கேட்ட பொதுக் கூட்டங்களே அவரைப் பிற்காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரராகக் மாற்றியது. ”தந்தையொடு கல்விபோம்” – என்பதற்கு ஒப்ப, காமராஜரின் தந்தை குமாரசாமி நாடாரின் மறைவிற்குப் பின் காமராஜரின் பள்ளிப்படிப்பு முற்றுப்பெற்றது. வியாபாரங்களில் ஈடுபட்டார். முதலில் துணிக்கடையிலும், பின்னர் திருவனந்தபுரத்தில் மரக்கடை வைத்து நடத்திய காசியாராயண நாடார் மரக்கடையிலும் சிறிது காலம் வியாபாரத்தில் ஈடுபட்டார். அவரது கவனமெல்லாம் தேச விடுதலையிலேயே இருந்தது. வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டார். உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கு பெற்றார். காலப்போக்கில் காமராஜர், சத்தியமூர்த்தி தொண்டனாகி, காங்கிரஸ் பேரியக்க உறுப்பினராகி முழு நேரத் தேசப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். விடுதலைப் போரில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணிகள் பகிஷ்காரம், கொடிப் போராட்டம், உப்பு சத்தியாக்கிரகம், சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆகியவற்றில் காமராஜர் பங்கேற்றுச் சிறை தண்டனை பெற்றார்.. அடுத்தடுத்துப் போராட்டங்கள் அனைத்திலும்ஈடுபட்டு பலமுறை சிறை தண்டனைகளை அனுபவித்தார் காமராஜர்.. தமிழ்நாடு காங்கிரஸில்,”காமராஜர் காங்கிரஸ்” என்ற நிலை உருவாகியது. காமராஜர் தனது தியாகத்தாலும், சலியாத உழைப்பாலும், தொண்டுகளினாலும் உயர்ந்த நிலையை அடைந்தார். 1952-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காமராஜர் சாத்தூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். சுமார் பன்னிரண்டு ஆண்டுகாலம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து தமிழ்நாட்டிலே காங்கிரஸ் பேரியக்கத்திற்குப் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தித் தந்தார். 1954- ஆம் ஆண்டு காமராஜர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆனார். தலைவர் பதவியைத் துறந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறந்தார். குடியாத்தம் தொகுதியில் சட்டசபைக்குத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். மேல்சபை உறுப்பினராகி அவர் முதல் அமைச்சர் பதவியை வகித்திருக்கலாம். குறுக்கு வழியில் உள்ளே புகுந்து கொள்ள என்றும் விரும்பாத பெருந்தலைவரே கு. காமராஜர். இங்கே நான் காமராஜர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகிச் செய்த சாதனைகளையே பட்டியலிட்டு காட்ட முன் வந்திருக்கிறேன். அதிகம் படிக்காத பெருந்தலைவர் காமராஜர் கல்விக்குச் செய்த சாதனைகள் எண்ணிலடங்காதவைகளாகும். ஏழை, எளியவர், உயர்ந்தவர், தாழ்ந்தோர், ஆக எல்லோருக்கும் கல்வி-இலவசக் கல்வி – பட்டி, தொட்டிகளில் எல்லாம் பள்ளிக்கூடங்கள் – இலவச மதிய உணவுச் சீருடைகள், இப்படிப் பலதிட்டங்களைத் தீட்டி அமுல்படுத்தினார் காமராஜர். தமிழகத்தில் கல்விச் செல்வம் பெருகியது. கிராமங்கள் தோறும் ஓராசியர் பள்ளிகள் திறக்கப்பட்டன. கல்விக் கேள்விகளில் மட்டும் சிறந்து விளங்கினால் போதுமா? நாட்டிலே பஞ்சம், பசி, வேலையில்லாத் திண்டாட்டங்கள் விலகி விடுமா? சிந்தித்தார் காமராஜர். திட்டங்கள் தீட்டினார். நாட்டிலே புதுப் புதுத் தொழிற்சாலைகளை நிறுவச்செய்தார். தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார். காமராஜரின் திட்டங்களால் தமிழ்நாடு முன்னணியில் நின்றது. காமராஜரின் கல்வித் திட்டங்கள் நிறைவேற உடனிருந்து பாடுபட்டவர் அந்நாள் பள்ளிக் கல்வி இயக்குனர் திரு.நெ.து. சுந்தரவடிவேலு ஆவார். அதேபோல், காமராஜரின் தொழிற்திட்டங்கள் நிறைவேறக் காரணகர்த்தாவாகஇருந்தவர் அன்றைய தொழில் அமைச்சர் திரு. ஆர். வெங்கட்ராமன் ஆவார். 1957 – ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் அமோக வெற்றிப்பெற்றது. பெருந்தலைவர் காமராஜரே மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சரானார். ஒன்பது ஆண்டுகாலம் தமழக முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராஜர், தான் கொண்டு வந்த கே. பிளான் மூலம் தானே முதலமைச்சர் பதவியைத் துறந்தார். அகில இந்திய காங்கிஸ் தலைவரானார். பெருந்தலைவர் காமராஜர் ஆண்ட காலத்தைத் தமிழ்நாட்டின் பொற்காலம் என்பார்கள். அந்தக் காலத்தை உங்கள் பார்வைக்கும், படிப்புக்கும் கொண்டு வருவதற்காகவே நூல் வெளியிடப்படுகிறது. ”காமராஜரின் சாதனைகள்” என்னும் நூலினைக் காமராஜர் நூற்றாண்டு விழா,ஆண்டிலே வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதும், பெருமைக்கு உரியதுமாகும். முதலமைச்சராகக் காமராஜர் தமிழகத்தில் ஒன்பது ஆண்டுகாலம் நல்லாட்சி புரிந்தார். கல்விக்கும், தொழிலுக்கும்,காங்கிரஸ் கட்சிக்கும் அவர் செய்த சாதனைகள் கணக்கில் அடங்காதவைகளாகும். விருதுநகரிலே ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, போதிய கல்வி கற்கவும் வசதியற்ற சூழ்நிலையிலே வளர்ந்து, வாழ்ந்து, பின்னர் அரசியலிலே தொண்டராக ஒரு மாபெரும் கட்சியிலே இணைந்து, தனது உழைப்பால், தொண்டால் படிப்படியாக உயர்ந்தவர் தான் பெருந்தலைவர் காமராஜர். அவரது சாதனைகள் யாவுமே சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவைகள

கௌதம புத்தர்

துன்பங்கள் நிறைந்த வாழ்வில் இருந்து மனிதர்கள் விடுபட்டு, இன்பமாக வாழேவண்டும் என்பதற்கான வழிதேடி, அரண்மைனையவிட்டு சித்தார்த்தன் வெளியேறியபோது அவனுக்கு வயது 29. முதலில், யோக மந்திரமுறைகைள முழுமூச்சுடன் கற்று, தேடிப் பார்த்தான். தேடிய விடை கிடைக்கவில்லை. அடுத்ததாக, உணவு, உறக்கம், ஓய்வு என எல்லாவற்றையும் துறந்து, உட‌லை வருத்தி தீவிர தியானத்தில் ஆழ்ந்தான். கிட்டத்தட்ட மரணத்தின் வாசைலத் தொட்டபோதுதான், தன் தேடலுக்கான விடை, தியானத்திலும் இல்லை எனக்கண்டுகொண்டான். தன் ஆறுவருட கால தியானத் தேடல் வீணாகிப்போனதே என்ற எண்ணத்தில் இருந்தபோது, பணிப் பெண் பால்சோறு கொண்டுவந்தாள். மிக நீண்ட நாட்கள் கழித்து உணைவ அனுபவித்துச் சாப்பிட்டேபாது, சித்தார்த்தன் மனதில் ஒரு மின்னல் மின்னியது. தன் தேடலுக்கான விடை கிடைத்ததுபோல் இருந்தது. உடேன, அரண்மைனைய விட்டுக் கிளம்பிப் போய், போதி மரத்தடியில் அமர்ந்தான். இத்தனை நாட்களாக வெளியில் தேடிக்கொண்டு இருந்த விடையை தனக்குள் தேடத் தொடங்கினான். 49 நாட்கள் கடந்து ஒரு பொளர்ணமி தினத்தில் தேடலுக்கு விடை கிடைத்தது. மனிதகுலம் முழுவதுக்கும் இன்பம் தரக்கூடிய மந்திரச் சொல் ‘இக்கணத்தில் வாழு’ என்பதாகஉதித்தது. கி.மு.563‍ல் நேபாள நாட்டின் கபிலவாஸ்துவில், அரசன் சுத்தாதனனுக்கும் அரசி மாயாவதிக்கும் கெகௗதமன் மகனாகப் பிறந்தேபாதே, ஜோதிடர்கள், ‘இவன் அரசனாக அல்லது ஆன்மிககுருவாக உலைகையே ஆட்சி புரிவான்’ என எதிர்காலத்தைக் கணித்துவிட்டார்கள். மகன் பேரரசனாக வேண்டும் என்பதற்காக அரண்மனைக்கு உள்ளேயே எல்லாக் கலைகளையும் கற்றுக் கொடுத்தான் சுத்தாதனன். 16 வயதிலேயே திருமணமும் முடித்து வைத்தான். திகட்டத் திகட்ட இன்பம் அனுபவித்த சித்தார்த்தனுக்கு, ஒரே ஒருநாள் கிடைத்த வெளியுலக தரிசனம் அகக் கண்களை திறந்துவிட்டது. அரண்மனை, பதவி, செல்வாக்கு, புகழ், உணவு, உறக்கம், மனைவி, மகன்,பணியாட்கள் என அத்தைனயும் உதறித் தள்ளி, வெளியேறினான் சித்தார்த்தன். 35-வது வயதில் தன்னுடைய ஐந்தே ஐந்து சீடர்களுக்கு மட்டும், தான் கண்டுணர்ந்த உண்மைகளை சாரநாத்மான் பூங்காவில் அறிவித்தார் புத்தர். ‘‘மனித வாழ்வு என்பது இன்பம், துன்பம் இரண்டும் கலந்தது. ஆசையே துன்பத்துக்குக் காரணம். வாழ்வு சுலபமாக இருக்க வேண்டுமானால் சரியான சிந்தனை, சரியான புரிதல், சரியான பேச்சு, சரியான நடவடிக்கை, சரியான வாழ்வுமுறை, சரியான முயற்சி, சரியான பராமரிப்பு மற்றும் சரியானசெயல்பாடு ஆகியவை வேண்டும்!மனிதர்கள் நேற்றைய பயத்தினால், நாளைய வாழ்வை எண்ணி நடுங்குகிறார்கள். நேற்று நடந்தவற்றை உங்களால் மாற்ற முடியாது, நாளை நடப்பைதத் தடுக்க முடியாது. இன்றய பொழுதில், இக்கணத்தில் வாழுங்கள்! அதுதான் எல்லா துன்பங்களுக்கும் ஒரே தீர்வு!’’ என்றார் புத்த பெருமான். அவரது 80-வது வயதில், இரும்புக் கொல்லன் ஒருவன் ஆசையோடு கொடுத்த காளான் உணவைச் சாப்பிட்டதும், அதை உடம்பு ஏற்கவில்லை என்பைதயும், உயிர் பிரியும் நேரம் வந்துவிட்டது என்பைதயும் உணர்ந்துகொண்ட புத்தர், தம் பிரதம சீடர் ஆனந்தைனைஅழைத்து, மரத்தின்கீழே படுக்கை விரிக்கச் சொல்லி, நீட்டி நிமிர்ந்து படுத்து, ‘‘ஆனந்தா, இப்போது நான் மரண கணத்தில் வாழப்போகிறேன்’’என்று புன்னைகேயாடு சொல்லிவிட்டு, அமைதியாக உயிர் துறந்தார். வாழ்வின் எல்லா துன்பங்களையும் தீர்த்து, புது வழி காட்டும் அவரது ‘இக்கணத்தில் வாழு’ என்னும்மந்திரச் சொல்லின் மகத்துவம், வாழ்வின் ஒளிவிளக்காக மனிதர்களுக்குக் காலெமல்லாம் வழிகாட்டிக் கொண்டே இருக்கும்

லெனின்

விளாடிமிர் இல்யிச் உல்யேனாவ்(Vladimir Ilyich Lenin) என்னும் இயற்பெயர் கொண்ட லெனின், 17-வது வயதில் கைதுசெய்யப்பட்டு காவல் நிலையம் கொண்டுவரப்பட்டார். லெனினிடம் பொலீஸ் அதிகாரி, ‘‘உன் அண்ணன் ஜார் மன்னருக்கு எதிரான தீவிரவாதத்தில் இறங்கியதால் தூக்கிலிடப்பட்டு உயிர் இழந்தான். நீயும் ஏன் சுவருடன் மோதி, மண்டையை உடைத்துக் கொள்கிறாய்?’’ என்று கேட்டார். ‘‘என் எதிரேசுவர் இருப்பது உண்மைதான். ஆனால், அது பலவீன‌மானது. முட்டினாலே உடைந்துபோகும்’’ என்றார் லெனின் கோபத்துடன். ‘‘தீவிரவாதம், மக்கள் போராட்டம் போன்றவற்றை நசுக்கிவிடுவோம். உன்னால் எதுவும் செய்ய முடியாது’’ என்ற பொலீஸ் அதிகாரியிடம், ‘‘ ‘பாதை இல்லையென்று கலங்காதே... உருவாக்கு!’என புரட்சி இலக்கியங்-கள் எனக்குப் போதித்திருக்கின்றன’’ என்று உறுதியுடன் சொன்னார்.அப்படியே உருவாக்கவும் செய்தார். லெனின் 1870-ல் பிறந்தார். அலெக்சாண்ட‌ரையும், கார்ல்மார்க்ஸையும் மற்றும் புரட்சி இலக்கியங்கைளயும் லெனினுக்கு அறிமுகப்படுத்தினார் அவரதுஅண்ணன். தீவிரவாதப் போராட்டத்தில் இறங்கியதால், அண்ணன் தூக்கிலிடப்பட்டார். சிறைக்கு சென்றதால் லெனினுக்குச் சட்டக் கல்லூரியில் படிக்க அனுமதிமறுக்கப்பட்டது. ஆனாலும், நான்கு ஆண்டுகளில் முடிக்கவேண்டிய சட்டப் படிப்பை ஒன்ற‌ரை ஆண்டுகளிலேயே கல்லூரிக்குப் போகாமலே முடித்து, வழக்கறிஞராக மாறினார் லெனின். மார்க்ஸிசதத்துவத்தைப் பின்பற்றி, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் சுதந்திரம் பெறுவதில்தான் ரஷ்யாவின் எதிர்காலம் இருக்கிறது எனத் தீர்மானமாக நம்பி, ‘தொழிலாளர் விடுதைலை இயக்கம்’ தொடங்கினார். இந்தஇயக்கத்தின் மூலம் மார்க்ஸ் கொள்கைகளை நாடெங்கும் பரப்பி, தொழிலாளர்களிடம் சோஷலிசப் பிரசாரம் செய்தார். மக்களிடம் லெனினுக்கு செல்வாக்கு பெருகுவைதக் கண்ட ஜார் அரசு, 1895-ல் அவைரக் கைது செய்து சைபீரியாவுக்கு நாடு கடத்தியது. 1900-ம் வருடம் விடுதைலயானதும், ‘தீப்பொறி’(Spark) என்ற பத்திரிகையை நடத்தி, தொழிலாளர்கைள புரட்சிக்குத் தயார்படுத்தினார். 1905-ம் ஆண்டு லெனின் வழிகாட்டுதலில் நடந்த தொழிலாளர் புரட்சி, இராணுவத்தால் அடக்கப்பட்டது. லெனினைக் கைது செய்ய பொலீஸார் தீவிர வேட்டையில் ஈடுபடேவ, ரஷ்யாவைவிட்டு வெளியேறி, வெளிநாடுகளில் இருந்து போராட்டத்துக்கு வழிகாட்டத் தொடங்கினார் லெனின். முதலாம் உலகப் போர்(1914) காரணமாக ரஷ்யாவில் உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, வீதிகளில் மக்கள் உணவு கேட்டுப் போராடத் தொடங்கினர். அதிருப்தியைடந்த சோவியத் படைவீரர்கள் பலர் ராணுவத்தில் இருந்து வெளியேற, ‘புரட்சிக்குச் சரியான தருணம் இதுவே’ என்பைதை உணர்ந்த லெனின், 1917-ம் ஆண்டு ரஷ்யா வந்தார். அவரின் தூண்டுதலால் போராட்டக் குழுவினர் ஆங்காங்கே ரயில்வே ஸ்டேஷன், டெலிபோன் அலுவலகம், வங்கிகளை கைப்பற்றினர். ராணுவத்திலிருந்து விலகியவர்கள், போராட்டக் குழுவுடன் இணைந்து முதலாளிகளையும், பண்ணை அதிபர்களையும் எதிர்த்துப்போராடி நிலங்கள், பணம் போன்றவற்றைக் கைப்பற்றினர். ‘எப்படிப்பட்ட ஆட்சி அமைப்பது?’ என்ற கேள்வி எழுந்தேபாது, ‘‘பாதை இல்லையென்று கலங்காதே... உருவாக்கு!’’ என்று சொன்ன லெனின், உலகிலேயே முதன்முறையாக தொழிலாளர்கள்பங்குபெறும் கம்யூனிஸ்ட் ஆட்சியை உருவாக்கினார். நிலம், பொருள், பணம், உழைப்பு, மனிதன் என எல்லாமேஅரசின் உடைமையானது. சுதந்திரத்தைவிட மனிதனின் பசிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ரஷ்யப் புரட்சி பெரும் வெற்றி அடைந்தது. 1918-ல் ரஷ்யப் பெண் ஒருத்தியால் சுடப்பட்டு, தப்பி உயிர் பிழைத்த லெனின், உலெகங்கும் கம்யூனிஸ்ட் இயக்கத்தை வளரவைத்து 54-ம் வயதில் மூளை நரம்பு வெடித்து மரணம் அடைந்தார். லெனின் காட்டிய புதிய வழியால் இன்று உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் உரிமைகளுக்காகப் போர்க் குரல் கொடுத்து வருகிறது!

ஹிட்லர் 3

ஹிட்லரின் மரண சாசனம்: ஹிட்லர் இறப்பதுக்கு முன் எழுதிய மரண சாசனத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். *. நாங்கள் இறந்த பிறகு எந்தஜெர்மன் நாட்டு மண்ணுக்காக கடந்த 12 வருடங்களாக பாடுபட்டு வந்தேனோ இந்த ஜெர்மன் மண்ணிலேயே என்னையும் ஈவாவையும் உடனே எரித்து விட வேண்டும். *. என் சொத்துக்கள் எல்லாம் எனக்கு பிறகு என் கட்சிக்கு சேர வேண்டும்.கட்சி அழிந்து விட்டால் நாட்டுக்கு சேர வேண்டும். *. ஜெர்மனி மண்ணின் மீதும், மக்கள் மீதும் நான் கொண்டபற்றும் பாசமும்தான் என்னை வழிநடத்தின .கடந்த 30 ஆண்டுகளாக என் சக்தி முழுவதையும் என் தாய் நாட்டின் மேன்மைக்காக செலவிட்டிருக்கிறேன் . *. இந்தப் போருக்கு நானே மூலகாரணம் என்று யாரும் நினைக்க வேண்டாம்.ஏனென்றால் போர் வெறி கூடாது.ஆயுதக்குறைப்பு செய்ய வேண்டும்,என்று நானே வலிறுத்தி இருக்கிறேன். *. முதல் உலகப்போருக்கு பிறகு இப்படி இரண்டாவது உலகப்போர் மூளும் என்று நான் சற்றும் நினைக்கவில்லை .எப்படியோ போர் மூண்டுவிட்டது. *. இந்தப்போரினால் நம் நாடு சந்தித்த பயங்கர விளைவுகள்,நாசமாக்கப்பட பிரம்மாண்டமான மாளிகைகள்,தரைமட்டமாக்கப்பட்ட கலையம்சம் மிக்க நினைவுச்சின்னங்கள் யாவும் நம் மீது உலக நாடுகள் நடத்திய கோரத்தாக்குதலை நம்முடையபிற்கால சந்ததியினருக்குஉணர்த்திக்கொண்டே இருக்கும். *. இந்த போருக்கு காரணமானவர்களை பார்க்கும் போதெல்லாம் ஒவ்வொரு ஜேர்மனிய இளைஞனுக்கும் உணர்ச்சியும் எழுச்சியும் ஏற்ப்படும். இவ்வாறு இறுதிச் சாசனம் எழுதி கையெழுத்திட்டார் ஹிட்லர். 30 ஆம் திகதி இரவு 9 மணி"இன்று மாலை 4 மணிக்கு இத்தாலிய சர்வதிகாரி முசோலினி யும் அவரது மனைவியும் எதிர்ப்பாளர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர்".என்று சுவீடன் நாட்டு ரேடியோ அறிவித்தது. ரேடியோ செய்தியை ஹிட்லர் நேரடியாக கேட்டார்.முசோலினியின் முடிவு,ஹிட்லருக்கு மிகுந்த வேதனையை உண்டாக்கியது .அன்றிரவு 12 மணி பெர்லின் நகரம் முற்றிலுமாக ரஷியப்படைகள் வசமாகிவிட்டது என்றும் எந்த நேரத்திலும் ,சுரங்க மாளிகை தகர்க்கப்படலாம் என்றும் ,ஹிட்லருக்கு தகவல் கிடைத்தது. ஹிட்லரின் முகம் இருண்டது.மவுனமாக எழுந்து ,தன் தோழர்களுடன் கை குலுக்கினார் .பிறகு தன் அந்தரங்க உதவியாளரை அழைத்து ,"நானும் ஈவாவும் ஒன்றாக இறந்துவிடப்போகிறோம்.நாங்கள் இறந்த பின் எங்கள் உடல்களை ஒரு போர்வையில் சுருட்டி ,பெட்ரோல் ஊற்றி எரித்து சாம்பலாக்கி விடுங்கள்.எங்கள் அறையில் உள்ள கடிதங்கள்,டைரிகள்,என் உடைகள் என் பேனா,கண்ணாடி முதலிய பொருட்களை சேகரித்து ,ஒன்று விடாமல் எரித்து விடுங்கள்"என்று கூறிவிட்டு தன் மனைவியையும் அழைத்து கொண்டு தன் அறைக்கு சென்றார். அறைக்கதவு சாத்தப்பட்டது.வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை.ஹிட்லரும் ,ஈவாவும் என்ன ஆனார்கள் என்று வெளியே இருந்தவர்களுக்கு தெரியவில்லை. வெளியே நீண்ட நேரம் காத்திருந்த மந்திரிகளும் ,தளபதிகளும் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றனர் . அங்கே அவர்கள் கண்ட காட்சி ஒரு சோபாவில் உட்காந்திருந்த நிலையில் ஹிட்லரின் உயிரற்ற உடல் . அவர் காலடியில் ஒரு துப்பாக்கி கிடந்தது.அவர் சற்றுநேரத்துக்கு முன்னர் தன்னைத்தானே சுட்டுக் கொன்றதால் துப்பாக்கி நுனியில் இருந்து புகை வந்து கொண்டிருந்தது.அவரின் வலது காதுக்கு கீழிருந்து இரத்தம் கொட்டிக்கொண்டுஇருந்தது.ஹிட்லரின் வலது கரம ஒரு புகைப்படத்தை மார்போடு அணைத்தபடி இருந்தது.அது ஹிட்லரின் தாயாரின் புகைப்படம். அவருடைய மனைவி ஈவா வெள்ளைப்புள்ளிகளோடு கூடியகருநீல மாக்சி உடை அணிந்து இருந்தால்.அவள் உடல் நீலம் பாய்ந்திருந்தது.எனவே அவள் சைனட் விஷம் சாப்பிட்டிருக்க வேண்டும் என்பது புலனாகியது.இருவரது உடலையும் உதவியாளர்கள் ஒருகம்பளிப்போர்வையில் சுற்றினார்கள்.பின்னர் அந்த உடல்களை தலைமைச் செயலகத் தோட்டத்திற்கு தூக்கிகொண்டு போய் எரித்தார்கள். சிலமணி நேரம் அங்கு வந்த ரஷ்ய படைகள் ஹிட்லரை காணாமல் திகைத்து போனார்கள்.ஹிட்லர் ஈவு இரக்கம் அற்ற கொடியவராக இருந்தாலும் சில நல்ல குணங்களும் இருந்தன.ஹிட்லர் குழந்தைகளிடமும் மிருகங்களிடமும் அன்பு கொண்டவர்.மாமிசம் சாப்பிடமாட்டார்.புகை பிடிக்கமாட்டார். நன்றி