Saturday, January 19, 2013

"தஞ்சை பெரிய கோவில் "



தஞ்சை பெருவுடையார் கோவில் அல்லது பிரகதீசுவரர் ஆலயம் அல்லது தஞ்சை பெரிய கோவில் உலக பாரம்பரிய சின்னமாகும். இக்கோவில் 10ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது.


தமிழகத்தின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தளமான இது 1987ஆம் ஆண்டு UNESCOவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.


1006 ஆம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010ஆம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோவிலுக்கு இந்த ஆண்டு 1003 வயது பூர்த்தியாகின்றது

முக்கியமான கட்டடம் 150 அடி நீளத்துடன் கட்டப்பட்டது. கோயிலின் பிரம்மாண்டமான விமானம் கூர்நுனிக் கோபுரமாக அமைந்து கர்ப்பக்கிரகத்திலிருந்து 190அடி உயரத்துடன் கட்டப்பட்டுள்ளது.


இந்த கோயில் தமிழரின் கலைத்திறமையையும், பாரம்பரியத்தையும் உலகிற்கு சொல்கிறது.


இது 35 உட்கோயில்களை கொண்டது. நான்கு திசைகளிலும் பல இடைவெளிகளுக்கு நடுவே இந்த உட்கோயில்கள் உள்ளன. முக்கிய விமானம் உத்தம் வகையைச் சார்ந்தது. இதை தமிழில் மாடக்கோயில் என்றும் கூறுவதுண்டு.


இக்கோயிலின் கட்டிடக்கலை, சோழர்காலக் கட்டிடக்கலைக்கு நல்ல எடுத்துக்காட்டாகும். இந்த கோயிலில் உள்ள நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இந்த நந்தி 14 மீ உயரம், 7 மீ நீளம், 3 மீ அகலம் கொண்டது.


இக்கோயிலின் சிறப்பு அம்சம் என்னவென்றால் இக்கோயில் கோபுரத்தின் நிழல் எப்போதும் கீழே விழுவதே இல்லை என்பதாகும்!!!!